உதவி கேட்டு வரும் உறவினரை அணுகுவது எப்படி? - உறவின் மேன்மை சொல்லும் கதை! #FeelGoodStorySponsored`நீங்கள் ஒருபோதும் எனக்கு மேலானவரல்ல; கீழானவரும் அல்ல. எப்போதும் என் அருகிலேயே இருப்பவர்’ - அமெரிக்கப் பத்திரிகையாளர் வால்டர் வின்செல் (Walter Winchell) உறவுக்குப் புது விளக்கம் தந்திருக்கிறார். பல வருடங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம், பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்னல் என்று வரும்போது உறவுக்குக் கைகொடுப்பதுதான் அழகு, நேசம், மனிதாபிமானமும்கூட. இது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு மனிதனின் வாழ்க்கை முன்னேற்றம், பல உறவுகளுக்கு அதிருப்தியையும் அசூயையையும் ஏற்படுத்தும். நல்ல நிலையில் வாழும் ஒரு மனிதர்... அவரிடம் உதவி கேட்டுப் போகும் இன்னொருவன்... `இல்லை’ என்ற வார்த்தை வந்துவிட்டால், அந்த கணத்திலிருந்து உறவு அறுந்துபோகும். பகையும் வன்மமும் வளரும்.  காரண, காரியங்களைக்கூட யோசிக்கத் தோன்றாது. இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், எப்படிச் சமாளிக்கலாம் என்று சொல்லித் தருகிறது இந்தக் கதை. 

Sponsored


ஸ்வீடனிலிருக்கும் எஸ்கில்ஸ்டுனா (Eskilstuna) நகரம். அங்கே நகைக்கடை அதிபர் ஒருவர் இருந்தார். திடீரென ஒருநாள் மாரடைப்பு வந்து இறந்துபோனார். அவருடைய இறப்புக்குப் பிறகுதான் அவருடைய உண்மையான நிலைமை தெரியவந்தது. அவர் அத்தனை வருடமும் சம்பாதித்து வைத்திருந்தது பணத்தை அல்ல, கடனை. நகைக்கடை உட்பட அவரின் சொத்துகள் முழுவதும் பறிபோயின. அந்தக் குடும்பம் நடுத்தெருவில் நிற்காத குறை. நகைக்கடை அதிபருக்கு ஒரே ஒரு மகன். சாப்பாட்டுக்கே பிரச்னை எனும் நிலைமையும் அந்தக் குடும்பத்துக்கு வந்தது. 

Sponsored


நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை அழைத்தார். நீலக்கல் (Sapphire) பதித்த ஒரு நெக்லஸை அவனிடம் கொடுத்தார். ``இது உன் அப்பா ரொம்ப ஆசையா எனக்கு வாங்கிக் கொடுத்த நெக்லஸ். இதைக் கொண்டுபோய் உன் சித்தப்பாகிட்ட கொடுத்துட்டு இதுக்கு என்ன பணம் கிடைக்குமோ அதை வாங்கிட்டு வா...’’ என்று சொன்னார். 

நகைக்கடை அதிபரின் தம்பியும், அதே ஊரில் ஒரு நகைக்கடை வைத்திருந்தார். அம்மாவின் வார்த்தையைத் தட்ட முடியாத மகன், சித்தப்பாவின் கடைக்குப் போனான். அவரிடம் நெக்லஸை நீட்டினான். விஷயத்தைச் சொன்னான். 


அவனுடைய சித்தப்பா, நெக்லஸை வெகு கவனமாக ஆராய்ந்தார். பிறகு சொன்னார்... ``மகனே... உன் அம்மாகிட்ட போய் இப்போ மார்க்கெட் நிலவரம் நல்லா இல்லைனு சொல்லு. கொஞ்ச நாள் காத்திருந்து இதை வித்தா நல்ல விலை கிடைக்கும்.’’ 

அவன் யோசனையோடு சித்தப்பாவைப் பார்த்தான். `இன்றைய செலவுக்கு என்ன செய்வது?’ அவர் அத்தோடு விடவில்லை. அவன் வீட்டுச் செலவுக்கு கணிசமாக ஒரு தொகையைக் கொடுத்தார். அடுத்த நாளிலிருந்து, அவர் கடைக்கு வந்து நகைத்தொழிலைக் கற்றுக்கொள்ளச் சொன்னார். அதன் மூலம் அவன் குடும்பத்துக்கும் ஒரு வருவாய் கிடைக்கும் என அறிவுறுத்தினார். அந்தப் பையன் மகிழ்ச்சியோடு திரும்பிப் போனான். 

மறுநாளிலிருந்து சித்தப்பாவின் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.  விலையுயர்ந்த நகைகளையும், கற்களையும் எடைபோடவும், அதன் மதிப்பைத் தெரிந்துகொள்ளவும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகினான். அந்தத் தொழிலில் வெகுவாகக் கைதேர்ந்தவனானான். நகையின் மதிப்பை அறியவும், வைரம் உள்ளிட்ட கற்களின் எடைபோடவும் அவனைத் தேடி அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வர ஆரம்பித்தார்கள். அவன் புகழ் மெள்ள மெள்ள வளர்ந்துகொண்டே இருந்தது. 

ஒருநாள் சித்தப்பா அவனை அழைத்தார். ``மகனே... போய் உன் அம்மாகிட்ட சொல்லு. `மார்க்கெட் நல்லா இருக்கு. இப்போ அந்த நெக்லஸை வித்தா நல்ல விலைக்குப் போகும்’னு. நாளைக்கு மறக்காம அந்த நெக்லஸை எடுத்துட்டு வா...’’ 

அவன் அன்று இரவு வீடு திரும்பியதும், முதல் காரியமாக அம்மாவின் நீலக்கல் நெக்லஸை எடுத்துப் பார்த்தான். சோதித்தான். அதிர்ந்து போனான். அந்த நெக்லஸில் இருந்தது விலையுயர்ந்த கல் அல்ல, போலி. 

அடுத்த நாள் அவன் சித்தப்பாவின் கடைக்கு வந்தான். ``நெக்லஸ் கொண்டு வந்தியா?’’ என்று கேட்டார் சித்தப்பா. 

``இல்லை.’’ 

``ஏன்?’’ 

``அதுல இருந்தது போலிக்கல். பத்து பைசாவுக்குப் பெயராது.’’ 


சற்று நேரம் இருவருக்குமிடையே அமைதி நிலவியது. பிறகு பையன் கேட்டான்... ``நான் அன்னிக்கி இந்த நெக்லஸைக் கொண்டு வந்தப்போ, `இப்போ மார்க்கெட் நிலவரம் நல்லா இல்லை. கொஞ்ச நாள் காத்திருந்து இதை வித்தா நல்ல விலை கிடைக்கும்’னு ஏன் சொன்னீங்க?’’ 

``இதை அன்னிக்கிக் கொண்டு வந்தப்போ நீ உடைஞ்சு போயிருந்தே. உனக்குப் பணம் தேவையா இருந்துது. அந்த நேரத்துல `இது போலி’னு நான் சொல்லியிருந்தா, நான் பொய் சொல்றேன்னு நீ நினைச்சிருப்பே. உன்னோட வீட்டு நிலைமை சரியில்லைனு தெரிஞ்சதாலதான் போலி நகையை, நல்ல நகைனு நான் சொன்னேன். இப்போ உனக்கு இதுல நல்ல அனுபவம் வந்துருச்சு. உனக்கே இது போலினு தெரிஞ்சிடுச்சு. அதுனாலதான், இதைக் கொண்டுவரச் சொன்னேன்...’’ Trending Articles

Sponsored