வெனிசுலாவில் 56 பைசா... சென்னையில் ரூ.77... உலகம் முழுவதும் பெட்ரோல் விலை என்ன?



``நான் போகிறேன் மேலே மேலே'' என ஏறிக்கொண்டேயிருக்கிறது பெட்ரோல் விலை. சென்னையில் ஏப்ரல் 3-ம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 ரூபாயை நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு இதே ஏப்ரலில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 69 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 8 ரூபாய் பெட்ரோலின் விலை கூடியிருக்கிறது. பெட்ரோல் விலை கூடும்போதெல்லாம் நம்முடைய அண்டை நாடுகளில் இவ்வளவுதான் பெட்ரோல் விலை என வாட்ஸ் அப்களில் ஒரு ஃபார்வேர்டு வைரல் ஆகும். உண்மையிலேயே நமது அண்டை நாடுகளிலும், உலகம் முழுவதிலும் பெட்ரோலின் விலை எவ்வளவு தெரியுமா? 

Sponsored


நமது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது உண்மையிலேயே இந்தியாவில்தான் பெட்ரோலின் விலை அதிகம். இந்தியாவிலேயே மும்பையில்தான் பெட்ரோலின் விலை அதிகம். மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81.80 ரூபாய். அதேபோல் இந்தியாவுக்குள் திரிபுரா தலைநகர் அகர்தலாவில்தான் பெட்ரோல் விலை குறைவு. அகர்தலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 69.77 ரூபாய்.

Sponsored


இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா இருக்கிறது. சீனாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய் 67 பைசா. பக்கத்து நாடுகளில் மியான்மரில்தான் பெட்ரோல் விலை மிகவும் குறைவு. மியான்மரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 40.05 ரூபாய். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 48.39 ரூபாய். இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 53.68 ரூபாய். வங்கதேசத்திலும் பெட்ரோலின் விலை இந்தியாவைவிட குறைவே. வங்கதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 69.84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Sponsored


உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெட்ரோல் மிக மிகக் குறைவாக விற்பனை செய்யப்படுவது வெனிசுலாவில்தான். வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய்க்கும் குறைவு. இந்திய ரூபாய் மதிப்பில் வெனிசுலாவில் வெறும் 56 பைசாதான் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை. இதற்கு அடுத்தபடியாக சூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 22.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெனிசுலாவுக்கும், சூடானுக்கும் இடையே கிட்டத்தட்ட 21 ரூபாய் விலை வித்தியாசம் இருக்கிறது. பெட்ரோலை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 35 ரூபாய். 

அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்னமும் 50 ரூபாய் அளவில்தான் இருக்கிறது. பெட்ரோல் விலையில் இந்தியாவை நெருங்கும் நாடு தென்னாப்ரிக்கா. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை கிட்டத்தட்ட 78 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உலக அளவில் கார்கள் அதிகம் தயாரிக்கும் நாடான ஜப்பானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 85.72 ரூபாய். சிங்கப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயைத் தாண்டுகிறது. சிங்கப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 105 ரூபாய்.

உலகிலேயே பெட்ரோல் அதிகமாக விற்பனை செய்யப்படும் நாடு ஐஸ்லாந்து. இங்கே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 138.84 ரூபாய். சீனாவில்தான் பெட்ரோலின் விலைக்குறைவே தவிர சீனாவின் அங்கமான ஹாங்காங்கில் பெட்ரோல் விலை மிகவும் அதிகம். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 134.34 ரூபாய்.



Trending Articles

Sponsored