ஐ.பி.எல் ஏலத்தில் கோலி, தோனியைப் பின்னுக்குத் தள்ளிய அந்த நபர்..! #GoogleTrendsSponsoredப்ரீத்தியின் க்யூட்... சி.எஸ்.கேவின் கம்பேக்... மேட்லியின் ஹாமர் ஹிட் எனக் களைகட்டிய ஐபிஎல் ஏலத்தின் ஒவ்வொரு நொடியும் வைரல்தான். அட அந்த ப்ளேயர்ஸ விடுங்கப்பா... ப்ரீத்தி ஜிந்தா ஏலம் கேக்குற அழகுக்கே டிவி பார்க்கலாம்னு ரெண்டு நாள் நடந்த ஏலம் பற்றி நெட்டிசன்கள் தேடியதுதான் இணையத்தின் ட்ரெண்ட் ஆஃப் தி டேவாக இருந்தது. 

கூகுள் தேடலில் இடம்பிடித்த ஐபிஎல் ஏலத்தின் சுவாரஸ்யங்கள்:

Sponsored


ஐபிஎல் ஏலம் குறித்த கூகுளின் உலகத் தேடலில் 71 நாடுகளில் தேடியுள்ளனர். இதில் முதலிடத்தில் நேபாளம் உள்ளது. இதற்குக் காரணம் நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லாமிச்சான் எனும் 17 வயது வீரர் ஏலத்துக்கு எடுக்கப்பட்டதுதான். நேபாள கிரிக்கெட்டுக்கான முதல் அங்கீகாரம் என்பதால் அந்த நாடு அதிக அளவில் ஐபிஎல் குறித்த தேடலில் இடம்பிடித்துள்ளது. 

Sponsored


இந்திய அளவிலான தேடலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. சி.எஸ்.கேவின் கம்பேக்கை இந்தியாவே கொண்டாடியது என்றால் தமிழகம் பற்றி சொல்லவா வேண்டும். தமிழகத்தில் ஐபிஎல் ஏலம் அதிகம் கவனிக்கப்பட்ட இடம் தஞ்சாவூர்.

ஐபிஎல் ஏலம் குறித்த தேடலில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளாக கலீல் அஹ்மத், ராகுல் சாஹர், நாராயண் ஜெகதீஷன் ஆகியோரது பெயர்கள் உள்ளன. கோலி, தோனி என ஸ்டார் ரேஸில் இருக்கும் போது இளம் வீரர்கள் பக்கம் இணையத்தின் கவனம் இருந்தது. ஏலத்தில் விலை போகாத வீரர்களைக் குறித்தும் அதிகம் தேடியுள்ளனர். 

கூகுள் இமேஜ் தேடலில் இடம்பிடித்தது இளம் வீரர்களோ, பெயர் தெரியாத வெளிநாட்டு வீரர்களோ அல்ல... ஐபிஎல் ஏலத்தின் இரண்டு நாள்களையும் அழகாய் தனது க்யூட் ரீயாக்‌ஷன்களால் வியக்கவைத்த ப்ரீத்தி ஜிந்தாதான். ஐபிஎல் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தா என மீம் டெம்ப்ளேட்டுகளுக்கு போட்டோ தேடியவர்கள்தாம் அதிகம். 

யூ-ட்யூப் தேடலில் ஷபூர் சர்தான், மார்க் வுட், ஜெயதேவ் உனக்டட் என புதுமுக வீரர்கள் குறித்த வீடியோ அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.

ட்விட்டரின் இந்தியா ட்ரெண்டிலும் #IPLAuction2018 ஹிட் அடித்துள்ளது. Trending Articles

Sponsored