ஒரே ரூபாயில் ஒருவரின் பசியைத் தீர்க்க முடியுமா? முடியும்! (Sponsored Content)Sponsoredநீங்கள் இப்பதிவைப் படித்து முடிக்கும்போது, ஐந்தில் ஒரு இந்தியர் உணவு இல்லாமல் இறந்துபோவார்! இது ஏதோ அதிர்ச்சியான தீர்க்கதரிசனம் அல்ல... தொடரவும்...

பசி நோயால் நொந்துபோய், அடுத்த வேலை யாராவது உணவு தர மாட்டார்களா என ஏங்குபவர்கள் ஒருபுறம்; டாலடிக்கும் லைட் போட்டு, கொண்டாட்டமும் கும்மாளமுமாய் ஆடம்பர உணவு உண்போர் மறுபுறம். இதுதான் உட்சபட்ச வேறுபாடுகளின் இருப்பிடமான இந்தியா! நம் நாட்டில் மட்டும் நாள் ஒன்றில் லட்சக்கணக்கான திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், பிசினஸ் மீட்டிங்ஸ், பார்ட்டிக்கள் ஆகியவை நடக்கின்றன, இங்கே ஐந்தில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது; டன் கணக்கில் வீணடிக்கப்படும் அல்லது மீந்துபோகும் இந்த உணவுகள், யாருக்கும் உதவாமல் குப்பையைச் சேர்கிறது என்பதுதான் கொடுமையான சேதி.

Sponsored


1000 பேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு, முன்னேற்பாடாக ​1300 பேருக்கு உணவு ஆர்டர் செய்​பவர்கள் ஒருவகை. விழாக்களுக்குச் சென்று சாப்பிடுகிறோமோ இல்லையோ, அனைத்துப் பண்டங்களையும் டேஸ்ட் பார்க்கிறேன் எனப் பிடித்த டிஷ்ஷை மட்டும் உண்டுவிட்டு மீதி உணவை வீணடிப்​பவர்கள் இன்னொரு வகை. இப்படியெல்லாம் உணவுகளை வீணாக்காமல், அதைச் சேகரித்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கினால், எவ்வளவு நன்றாக இருக்கும். அதைத்தான் சிறந்த முறையில் செய்துவருகிறது 'நோ ஃபுட் வேஸ்ட்' அமைப்பு!

Sponsored


2014-ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது '​​நோ ஃபுட் வேஸ்ட்'. வீட்டில் கல்யாணமா? சிரமப்பட்டு தயாரித்த உணவு மீந்துவிட்டது என கவலைப்படத் தேவையில்லை. இவர்களின் 90877 90877 எனும் உதவி எண்ணுக்கு கால் செய்தால் போதும், உங்களின் இடத்தைத் தேடி வந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். கொண்டுசெல்லும் உணவின் தரத்தை உண்ணக் கூடியதா என பரிசோதித்து, உடனே அவற்றைக் காப்பகங்கள், ஸ்லம்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் வீடின்றி வாழும் ஏழைகள் ஆகியோருக்கு தாங்களே விநியோகம் செய்கின்றனர். இவர்களை 'No Food Waste' பிரத்தியேக மொபைல் ஆப் மூலமும் தொடர்புகொள்ள முடியும்!

வீட்டு விழாக்கள், கார்ப்பரேட் மீட்டிங்க்ஸ், ஓட்டல்கள், ஸ்கூல், காலேஜ், பேங்க்வெட்ஸ் போன்ற இடங்களில் இருந்து மீறும் உணவுப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். தமிழகம் - கோவை, சென்னை,​ ஈரோடு,​ சேலம், திருச்சி, திருப்பூர், தர்மபுரி; ஆந்திரா - ​​தாடேபள்ளி​கூ​டம் & ஏலூரு; கேரளா - திருவனந்தபுரம் மற்றும் ஒடிஷா,ஆகிய மாநிலங்களில் இவர்களின் சேவையால் தினம் தினம் ஆயிரக்கணக்காண எளிய மக்கள் பசியாறுகின்றனர்.​ இதுவரை ​நோ ஃபுட் வேஸ்ட் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கும் தகவலாகும்.

இதுமட்டுமல்லாது F&B ATM எனும் இலவச உணவளிக்கும் ப்ரிட்ஜ் இவர்களால் கோவை மற்றும் சேலத்தில் 4 இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உண்ணக்கூடிய உணவுகளை நாம் வைத்துவிட்டால், தேவைப்படும்போது உணவின்றி வாடுவோர் அதை எடுத்து பயனடைந்துகொள்கின்றனர்!

அறம் செய்வோம்!

முழுக்க முழுக்க பொது மக்களின் ஆதரவோடு இயங்கும் இந்த அமைப்புக்கு மிச்சமாகும் உணவு இலவசமாக வந்துசேர்ந்தாலும், இதில் முழுநேரமாக வேலை செய்யும் தொண்டர்கள், ஓட்டுனர்களுக்கு ஊதியம் மற்றும் பயண செலவு மற்றும் இதர செலவுகள் இருக்கவே செய்கின்றன! அதனால்தான், 'ஃபீடிங் தி நீடி' ​- 'Feeding the Needy' ,​எனும் பெயரில் நிதி திரட்டும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது நோ ஃபுட் வேஸ்ட்.www.edudharma.com எனும் ஃபண்ட் ரெய்ஸிங் தளத்தின் மூலம் தங்களால் ஆன பண உதவியை இவர்களுக்கு வழங்கி உதவலாம்!

ஒரு ரூபாயில் ஒருவருக்கு உணவு!

'நோ ஃபுட் வேஸ்ட்' அமைப்பில் ஒருவருக்கு ஒருவேளை உணவளிக்க ஆகும் செலவு ஒரு ரூபாய் என்றால் நம்புவீர்களா? ஆம், இதைப் பாராட்டித்தான் மத்திய அரசு இவர்களுக்கு 'சிறந்த புதுமையான செயற்திட்டம்' (2017) எனும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. ​​https://www.edudharma.com/campaigns/nfw கேம்பெய்ன் மூலம் பத்து ரூபாயில் ஆரம்பித்து, நீங்கள் விரும்பும் தொகையை இவர்களுக்கு வழங்கலாம். இங்கே நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கும் கிடைக்கிறது.

ஐந்தில் ஒரு இந்தியர் உணவு இல்லாமல் நிமிடத்துக்கு நிமிடம் இறந்துபோகிறார் என அதிர்ச்சியூட்டுகிறது ஒரு ரிப்போர்ட், இந்தப் பதிவை நீங்கள் படித்து முடிக்கும்போது, எத்தனை பேர்... நினைக்கவே நெஞ்சு பதைபதைக்கிறது! தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடவேண்டாம், நம்மால் ஆன  தானத்தை செய்தாலே போதும்! 'நோ ஃபுட் வேஸ்ட்' அமைப்பு அதன் பணியைச் செம்மையாய் செய்ய இப்போதே நம்மால் ஆன உதவியைச் செய்வோம்... ஏனெனில், வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்!​

இந்த லிங்கிற்குச் சென்று  நன்கொடையை வழங்கலாம் https://www.edudharma.com/campaigns/nfwTrending Articles

Sponsored