``வாஷிங்டன்ல பாடணுமாம்கா..!'' - செரினேட் கோரஸ் திருவிழாவில் பங்கேற்கும் சென்னை சிறுவர்கள்



Sponsored



நினைவிருக்கிறதா? ஏ.ஆர்.ரஹ்மானின் `யே தாரா வோ தாரா அந்தாரா...’ பாடலில் தொடங்கி, மைக்கேல் ஜாக்சனின் `வீ ஆர் தி வேர்ல்டு...’ என முடித்த ஜூனியர்களின் மெட்லி, 2016-ம் ஆண்டில் இணையத்தில் வைரல் ஹிட்!

வாஷிங்டனில் நடக்கவிருக்கும், செரினேட் கோரஸ் திருவிழாவில் பாடுவதற்காகப் பறந்து செல்ல இருக்கிறார்கள் நம்ம சென்னையின் அதே சிறுவர்கள். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகத்திலிருந்து வரும் சிறுவர் சிறுமியர், ஆட்டிசக் குறைபாடுகொண்ட குழந்தை, பார்வையற்ற இரு பெண் குழந்தைகள் என மொத்தம் 23 மூன்று பேரையும் பிணைத்துக்கொண்டு பறக்கவைக்கப்போகிறது அவர்களின் இசைக்காதல். 2018, ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை, வாஷிங்டன் - ஜான் எஃப் கென்னடி மையத்தில் நடக்கவிருக்கும் கோரஸ் சர்வதேசத் திருவிழா, இந்தக் குழந்தைகளின் குரலைக் கொண்டாடப்போகிறது. 

Sponsored


Sponsored


`` `அருவி' பட இசையமைப்பாளர் வேதாந்த் பரத்வாஜும், இசைக்கலைஞர் மஞ்சுளாவும்தான், இந்த மெட்லி ஜூனியர்களுக்குப் பயிற்சியாளர்கள்” என்றவரிடம் இந்தக் குழுவை உருவாக்கிய விதத்தைக் கேட்டபோது, ``13 வருஷங்களா இந்த அமைப்பு இயங்குது. தமிழ்நாடு, டெல்லி, ஹரியானாவைச் சேர்ந்த 130 அரசுப் பள்ளிகளிலும் வேலைசெய்றோம். நுண்கலைகள் வழியா, இசை வழியா வகுப்பறைகள், குழந்தைகள் உலகத்தை மேம்படுத்துறது எங்க நோக்கம். பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த, குறைபாடுள்ள குழந்தைகளும்தான் எங்களுடைய சொத்து. இசைக்காக மட்டும் பிரத்யேகமா, 2015-ம் ஆண்டில் சென்னை குழந்தைகள் குழுவை உருவாக்க நினைச்சோம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் போய், அடிப்படை குரல்வளமும் பாடும் திறனும் இருக்கும் 1,600 பேருக்கு ஆடிஷன் நடத்தினோம். இதில் 60 பேரைத் தேர்ந்தெடுத்து, இப்போது வரை இசைப்பயிற்சி அளிக்கிறோம். அந்தக் குழுவிலிருந்து 23 பேர், செரினேட் திருவிழாவுக்குப் போகிறார்கள். சர்வதேச விழாவில் பாடப்போவதால் இவர்களுக்கு பாடும் திறனோடு, அவர்கள் பற்றிய தன்னம்பிக்கையும் மிளிரப்போகுது. அவர்களைச் சுற்றி இருக்கும் குழந்தைகளுக்கும் அதே தன்னம்பிக்கையைத் தரப்போகிறார்கள்” என்கிறார், சென்னை குழந்தைகள் குழுவை (Chennai Children’s Choir) உருவாக்கி, பயிற்சியளித்துவரும், Nalanda Way தன்னார்வ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீராம்.

25 நாடுகளிலிருந்து பல கோரஸ் குழுக்கள் தேர்வாகியுள்ளன. சோகம், போர், அன்பு, நம்பிக்கை, அகதி வாழ்க்கை என அத்தனை உணர்வுகளையும் தாய்மொழியில் வெளிப்படுத்தப்படும் சிரியன் குழந்தைகள் குழுவும், சென்னை குழந்தைகள் குழுவும் மட்டும்தான் குழந்தைகள் குழு. மற்ற அனைத்தும் 20 வயதுக்கு மேலானவர்களுக்கானது. இந்தக் குழுவுக்கு போக்குவரத்து, உணவு, தங்குமிடம் என 33 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. கெட்டோ என்கிற நிதி திரட்டும் நிறுவனம் மூலம்  தற்போது சேர்ந்திருக்கும் தொகை 13,64,810 ரூபாய்.

பாடச் சொன்னதும், வெட்கப்பட்டு அப்பாவின் பின்னால் மறைந்துகொண்ட பிரணவ்வை இழுத்து நிற்கவைத்துவிட்டு, ``வாஷிங்டன்ல பாடணுமாக்கா. செம சந்தோஷமாயிருக்கு. எங்க வீடு ரொம்பச் சின்னது. அப்பா ஆட்டோ ஓட்ட போனப்புறமா, பிரணவும் நானும் பாடிட்டிருப்போம். ஒருநாள் திடீர்னு ஒளிஞ்சு நின்னு கேட்டுட்டு, நல்லா பாடுறோம்னு எங்களை என்கரேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டார். எங்க அம்மாதான் பயந்துச்சு. `ஃப்ளைட்லலாம் ஜாக்கிரதையா போகணும்யா'னு ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லியிருக்கேன். ஏர்போர்ட்ல செல்ஃபி எடுக்கணும்கா. ஹஹா” என ஹாசினி சிரிப்பை உதிர்க்கிறார் பிரணவின் ட்வின் பிரதர் பிரவீன்.

``என் பொண்ணோட அப்பா எங்ககூட இல்லை. அவ குழந்தையா இருக்கும்போதே பிரிஞ்சு போயிட்டார். `பொண்ண எதுக்கு பாடுறதுக்கெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பணும்?'னு சொந்தக்காரங்களுக்குக் கோபம். அவ நல்லா பாடுறா. நான் அவளை சந்தோஷமா அனுப்பிவைப்பேன்” - கண் கலங்கியவரை நிறுத்தி ``ஆரம்பிச்சிட்டியா. இதை விடு” என்று சொல்லிவிட்டு `கடவுள், தந்த அழகிய வாழ்வு...’ பாடலைப் பாடத் தொடங்கினார் ஹரிபிரபா.   



Trending Articles

Sponsored