தொழில் போட்டியில் கொஞ்சமும் சளைக்காத தமிழக நிறுவனம்! (Sponsored Content)Sponsored1977 - இந்திய வரலாற்றையே புரட்டிப்போட்ட வருடமாகும். இந்திரா காந்தி ஆட்சியின் எமர்ஜென்சியினால் நாடே கொதித்துப் போயிருந்த தருணம் அது. அவசரகால பிரகடனத்துக்குப் பின் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் அதுவரை சரித்திரம் பார்த்திராத முதல் தோல்வியைச் சந்தித்தது; மத்தியில் ஜனதா கட்சி  ஆட்சியமைத்தது. விவசாயத்துக்கும் ஊரகத் தொழில் வளர்ச்சிக்கும் முக்கியமளிக்கும் வகையில், புதிய ஜனதா அரசு பொருளாதார கொள்கைகளை ஏற்படுத்தியது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியைத் தர, முடிவாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டே வெளியேறின!

வெளிநாட்டு நிறுவனங்கள் விட்டுச் சென்ற அந்த வெற்றிடம், பல புதிய இந்திய நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கியது. மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அவை செயல்படவும் ஆரம்பித்தன. அவ்வாறான  காலகட்டத்தில் உழைப்பால் உயர்ந்து, மக்களின் மனங்களைத் தொட்ட ஒரு உள்ளூர் குளிர்பான நிறுவனம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொள்வது முக்கியம். எண்பது மற்றும் தொண்ணூறுகளில் தமிழகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய பானம் ​​'டொரினோ'. திருவிழாக்கள், திருமணம், நிச்சயதார்த்தம் நடைபெறும் மங்கள வீடுகள், சினிமா கொட்டகைகள், பேருந்து நிறுத்தங்கள்... இப்படி மக்கள் குழுமும் இடங்களிலெல்லாம் ஆரஞ்சு வண்ண ​​'டொரினோ' அமர்க்களமாக விற்பனையானது.

Sponsored


டொரினோவுடன் சேர்ந்து பல உள்நாட்டு குளிர்பானங்களும் இதே நேரத்தில் வளர்ச்சியடைந்திருந்தன. கிட்டத்தட்ட 20 வருடங்களாக செழிப்பான வியாபாரத்தை அனுபவித்து வந்த நம் நிறுவனங்களுக்கு எண்பதுகளின் முடிவிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் மிகப்பெரிய சவால் ஒன்று காத்திருந்தது - அதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் மீள் வருகை! வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடோ மிகப்பெரியது, நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் அவர்களின் தயாரிப்புகளை கண் இமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்யும் அசுர பலத்தை அவைப் பெற்றிருந்தன. இடையறாத விளம்பரங்கள் மூலம் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பக்கம் ஈர்க்கவும் செய்தன. இதன் தொடர்ச்சியாய் உள்நாட்டு நிறுவனங்கள். வணிகத்தில் பலத்த அடியை சந்தித்தன. சில நிறுவனங்கள். இந்தச் சுழலில் சிக்கி சின்னாபின்னமா​யின; தடயமின்றி மறைந்தும்போயின! ஆனால் 'டொரினோ' போன்ற மிகச் சில நிறுவனங்கள் மட்டும் தங்களின் பெருவாரியான விற்பனை விகிதத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பறிகொடுத்துவிட்ட நிலையிலும், இன்றுவரை சற்றும் சளைக்காமல் அரும்பாடுபட்டு, வணிகத்தில் ஈடுபட்டுவருகின்றன.

Sponsored


'டொரினோ'வில் பயன்படும் நீரின் சுத்திகரிப்பு முறை கால்சியம், மெக்னீசியம் போன்ற மினரல்களைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதால், அது உடலுக்கு நன்மை விளைவிப்பதாய் இரு​க்கிறது.​ இன்றும்  'டொரினோ' அதே சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்​தி வருகிறது. வெறும் கார்பனேட்டட் கோலாக்களுக்கு மத்தியில், மக்கள் உடல்நலனிலும் அக்கறை செலுத்தும் 'டொரினோ', அதன் பானங்களில் மிகக் குறைந்த அளவிலான வாயுவை மட்டுமே பயன்படுத்துகிறது.

நல்ல தயாரிப்புகளுக்கு என்றுமே மக்களின் ஆதரவு உண்டு. இதுவே 'டொரினோ' போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்காமல் இன்றுவரை செயல்பட்டுவரக் காரணம். நாம் யார் என்ற புரிதல் இருந்தாலேபோதும், நம் அடையாளங்கள் நிலைத்து நிற்கும். நம் மண்ணின் நிறுவனங்களும் செழிப்பாக வர்த்தகத்தில் செயல்பட முடியும். 

பொருளாதார, சமூக மாற்ற, வணிக ரீதியான சவால்களையும் தாண்டி​​ ​​'டொரினோ' நிறுவனம், தங்களுடைய தயாரிப்புகளை மீண்டும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணத்தில் தற்போது இறங்கியுள்ளது.  'டொரினோ' முன்புபோல தமிழ் மக்களின் தாகத்தைத் தீர்த்து. வணிக உலகத்தில் முத்திரைப் பதிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம். நம் மக்களின் தொழில்களுக்கு நம்மைவிட்டால் யார் ஆதரவளிப்பது? விடை நம்மிடமே உள்ளது.

Trade Enquiry: 9843437152 & 0452-4285323.

http://drinktorino.com/Trending Articles

Sponsored