"சேவையின் தரம்தான் லாபத்தின் சாவி"; டயர் விற்பனை = முன்னேற்றம்!!! - Exclusive dealSponsored​40 வருடங்களுக்கு முன்பெல்லாம் சாலைகளில் அத்தி பூத்த மாதிரி எப்போதாவதுதான் கார்களைப் பார்க்க முடியும். நகரங்களில் ஐந்து ஆறு... கிராமங்களிலோ கார் ஒன்று வந்தால், சூப்பர் ஸ்டார் வந்த மாதிரி ஊரே அமர்க்களமாகிவிடும்! ஆனால் இன்று காரில் செல்வது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. எளிமையாகக் கிடைக்கும் வங்கிக் கடன்கள், இ.எம்.ஐ வசதி, சொகுசு வாகனத்தின் தேவை காரணமாக அதிகரித்துள்ள தயாரிப்பு, இதனால் ஏற்பட்டுள்ள விலைக்குறைவு... இவையெல்லாம் கார் ஸ்டியரிங் சுலபமாக நம் கைகளுக்கு எட்ட உதவியிருக்கின்றன. தயாரிப்பு பெருகுவதால், கார் சம்பந்தப்பட்ட தொழில்களும் ​வளர்ச்சியடைந்துள்ளன. இதில் முக்கியமான ஒரு பிரிவு ‘டயர் விற்பனை’.

நாளுக்குநாள் பெருகிவரும் டயர் விற்பனை மற்றும் பராமரிப்பு சம்பந்தமான தொழில் வாய்ப்புகள் குறித்தும், இதன் வளர்ச்சி மற்றும் போக்கு குறித்தும், ‘சுந்தர் டயர்ஸ்’ நிறுவன உரிமையாளர் திரு கே.எஸ்.பி.சுந்தரவேல் கூறுகிறார், 

Sponsored


2018-ம் வருடத்தில் கிட்டத்தட்ட 7% வளர்ச்சியை டயர் துறை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அமலாக்கம் இந்த நிதியாண்டின் முதல் பாதியில் பலதரப்பட்ட வணிகங்களில் சுணக்கத்தை ஏற்படுத்தினாலும்,  இரண்டாம் பாதியில் வளர்ச்சி அதிகரித்துவருகிறது. இது, 2019-ல் மேலும் அதிகரிக்கவே செய்யும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொழில்களின் மீட்சியும் நமக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக உள்ளது.

Sponsored


உங்களின் பிரான்ச்சைஸ் முறை பற்றிக் கூறுங்கள்...

ஆட்டோமோட்டிவ் சம்பந்தப்பட்ட துறைகளில் டயர் விற்பனை மிக முக்கியமானது. பலருக்கும், இதுபோன்ற  வாகன உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில்களைச் செய்ய விருப்பம் இருந்தாலும், அதுபற்றிய தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால், ரிஸ்க் எடுப்பதில்லை. இவர்களுக்கு உதவவும், இந்த வர்த்தகத்தில் உள்ள வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டும் பிரான்ச்சைஸ் முறையை சுந்தர் டயர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் கற்ற தொழில் பிறர் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும், இதுதான் அனைவரும் ஒருசேர முன்னேறும் வழி.

சுந்தர் டயர்ஸின் பிரான்ச்சைஸ் ஒன்றை ஆரம்பிக்க, இடத்துக்குத் தகுந்தாற்போல முதலீடும் மாறுபடுகிறது. சென்னையில் ஒரு கிளையைத் துவங்க ஒன்றரை கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கோவை, மதுரை, திருச்சி போன்ற சீராக வளர்ந்துவரும் நகரங்களுக்கு இந்த முதலீடு, சென்னையைவிடக் குறைவாகவே இருக்கும். ஆனால், டையெர் 3 நகரங்கள் (Tier 3 Cities) என அழைக்கப்படும் தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தூர், நாகர்கோயில், அருப்புக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் போன்ற ஊர்கள் டயர் தொழில் செய்வதற்குச் சிறந்த இடங்களாகும். பாண்டிச்சேரி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற வட தமிழக ஊர்களிலும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

டையெர் 3 நகரங்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

பெரு நகரங்களை ஒப்பிடும்போது தொழில் போட்டி இங்கு குறைவு, ஆனால், டயர்களுக்கான தேவைவரும் காலங்களில் வெகுவாக இங்கு அதிகரிக்கக்கூடும். இந்தச் சந்தை தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள இப்போதே அப்பகுதிகளில் நம் வியாபாரத்தைத் துவங்குவதே சிறந்த யுக்தியாகும்.

பிரான்ச்சைஸ் முறையில் என்னென்ன சேவைகளை சுந்தர் டயர்ஸ் வழங்குகிறது?

பிரான்ச்சைஸ் கிளை துவங்குவதில், முதலீட்டாளர்களுக்கு 4 கட்டங்களில் உதவி தேவைப்படுகிறது. முதலில் இட வசதி. வாகனங்கள் சுலபமாக வந்துபோகும் இடமாகக் கடை வைப்பது முக்கியம். கட்டுமானத்தில் உதவி-இரண்டாம் கட்டம். மூன்றாவது சந்தைப்படுத்துதல் அல்லது மார்க்கெட்டிங். நான்காவது கட்டம் மிக முக்கியம்-‘பயிற்சி’. இந்த நான்கு கட்டங்களிலும் சுந்தர் டயர்ஸ் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு உதவி செய்யும்.

முதலீடு செய்து, இடம் உறுதியானபின், திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பணிகள் முடிவடைய 3 மாதங்கள் ஆகும். இந்தக் கால இடைவெளியில் எங்களின் பிற கிளைகளில் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பயிற்சிகளும் பிரான்ச்சைஸ் பார்ட்னர்களுக்கு வழங்கப்படும்.

லாபம் எப்படி?

வியாபாரத்தில் மும்முரமாக இருந்தால், வருமானம் மற்றும் செலவு, இரண்டும் சமமாகும் ‘பிரேக் ஈவென்  பாயின்ட்’டை ஒரே வருடத்தில் எட்டிவிடலாம். 4  வருடங்களில் நம் முதலீடு கைக்கு வந்துவிடுகிறது, லாபமும் கணிசமாகக் கிடைக்கிறது.

டயர் விற்பனை மட்டுமின்றி, வீல் அலைன்மென்ட், பேலன்சிங், ஃபிட்டிங் மற்றும் வாட்டர் சர்வீஸ் போன்ற சேவைகளையும் ஒருசேரச் செய்வதால், வியாபாரத்தில் நாம் காட்டும் சிரத்தையும் திறனும்தான் தொழில் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. சொல்லப்போனால், நம் சேவையின் தரம்தான் லாபத்தின் சாவி!​
​​
சுந்தர் டயர்ஸ் பிரான்ச்சைஸ் ​கிளை பற்றிய தகவல்களுக்கு, அணுகவும்:  கே.எஸ்.பி.சுந்தரவேல், +91 98947 00611.

​​ விகடன்​ வாசகர்களுக்குச் சிறப்பு ​சலுகையாக, சுந்தர் டயர்ஸில் ‘வீல் அலைன்மென்ட்’டுக்கு 50% தள்ளுபடியும் உள்ளது! இந்தச் சலுகையைப் பெற  கீழே உள்ள  படிவத்தை பூர்த்தி செய்க...   Trending Articles

Sponsored