குழந்தைகளின் குரலை அலட்சியம் செய்யலாமா? - ஒரு நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStorySponsored`வேலையில்லையா வீட்டில்தான் இருப்பேன். குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடவே நான் விரும்புகிறேன்’ - ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் தெலுங்குத் திரைப்பட உலகின் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. நம்மில் பெரும்பாலானோர் வீட்டையும் பார்க்கும் வேலையையும் பேலன்ஸ் செய்யத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறோம். நம்மில் பலரும் பணம், தான் சார்ந்திருக்கும் துறையில் புகழ், சமூக அந்தஸ்து என எதன் பின்னாலேயோ ஓடுகிறோம்... குடும்பத்தை, உறவை மறந்தவர்களாக! ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்தால், முதுமை நெருங்கிவிட்டிருக்கும்... நட்பை, உறவை, நல்ல தருணங்களை எனப் பல முக்கியமானவற்றை இழந்திருப்போம். ஆக, எதற்கு, யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. நமக்குப் பிடித்தமானவர்களோடு அதிக நேரத்தைச் செலவிடவேண்டியது மிக மிக அவசியம்.  குடும்பத்தோடும், உறவுகளோடும் ஆழ்ந்த பிணைப்போடு இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்தக் கதை. 

இங்கிலாந்தில் மான்செஸ்டர் (Manchester) நகரிலிருக்கும் ஒரு பூங்கா அது. மாலை நேரம். குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார் அந்தப் பெண். அந்தப் பெண்ணின் மகன் ஒரு பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தான். குழந்தைகள் ஒருவரையொருவர் துரத்தி விளையாடுவது, ஊஞ்சலில் ஆடுவது, பார் கம்பியில் ஏறுவது... என அந்த இடமே குதூகலமாக இருந்தது. அந்தப் பெண்ணின் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். இருவரும் பரஸ்பரம் `ஹலோ...’ சொல்லிக்கொண்டார்கள். 

Sponsored


``அதோ... அங்கே விளையாடுறானே... அவன்தான் என் பையன்’’ என்று ஒரு சிறுவனைச் சுட்டிக்காட்டினார் அந்தப் பெண்மணி

Sponsored


``குட். சுறுசுறுப்பா இருக்கானே...’’ என்றவர், ``அதோ அங்கே மஞ்ச கலர் கவுன் போட்டு, பபுள்ஸ் விட்டுக்கிட்டு இருக்காளே... அவதான் என் பொண்ணு...’’ என்று தன் மகளைக் காட்டினார். 

``ஸ்வீட் கேர்ள்...’’ 

பிறகு இருவரும் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். அவர் தன் மகள் விளையாடுவதையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி ஒரு பத்திரிகையை எடுத்து விரித்துவைத்துக்கொண்டார். அரை மணி நேரம் கழிந்தது. 

அவர் தன் வாட்ச்சைப் பார்த்தார். பிறகு தன் மகளை அழைத்தார்... ``எலிஸா... கெளம்பலாமா?’’ 

அந்தச் சிறுமி அவரின் அருகே ஓடி வந்தாள். ``அப்பா... அப்பா... இன்னும் அஞ்சே நிமிஷம்ப்பா. ப்ளீஸ்பா...’’ என்றாள். 

அவர் சிரித்தபடி தலையசைக்க, அந்தப் பெண் திரும்பவும் விளையாட ஓடினாள். மேலும் 20 நிமிடங்கள் கழிந்தன. இப்போது அவர் எழுந்து நின்றார். 

``எலிஸா... டைமாகிடுச்சு. வா, போகலாம்.’’ 

அந்தக் குட்டிப் பெண், அப்பாவிடம் ஓடி வந்தாள். ``இன்னும் அஞ்சே நிமிஷம்ப்பா... ஜாலியா இருக்குப்பா... ப்ளீஸ்ப்பா.’’ 

அவர் `சரி’ என்பதுபோலத் தலையை அசைக்க, ``தேங்க்ஸ்பா...’’ என்று சொல்லிவிட்டு அவள் விளையாட ஓடினாள். 

அவர் மீண்டும் பெஞ்சில் அமர்ந்துகொண்டார். அந்தப் பெண்மணி இப்போது சொன்னார்... ``நீங்க உண்மையிலேயே ரொம்ப பொறுமைசாலி.’’ 

அவர் இதைக் கேட்டு மென்மையாகச் சொன்னார்... ``இங்கே பக்கத்துலதான் எங்க வீடிருக்கு. இவளோட அண்ணன் தாமஸ் போன வருஷம் ஒரு பைக் ஓட்டிக்கிட்டிருந்தான். ஒரு ட்ரக் மோதி ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு. அந்த ட்ரக் டிரைவர் குடிச்சிருந்தான். என் மகன் ஸ்பாட்லயே இறந்துட்டான். அவனோட நான் அதிகமா நேரத்தைச் செலவழிச்சதே கிடையாது. இப்போ அவன் இருக்கக் கூடாதா... ஒரு அஞ்சு நிமிஷம் அவன்கூட இருந்தாக்கூடப் போதும்னு இருக்கு. அதுக்காக எதையும் கொடுக்கறதுக்கு நான் தயாராக இருக்கேன். ஆனா, அது நடக்கப் போறதில்லை. அதே தப்பை நான் எலிஸாவுக்கும் செய்யக் கூடாதில்லையா? என் பொண்ணு, `கூடுதலா அஞ்சு நிமிஷம் விளையாடறோமே’னு நினைச்சுக்கிட்டு இருக்கா. உண்மை அது இல்லை. அவ விளையாடுறதை இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு நான் ரசிக்கிறேன். அவ்வளவுதான்...’’ 

***  Trending Articles

Sponsored