'கொஞ்சும் நாய்கள், கொலையும் செய்யும்'... உலகை அதிரவைத்த பிட்புல் இன நாய்!Sponsoredவீடுகளில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் முக்கியமானது நாய். குடும்பத்தில் ஒருவராகவே பல வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் நாய்கள்குறித்த ஒரு கதை நிச்சயம் இருக்கும். ஏனெனில், நாய்கள் குறித்த நிகழ்வுகள் எல்லாம் நெகிழவைப்பவை. சில மட்டுமே பதற வைப்பவை அதிலொன்றுதான் இந்த சம்பவம். 

அமெரிக்காவின் கோகிலேன்ட் வர்ஜீனியா மாகாணத்தில், பெத்தானி ஸ்டீஃபன்ஸ் என்ற 22 வயதுடைய பெண் வசித்துவருகிறார். அவர் அங்கிருக்கிற போக்ஸ்மோர் என்கிற குதிரை இனவிருத்தி செய்யும் ஒரு பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் இரண்டு பிட்புல் வகை நாய்களை வளர்த்துவந்தார். அவற்றுக்கு முறையே டோங்கா மற்றும் போக்மென் எனப் பெயரிட்டிருந்தார்.

டிசம்பர் 12-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பெத்தானி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி வுட்லாண்ட் என்கிற இடத்தில் பெத்தானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. முக்கியமாக, முகம் மற்றும் கழுத்துப்பகுதி சிதைந்த நிலையில் இருந்தது. உடல் கைப்பற்றப்பட்ட அன்றைய நாளில் பெத்தானியின் இறப்புகுறித்து எந்த அறிவிப்பையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.

Sponsored


Sponsored


பெத்தானியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வற்புறுத்தலின் பெயரில் பெத்தானி இறந்த நான்கு நாள்கள் கழித்து வெர்ஜீனியா காவல்துறை, இறப்புகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. அதில், இறப்பு குறித்து சொல்லப்பட்ட தகவல் 'பகீர்' ரகமாக இருந்தது.  அதாவது, பெத்தானி இறப்பு திட்டமிட்டோ, மனிதர்களாலோ நடந்தது அல்ல. அவருடைய இரண்டு நாய்களுமே பெத்தானியை கொன்றிருக்கின்றன. நகர ஷெரிப்  ஜேம்ஸ் அக்னியூ கூறும்போது ”உடல் கைப்பற்றப்பட்ட அன்று பெத்தானியின் இடுப்புப் பகுதியை அவருடைய இரண்டு நாய்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அதை நானும் என்னுடைய மற்ற அதிகாரிகளும் நேரடியாகப் பார்க்க நேரிட்டது.  இறந்த பெத்தானியின் குடும்பத்தை மனதில் வைத்தே இந்த இறப்பு குறித்து அறிவிக்காமல் இருந்தோம். ஆனால், அதன்பிறகான தொலைபேசி அழைப்புகள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தோம்” என்றார். 

புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப்  போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு  அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை. 

1996-ம் ஆண்டு பிட்புல் குறித்த பயத்தைப் போக்குவதற்கும் அதை வீடுகளில் வளர்க்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்த 'San Francisco Society for the Prevention of Cruelty to Animals' என்கிற அமைப்பு, பிட்புல் என்கிற பெயரை செட் பிரான்சிஸ் டெர்ரிஸ் எனப் பெயர் மாற்றியது. பெயர்மாற்றப்பட்ட பிறகான காலத்தில் 60-க்கும் அதிகமான பிட்புல் நாய்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் பூனைகளைக் கொன்றுவிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டதால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. 2004-ம் ஆண்டு நியூயார்க்கில் செயல்படும் 'Center for Animal Care and Control' என்கிற அமைப்பு பிட்புல்லின் பெயரை நியூ யார்கிஷ் என மாற்ற முயற்சி செய்தது. ஆனால், மக்களின் எதிர்ப்பால் அதுவும் கைவிடப்பட்டது. 

இங்கிலாந்திலும் வேல்ஸ்லிலும் 'டேஞ்சரஸ் டாக்ஸ்' என்னும்  சட்டம் அமெரிக்க பிட்புல் டெரியர்ஸின் உரிமையையும், மற்ற மூன்று இனங்களையும் சேர்த்து தடைசெய்தது. இந்த நாய்களின் இனப்பெருக்கம், விற்பனை மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றையும்  தடைசெய்திருக்கிறது. இது மட்டுமல்லாது ஐந்து சர்வதேச விமானநிறுவனங்கள் பிட்புல் நாய்களை விமானத்தில் கொண்டு செல்லத் தடைவிதித்திருக்கின்றன. பாதுகாப்பு கருதியே பிட்புல் நாய்களைத் தடை செய்திருப்பதாக எல்லா நிறுவனங்களும் கூறியிருக்கின்றன. 

கொல்லப்பட்ட பெத்தானி ஸ்டிபனுடைய தோழி பிட்புல் நாய்கள் பற்றி கூறியது “கொலை செய்கிற அளவுக்கு அவை மோசமான நாய்கள் அல்ல; அவை, முத்தங்களால் நம்மை கொல்லக்கூடியவை” என்றார். எதற்காக நாய்கள் பெத்தானியைக் கொன்றன என்கிற விசாரணை நடந்துவருகிறது. 
 Trending Articles

Sponsored