தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக்கல்லூரிகள் இடம்பிடித்த பின்னணி!Sponsoredமத்திய மனிதவளத் துறை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக் கல்லூரிகள் இடம்பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய மனிதவளத்துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. கற்றலுக்கான வசதி வாய்ப்புகள், ஆராய்ச்சி நிலை, தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை, கல்வி நிறுவனத்தின் சமூகத் திட்டங்கள், கல்வி நிறுவனம் குறித்து பொதுமக்களின் அபிமானத்தை அளவீடாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

Sponsored


இந்த ஆண்டு வெளியிடப்பட்ட கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் போட்டியிட்டன. இறுதியில் 150 கல்லூரிகள் மட்டும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தன. இதில்  தமிழகத்தைச் சேர்ந்த 57 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த 10 கல்லூரிகள், கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகள், திருச்சியைச் சேர்ந்த 7 கல்லூரிகள், மதுரையைச் சேர்ந்த 6 கல்லூரிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 கல்லூரிகள், திருப்பூரைச் சேர்ந்த 4 நான்கு கல்லூரிகள், ஈரோடு மாவட்டத்தில் 3 கல்லூரிகள் இடம்பிடித்திருக்கின்றன. இதில்,  பத்து அரசு கலைக்கல்லூரிகள் இடம்பிடித்திருப்பது கல்வியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Sponsored


கல்லூரிகளின் தரவரிசையில், ஐந்தாவது இடம்பிடித்துள்ளது மாநிலக்கல்லூரி. எப்போதும் அடிதடி, ரகளை எனப் போராட்டமாக இருந்தாலும் தரவரிசையில் ஐந்தாவது இடத்தை எப்படிப் பிடிக்க முடிந்தது என்பது குறித்து, மாநிலக் கல்லூரி முதல்வர் பிரமானந்தா பெருமாளிடம் பேசினோம்.

``மாநிலக் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில் நிறைய ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறோம். மேலும், கடந்த  இரண்டு வருடங்களாக மாணவர்களிடையே மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தி, அடிதடி பிரச்னை எதுவும் பெரிய அளவில் இல்லாமல் நிர்வகித்து வருகிறோம். இதனால் பொதுமக்களிடையே மாநிலக் கல்லூரியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் படித்துமுடித்து பட்டம் பெற்றுச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையையும் உயர்த்தி, அடுத்த ஆண்டில் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிப்போம்" என்றார்.

ஏழை மாணவர்களின் புகலிடமாக விளங்கும் தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தப்போதிலும், இதரப் பிரிவுகளில் நிறைய மதிப்பெண்ணைப் பெற்று தேசிய அளவில் சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாராட்டுவோம். Trending Articles

Sponsored