சசிகுமாரின் அசுரவதம் படத்தின் டிரெய்லர் வெளியீடு!Sponsored'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்திருக்கும் படம் 'அசுரவதம்'. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தை இயக்கிய மருதுபாண்டியன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கிறார். நடிகர் சசிகுமார் ட்விட்டரில் இன்று இப்படத்தின்  டிரெய்லரை வெளியிட்டார். கத்தி, அரிவாள், முறுக்கு மீசை, வேட்டி சட்டை என கிராமத்து சாயல் கதைகளில் நடித்து வந்த சசிகுமார் இப்படத்தில் புதிய லுக்கில் வெளிப்படுகிறார். வரும் ஏப்ரம் 13-ம் தேதி உலகெங்கும் இத்திரைப்படம்  வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே கடந்த 8-ம் தேதி டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored