யானைக்கு எப்போது மதம் பிடிக்கும்... அறிகுறிகள் என்ன! ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் - 5Sponsoredமுந்தைய அத்தியாயம்

உளவியலாக யானையின் பலத்தையும், குணத்தையும் ஒரு சேர குலைத்து யானையின் இயல்பைக் கொல்வதற்குத் தேவைப்படுகிற நாள்கள் 48. கரோலில் இருக்கிற முதல் பதினைந்து நாள்கள் எந்தப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. யானையால் ஒரு நிமிடம்கூட அமைதியாக இருக்கவே முடியாது. மரங்களை உடைக்கும், உண்ணும், நடக்கும், தும்பிக்கையை அசைத்துக்கொண்டே இருக்கும், அப்படியான யானைக்குச் செடி கொடிகளோடு ராகி, கொள்ளு, அரிசிச் சாதம் என உணவு, தண்ணீர் என எல்லாமும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மெல்ல மெல்ல அதற்குப் பழக்கப்பட்டுவிடும். கரோலில் அடைக்கப்பட்ட 16-வது நாள் 14-க்கு 14 என இருக்கிற கரோல் ஏழுக்கு ஏழு என்கிற விகிதத்தில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஓர் அறையில் மாவூத்தும், அவரது உதவியாளர் காவடியும் இருப்பார்கள். இன்னொரு அறையில் யானையையும் கட்டி வைத்திருப்பார்கள். யானையின் நான்கு கால்களும் பலமான இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டே  இருக்கும்.  முதலில் யானையை மண்டியிட வைக்கும் பயிற்சி தொடங்கும்.  மாவூத் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு யானைக்குக் கட்டளைகளை வழங்குவார். காட்டுக்குள் ராஜாவாக வலம் வந்த யானை சாதாரண குச்சிக்கு அடிபணிந்து விடாது. யானையை அடிபணிய வைக்க சில தந்திரங்களைக் கையாளுவார்கள். அதன்படி மாவூத்தின் கட்டளைக்கு அடிபணிகிற யானைக்கு முதலில் ஒரு கரும்புத் துண்டைக் கொடுப்பார்கள். இன்னொரு கரும்புத் துண்டை அதன் பார்வையில் படும்படியாக வைத்திருப்பார்கள். கரும்பின் ருசிக்கு மயங்குகிற யானை இன்னொரு கரும்புத் துண்டுக்காக ஏங்க ஆரம்பிக்கும். முதல் பயிற்சியின் ஒவ்வொரு சோதனை முயற்சியிலும் ஒரு கரும்புத் துண்டை யானைக்குக் கொடுப்பார்கள். “கட்டளைகளைக் கேட்டு நடந்தால் கரும்பு கிடைக்கும்” என்கிற ஆசையை யானையின் மனதில் விதைப்பார்கள். பயிற்சியின் ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மாலை 6 மணிக்கு யானை தூங்குவதற்கு வசதியாக கரோல் 14-க்கு 14 என மாற்றியமைக்கப்படும். 

Sponsored


மீண்டும் காலை ஆறு மணிக்கு கரோல் 7-க்கு 7 எனப் பிரிக்கப்படும். மீண்டும் பயிற்சி ஆரம்பமாகும். கட்டளைகளை ஏற்காத யானைகளுக்கு மாவூத்தின் குச்சியால் அடி விழும். ஒவ்வொரு அடிக்குப் பிறகும் ஒரு கரும்புத் துண்டு வழங்கப்படும். அடிக்கடி கிடைக்கிற கரும்பின் ருசிக்கு அடிமையாகிற யானை, தான் யானை என்கிற நிலையை மறக்க ஆரம்பிக்கும். கரும்பைக் காட்டி இரும்பை உருக்குகிற சாதாரண வேலை வெகுவாக வேலை செய்ய ஆரம்பிக்கும்போது மாவூத்தின் குச்சியை எடுக்கும் இரண்டாவது பயிற்சியை வழங்குவார்கள். இதற்கு இடையில் வெல்லத்தையும் உணவாகக் கொடுப்பார்கள். யானை மாவூத்தை முழுதாக நம்ப ஆரம்பிக்கும். அப்போது வரை மாவூத்தை நெருங்க விடாத யானை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க விடும். பொதுவாக யானை கூச்ச சுபாவம் கொண்டது என்பதால், யானையின் கூச்சத்தை போக்கக் கம்பிகளால் செய்யப்பட்ட பிரஷ்ஷை வைத்து யானையின் உடலெங்கும் தேய்ப்பார்கள். ஏனெனில் யானையின் கூச்ச சுபாவம் அகன்றால் மட்டுமே யானையைச் சுலபமாக தொட்டு அதன் மீது ஏற முடியும். யானையின் உடல் நகர முடியாதபடிக்கு கட்டைகளால் அடைபட்டிருக்கும்பொழுது கூச்சத்தைப் போக்கும் பயிற்சி தொடங்கும். கும்கியாக மாற்றும் பயிற்சி 25 நாள்களை நெருங்கும்பொழுது யானைக்கும் மாவூத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பு உருவாக  ஆரம்பிக்கும். 

Sponsored


மாவூத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கும் யானையை 30-வது நாளுக்குப் பிறகு கரோலிலிருந்து வெளியே கொண்டு வருவார்கள். சங்கிலிகள் உதவியுடன் முகாமுக்கு அருகிலிருக்கும் ஆற்றுக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போது யானை மாவூத்தின் குச்சியை தும்பிக்கையில் பிடித்தபடியே நடந்து வரும். ஆற்றில் யானையை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் குளிப்பாட்டுவார்கள். கம்பியால் செய்யப்பட்ட பிரஷ்ஷால் யானையின் உடல் முழுதும் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். இப்போது யானை முழுமையாக மாவூத்தின்  கட்டுப்பாட்டுக்குள்  வந்து விடும். மாவூத் யானையின் மீது ஏறி அமர்கிற சுப நிகழ்வெல்லாம் முப்பதாவது நாளில் சுபமாக நடந்து விடும். மாவூத்தை தவிர வேறு யாரையும் நெருங்க விடாத அளவுக்கு யானை மாவூத்தோடு  ஒன்றிணைந்துவிடும். 

யானைக்குப் பயிற்சி கொடுக்க மாவூத்துகள் ஒரு மொழியைக் கையாளுகிறார்கள். அந்த மொழியில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு பைட் என்றால் படுப்பதற்கான வார்த்தை. வூட் என்றால் எழுந்திருக்கச் சொல்கிற வார்த்தை. பர்ஸிலேம்பரே என்றால் தும்பிக்கையை தூக்கப் பயன்படுத்தும் வார்த்தை. காட்டு யானையைத் தாக்குவதற்கு லிகி என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். யானையின் மீது அமர்கிற மாவூத் யானையை இடது வலது எனத் திருப்ப யானையின் இடது புறம் மற்றும் வலது புறமாக  தன்னுடைய கால்களின் அழுத்தம் மூலமாகக் கட்டளைகளை வழங்குவார். அதன்படியே யானை நடக்க ஆரம்பிக்கும். 

பயிற்சி முடித்து வெளியே வருகிற யானையின் முன் இரு கால்களும் எப்போதும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே இருக்கும். கும்கி யானை எப்படிச் செயல்படும் என்பதற்கான பயிற்சியை கரோலுக்கு வெளியே வைத்துக் கொடுப்பார்கள். முகாமிலிருக்கும் இன்னொரு யானையின் காலில் கட்டப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியை கும்கி பயிற்சி எடுக்கும் யானையின் காலடியில் போட்டு மிதிக்க  வைப்பார்கள். 15 மீட்டருக்கு மேலாக இருக்கும் சங்கிலியை கொஞ்சம் கொஞ்சமாக மிதித்து யானையின் அருகே செல்லும் பயிற்சி வழங்கப்படும். காடுகளில் காட்டு யானையைப் பிடிக்க மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாகச் சங்கிலி மிதிக்கும் முறை இருக்கும். அப்படித்தான் காட்டு யானையைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள். பயிற்சி கொடுத்த உடன் யானையை வைத்துக் காட்டு யானைகளைப் பிடிக்கப் பயன்படுத்தமாட்டார்கள். காட்டு யானைகளைப் பிடிக்கும் இடத்துக்கு மற்ற கும்கி யானைகளோடு அழைத்துச் செல்லப்படும் யானை, கும்கி யானைகளின் செயல்பாடுகளை கவனிக்க வைப்பார்கள். பயிற்சிகள், களப் பயிற்சி எனப் பல பயிற்சிகளுக்குப் பிறகே யானை கும்கியாக மாற்றப்படும். 

காட்டு யானை, கும்கி யானை என முகாமில் இருக்கிற எல்லா யானைகளையும் 24/7 கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் யானைக்கு எப்போது வேண்டுமானாலும் மதம் பிடிக்கலாம். ஆரோக்கியமாக இருக்கிற ஒவ்வொரு யானைக்கும் வருடத்துக்கு ஒரு முறை மதம் பிடிக்கும். பெண் யானையோடு இணை சேர முடியாத ஆண் யானை மாவூத்தின் கட்டுப்பாட்டில் இருந்து முதலில் விலக ஆரம்பிக்கும். ஒரு முறை அழைத்தாலே திரும்பிப் பார்க்கிற யானை எட்டு முறைக்கு மேலும் அழைத்து ஒன்பதாவது அழைப்பில் “இரு வரேன்” என அலட்சியமாக நடக்க ஆரம்பிப்பது மதம் பிடிப்பதில் முதல் அறிகுறி. இதைக் கவனிக்காமல் விட்டு விட்டால் அடுத்து முகாமில் நடப்பது எல்லாமே அசம்பாவிதங்களாக மட்டுமே இருக்கும். மதம் பிடித்தால் யானை பக்கத்தில் யார் இருந்தாலும் எது இருந்தாலும் இழுத்துப் போட்டு சாத்திவிட்டுப் போய்க்கொண்டே இருக்கும்.   

முதுமலையில் இருக்கிற கும்கி யானைகளில் ஒன்று முதுமலை. 1967-ம் ஆண்டு முதுமலையில் பிடிக்கப்பட்டதால் முதுமலை எனப் பெயரிட்டார்கள். இப்போது 57 வயதாகும் முதுமலை முகாமிலிருக்கிற முக்கியமான கும்கிகளுள் ஒன்று. மிகப் பெரிய தந்தங்களைக் கொண்ட முதுமலை யானையைப் பார்த்தால் மற்ற யானைகளுக்கே பயம் வரும். 1998-ம் ஆண்டு மக்னா யானையைப் பிடிக்க காரணமாயிருந்த இரண்டு கும்கிகளில் ஒன்று. அதன் மாவூத் மாறன். 1980-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை  முதுமலை யானைக்கு மாவூத்தாக இருந்தவர். முதுமலையில் இருக்கிற இன்னொரு கும்கி யானை விஜய். இரண்டு யானைகளுக்கும் எப்போதுமே எதிரும் புதிரும்தான். கொஞ்சம் கவனம் திரும்பினாலும் உடனே இரண்டு யானைகளும் ஒத்தைக்கு ஒத்தையாகச் சண்டைக்கு நிற்கிற யானைகள். அதிலும் முதுமலைக்கு விஜய்யை கண்டாலே அடிப்பதற்குப் பாய்வதிலேயே குறியாக இருக்கும். அன்று முகாமில் முதுமலை யானையின் ஒரு காலில் மட்டும் சங்கிலி கட்டப்பட்டு  இருக்கிறது. முதுமலைக்குப் பக்கத்தில் மற்ற முகாம் யானைகள் கட்டப்பட்டிருக்கின்றன. முதுமலைக்கு மதம் பிடிக்கிற முதல் அறிகுறியை எப்படியோ மாவூத் கண்டறியாமல் விட்டு விடுகிறார். ஒரே ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற முதுமலை மதம் பிடித்ததின் காரணமாக  ஆக்ரோஷமாக பிளிற ஆரம்பிக்கிறது. மதம் பிடிப்பதில் முதல் முக்கிய கோட்பாடே அடி, உதை, தூக்கிப் போட்டு  மிதி என்பதே. ஒட்டு மொத்த முகாமும் பரபரப்பாகிறது. மற்ற மாவூத்துகள் பீதியாகிறார்கள். ஏனெனில்  மதம் பிடித்த முதுமலைக்கு நேர் எதிரே  கட்டப்பட்டிருந்தது  விஜய்.....Trending Articles

Sponsored