வேக்ஸிங் பண்ணப் போறீங்களா.. மறக்காம இதைப் படிங்க..!



Sponsored



நிறைய பெண்களுக்கு கை மற்றும் கால்களில் இருக்கும் தேவையில்லாத முடிகளை ரிமூவ் செய்யும் எண்ணம் இருக்கும். டீன்ஏஜ் பெண்கள் மாதத்துக்கு ஒருமுறை முடியை ரிமூவ் செய்துவிட நினைப்பார்கள். அதேநேரம், 'வேக்ஸிங்கா அப்படின்னா என்னப்பா?' என யோசிப்பவர்ளும் உண்டு. அவர்களுக்காகவே வேக்ஸிங் பற்றி விளக்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அதிகப்படியான வேண்டாத ரோமங்களை நீக்கும் முறையையே வேக்ஸிங் என்கிறோம். இது காலம் காலமாகப் பயன்படுத்தும் முறைதான். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக வளர ஆரம்பிக்கும். இந்த வேக்ஸிங்கில் மூன்று வகை உண்டு.

Sponsored


1. திரெட்டிங் மூலம் ரிமூவ் செய்தல்

Sponsored


2. வேக்ஸிங் கிரீம் மூலம் ரிமூவ் செய்தல் 

3. ரேசர் மூலம் ரிமூவ் செய்தல்

இதில் பெரும்பாலானோர் கிரீம் மூலம் ரிமூவ் செய்வதையே விரும்புகிறார்கள். கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு இந்த வகை வேக்ஸ்தான் சிறந்தது. கிரீம் மூலம் வேக்ஸ் செய்வதில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் கோல்டு வேக்ஸ்.

சாதாரணமாக, ஜெல் மூலமாக வேக்ஸ் செய்யும்போது அதனைச் சூடுபடுத்தி கை, கால்களில் அப்ளை செய்ய வேண்டும். ஆனால், இந்த வகை கோல்டு வேக்ஸைப் பயன்படுத்தும்போது சூடுபடுத்த தேவையில்லை. நேரடியாகவே கை, கால்களில் அப்ளை செய்துகொள்ளலாம். வெளியூர் செல்லும் நேரங்களில் கையோடு ஹீட்டரைக் கொண்டுசெல்ல முடியாது. அந்த நேரத்தில், இந்த வகை வேக்ஸ் உதவியாக இருக்கும். கோல்டு வேக்ஸ் செமி சாலிடாக இருப்பதால், பலரும் இதை விரும்புகிறார்கள்.

கோல்டு வேக்ஸ் அப்ளை செய்யும் முறை:

முதலில், சூடான நீரில் காட்டன் துணியை நனைத்து, கையைச் சுத்தம் செய்துகொள்ளவும்.

பின்னர், சாதாரணமாக முகத்துக்குப் பயன்படுத்தும் பவுடரை கையில் தடவிக்கொள்ளவும்.

அதன்மீது, கோல்டு வேக்ஸ் அப்ளை செய்துகொள்ளவும்.

பின்னர், ஸ்டிரைப் பயன்படுத்தி எதிர்புறமாக வேக்ஸை ரிமூவ் செய்யவும்.

இந்த கோல்டு வேக்ஸில் எலுமிச்சை ஜூஸ், குளுக்கோஸ் போன்றவை கலந்துள்ளது. சாதாரண வேக்ஸ் ஜெல்லுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகம்.

ஹாட் வேக்ஸ்:

பெரும்பாலான பியூட்டி பார்லர்களில், ஹாட் வேக்ஸ் பயன்படுத்துவார்கள். இதனைக் கொஞ்சமாக பயன்படுத்தினாலே போதும். சூடுபடுத்தியதுமே உருகிவிடுவதால், கொஞ்சமான அளவு ஜெல்லைப் பயன்படுத்தினால் போதும். இதனை கைகளில் அப்ளை செய்துவிட்டு, ஸ்டிரைப் வைத்து எடுக்க வேண்டும்.

லிப்போசோலபுள் வேக்ஸ் ( liposoluble wax):

 இதில் இரண்டு வகை உண்டு.

1. சின்னச் சின்ன ஸ்டிரைப் வைத்து ரிமூவ் செய்வது

2. வேக்ஸை வைத்தே ரிமூவ் செய்வது.

இந்த வகை வேக்ஸைப் பயன்படுத்துவதால் சிறு சிறு முடிகளையும் ரிமூவ் செய்துவிடலாம். 

பிக்கினி, அன்டர் ஆர்ம் போன்ற மெல்லிசான இடங்களுக்கு ஸ்பெஷல் லிப்போசோலபுள் பிரிஷ்லைன் ( liposoluble priceline )வேக்ஸை பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அது கொஞ்சம் திக்காக இருப்பதால், எளிதில் ரிமூவ் செய்துவிடலாம்.

இதில் சாக்லேட் வேக்ஸூம் இருக்கிறது. இதனை சென்சிட்டிவ் ஸ்கின்னுக்குப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த வகை கடினமாக இருக்காது.

லிப்போசோலபுள் வேக்ஸ் பயன்படுத்தும் முறை:

ஈரமான கிளாத் மற்றும் டிரை கிளாத் மூலம் கைகளைச் சுத்தம் செய்துகொள்ளவும்.

பின்னர், ஃப்ரீ வேக்ஸ் ஜெல்லை கைகளில் அப்ளை செய்துகொள்ளவும்.

அதன்பின், சிறு சிறு ஸ்டிரிப்பாக ரிமூவ் செய்யவும்.

இந்த வகை வேக்ஸிங்கையே பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில். இதில் பல ஃப்ளேவர்கள் உள்ளன.

குறிப்பு:

ஸ்டிரைப் செய்யும்போது, மிகவும் ஸ்டிராங்காக செய்யாதீர்கள். கைகளில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. 

வேக்ஸ் தேர்வு: 

டிரை ஸ்கின் - சாக்லேட், ஸ்டாபெர்ரி

மிகவும் டிரை ஸ்கின் - கோக்கோனெட், ஆலிவ் ஆயில்

சென்சிட்டிவ் - தேன், மில்க், ஆலோவேரா, கிரீன் ஆப்பிள்

அன்டர் ஆர்ம், பிகினி - பிரேசிலியன் வேக்ஸ்

லக்‌சரி ( luxury) - கோல்டு, பியர்ல் 

ரிலாக்ஸிங் - டால்கம்

எச்சரிக்கை: 

வேக்ஸை நீங்களே செய்துகொள்ளாமல், புரொபஷனல்கிட்ட கத்துக்கிட்டு பண்ணனும்.  

முகத்துக்கு தனி வேக்ஸ் இருக்கு. ஆனால், நார்மலா ஃபேஸ் வாக்ஸ் பண்ணவே கூடாது.

உடம்புக்கு போடுறதை முகத்துக்குப் போடக்கூடாது. சென்சிட்டிவ் ஸ்கின்னுக்கு என இருக்கும் வேக்ஸைப் பயன்படுத்தணும்.



Trending Articles

Sponsored