டெஸ்ட் அணியில் தோனி... சாக்லேட் பர்கர்... கூகுளின் முட்டாள் தின ட்ரெண்ட்ஸ்! #GoogleTrendsSponsored''ஏய் அங்க பாரு உன் சட்டைல இன்க்'' அப்படினு காலங்காலமா கலாய்க்கும் 90'S கிட்ஸ் துவங்கி நேற்று டோன்ட் மேக் ஏப்ரல் ஃபூல்... ப்ளீஸ் மேக் ஏப்ரல் கூல் என வாட்ஸ்அப் தத்துவம் கூறிய ஆதாம் ஏவாள் தலைமுறை வரை எல்லாருக்குமே ஃபன் டே ஏப்ரல் 1-ம் தேதி தான். 10 வருஷத்துக்கு முன்னாடி நேர்ல காலுக்கடில பாம்புனு சொன்ன தலைமுறை இன்னிக்கு முன்னேறி வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்னு வலைதள ஸ்டேட்டஸ்களால் உலகையே அசத்திக்கொண்டிருக்கிறது. இணையத்தில் முட்டாள்கள் தின ட்ரெண்ட் எல்லாமே வாவ் ரகம்தான். 

132 நாடுகள் முட்டாள்கள் தினம் குறித்து கூகுளில் தேடியுள்ளன. இந்தியாவில் 29 மாநிலங்களிலும் தேடிப்பட்ட ட்ரெண்டாக முட்டாள்கள் தினம் இருந்துள்ளது. முட்டாள்கள் தினம் குறித்த தேடலில் தமிழ்நாடு கடைசி இடத்தையே பிடித்துள்ளது. அதேபோல் தென்னிந்திய மாநிலங்கள் முதல் 20 இடங்களில் இடம்பெறவில்லை. 

Sponsored


காங்கிரஸ், மோடி ஆகிய வார்த்தைகள் முட்டாள்கள் தினம் தொடர்பாக தேடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் முட்டாள்கள் தினம் அன்று வேண்டுமென்றே கிண்டல் செய்யும் விதமாக கூகுள், ஓலா, ஒபேர் வெளியிட்ட செய்திகள் தொடர்பாகவும் தேடியுள்ளனர். 

Sponsored


சில முட்டாள் தின செய்திகள் உலக அளவில் கவனம் ஈர்த்தன. 2014-ம் ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி. டெஸ்ட் அணிக்கு மீண்டும் வரப்போவதாக செய்தி பரவியது. அதுவும் தனது 100-வது டெஸ்ட் ஆட இன்னும் 12 போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காக இந்த சீசனில் ஆடுகிறார் என்று செய்தி வைரலானது. 

8:28PMமெக் டொனால்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் சாக்லேட் பர்கர் விரைவில் அறிமுகம் என அறிவித்து கலாய்த்தது. ட்ரம்ப் ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டார். ஐரோப்பாவின் பாஸ்போர்ர்ட்டில் புதிய மாற்றம். கோக் புதிய ஃப்ளேவராக அவகோடாவை அறிமுகம் செய்துள்ளது என வைரல்களால் நிரப்பினர் நெட்டிசன்கள்.

கிங்ஸ் லெவன் அணி ஒருபடி மேலே சென்று அணிக்கு திரும்புகிறார் வீரேந்தர் சேவக். ஆஸி வீரர் ஆரோன் பின்ச்சுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்குகிறார் என ட்விட் செய்து கலாய்த்தது. இணையம், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு ஜென் இஸட் தலைமுறையின் கலாய் சர்வதேச ட்ரெண்ட் வரை முட்டாள் தினத்தை கொண்டு சென்றுள்ளது. ட்ரம்பை மையப்படுத்தி நிறைய ட்ரோல்கள் இடம்பிடித்தன. இதேபோன்று நீங்கள் வியந்த ஏப்ரல் ஃபூல் ட்ரோகளை கமென்ட் செய்யுங்கள்...Trending Articles

Sponsored