இன்னமும் விடைதெரியாத விண்வெளியின் கரும்பொருளும் இருண்ட சக்தியும்..!Sponsored1990-களின் தொடக்கம் வரை அண்டங்கள் விரிவடைவதன் வேகம் ஒரு கட்டத்துக்கு மேல் குறைந்துகொண்டே வரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கொள்கைதான். அவரது ஈர்ப்பு விசை விதிப்படி ஒரு பொருள் வீசப்பட ஓர் உந்து சக்தி வேண்டும், அந்த உந்து சக்தியின் மூலம் அது வீசப்பட்ட பிறகு அதன் வேகம் ஒரு சமயத்துக்கு மேல் குறைந்து பின்னர் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே திரும்பிவிடும். இது பேரண்டம் முழுக்க இருக்கும் அனைத்துக்குமே பொருந்தும். ஏனென்றால் விண்வெளியில் நிறைந்திருக்கும் எரிகற்களில் இருந்து கிரகங்கள் வரை அனைத்துமே துகள்களால் ஆன பொருள்கள்தான். ஆகையால், அவை அனைத்துமே ஓர் உந்து சக்தியால் வீசப்பட்டிருக்க வேண்டும். அந்தச் சக்தியைத்தான் இன்று வரை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவரை உந்து சக்தியால் அண்டம் விரிவடையத் தொடங்கியிருந்தாலும், அது மேலும் விரிவடைந்துகோண்டே செல்லாது. ஒரு கட்டத்துக்கு மேல் அதன் வேகம் குறையும். மீண்டும் ஈர்ப்புவிசையால் அனைத்தையும் இழுத்துக்கொண்டிருக்கும் மத்தியை நோக்கி திரும்பத் தொடங்கும் என்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், நடந்தது வேறு.

1990-களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட ஹப்புள் விண்வெளித் தொலைநோக்கியின் மூலம் அன்றைய விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அவர்களுக்குக் கிடைத்த விவரங்கள் வித்தியாசமாக இருந்தன. கோட்பாட்டுப்படி அண்டம் விரிவடையும் வேகம் முன்பிருந்ததைவிட குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அண்டம் விரிவடையும் வேகம் பழைய பதிவுகளில் இருந்ததைவிட வேகமாக இருந்தது. இது பழைய கூற்றுகளைப் பொய்யாக்கியது. 

அப்படியென்றால் நடப்பது என்ன? 

Sponsored


அது எப்படி நடக்கிறது? 

Sponsored


அது தொடர்ச்சியாக வேகமெடுக்க வேண்டுமென்றால், அதற்கான உந்து சக்தி எங்கிருந்து கிடைக்கிறது?

இப்படியான கேள்விகளுக்கு விடைதேடி விண்வெளியில் தொலைநோக்கிக் கண் வழியே மேற்கொண்ட பயணம் தந்த கூற்றுக்கள்தான் கரும்பொருளும், இருண்ட சக்தியும்.

நாம் கற்றதைவிட அறிந்ததைவிட நமது கண்களுக்கு மட்டுமின்றி அறிவுக்கும் எட்டாத பல விஷயங்கள் இப்பேரண்டத்தில் நிறைந்து கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த இருண்ட சக்தியும், கரும்பொருளும். அவற்றை முதலில் உற்று கவனித்தவர் ஐன்ஸ்டைன். அண்டத்தில் நமக்குக் கறுப்பாகத் தெரியும் பகுதிகள் எல்லாம் காலியிடங்கள் என்று நினைக்கக் கூடாது. அங்கு பொருள்கள் இருக்கலாம். அவை பல லட்சம் ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும். நாம் காணமுடியாமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. உதாரணமாக நமது சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள், விண் கற்கள் இன்னும் பல வாயுக்கள் இருக்கின்றன. ஆனால், வெகு தூரத்தில் இருந்து பார்த்தால் அவை எதுவுமே கண்ணுக்குத் தெரியாது, சூரியன் மட்டுமே சிறு புள்ளியாகத் தெரியும். அப்படியிருக்க இங்கே இருக்கும் இருள் காலியிடம் என்று நாம் சொல்லமுடியாது. அவர்களுக்குத் தெரியும் அந்த இருண்ட காலியிடத்தில் இருக்கக்கூடிய நாம் தான் கரும்பொருள்கள். 

"விண்வெளியில் வெற்றிடமாக இருளடர்ந்து இருந்தால் அது வெற்றிடம் அல்ல. அங்கே இருப்பவை நமது கண்களுக்குத் தெரியும் தொலைவில் இல்லை. அவற்றுக்கான இயங்கு சக்தி அல்லது உந்து சக்தி அங்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது" என்று கூறுகிறார் ஐன்ஸ்டைன்.  உதாரணமாக ஓர் அண்டத்தைத் தொலைநோக்கியால் நாம் பார்த்தால் அங்கே நமது கண்களுக்குத் தெரியும் விவரங்கள் வெறும் 5 சதவிகிதம் தான், அதை இயக்கிக் கொண்டிருக்கும் சக்தி மற்றும் அந்தச் சக்திக்கு ஆதாரமாக இருக்கும் பொருள்கள் 95 சதவிகிதம் இருக்கும். அவற்றால்தான் அந்த அண்டம் வேகம் குறையாமல் மேன்மேலும் உந்தப்பட்டு இயங்கிக்கொண்டும் விரிவடைந்துகொண்டும் இருக்கிறது.

இந்தப் பேரண்டத்தில் பரந்திருக்கும் அதிசயங்களைப் பற்றி ஆராய்வதற்கு இன்னும் 95 சதவிகிதம் இருக்கின்றன. நாம் ஆராய்ந்தது வெறும் 5 சதவிகிதமே என்று நினைக்கும்போது மனித மூளையைப் பற்றிய பெருமிதமும் கர்வமும் சுக்குநூறாகச் சிதறி விடுகிறது. ஒவ்வொரு அண்டத்திலும் அதன் இயக்கத்திற்கு என்றொரு இயங்கு சக்தி இருக்கத்தான் செய்கிறது. கடவுள் பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கிறார் என்று கூறுவதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத அந்த இருண்ட சக்தியைத்தான் கடவுள் என்கிறார்களோ என்னவோ. ஆனால், அங்கே அதன் உந்துதலுக்கான ஒரு பொருள் இருப்பதாகவே அறிவியல் கூறுகிறது. ஒன்று கண்ணுக்குத் தெரியாததால் அது இல்லை என்று சொல்ல முடியாது என்பது அறிவியல் நிரூபித்த உண்மை. அமீபாவே சிறந்த எடுத்துக்காட்டு. அதேபோல் தூரத்தில் தெரிவதால் அது இருப்பதாக அர்த்தமில்லை என்பதும்கூட அறிவியல் நிரூபித்த உண்மைதான். கானல் நீரே சிறந்த எடுத்துக்காட்டு. தெரிவதால் இருக்கிறது என்றில்லை, தெரியாததால் இல்லை என்றில்லை.Trending Articles

Sponsored