அலுவலகம் செல்லும் ஆண்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டிய நிறங்கள்! #WorkWearSponsoredநாம் உடுத்தும் உடையை வைத்துதான் நம் வரலாற்றையே கணிக்கிறார்கள். அதற்குக் காரணம் நாம் உடுத்தியிருக்கும் உடைகள் மட்டுமல்ல, அதன் நிறங்களும்தான். உதாரணத்துக்கு, யாரையாவது வெள்ளை ஆடையில் பார்த்தால் `அரசியல்வாதிபோல வந்திருக்க!' என்போம். கறுப்பு நிற ஆடையில் பார்த்தால், `நீ என்ன பெரிய வக்கீலா?' என்று கேட்போம். இப்படி ஒவ்வொரு தொழிலுக்கென்று ஒரு நிறம் நிரந்தரமாகிவிட்டது. இவையெல்லாம் ஏதோ நிறம் என்று மட்டும் கருதிவிட முடியாது. ஒவ்வொரு நிறத்துக்குப் பின்னாலும் ஆயிரம் கதைகள் உண்டு. அந்தக் கதைகளையும், அலுவலகம் செல்லும் ஆண்களுக்குச் சரியான ஆடை நிறங்களைப் பற்றியும் பார்ப்போம்.

பச்சை:
`என்னது... அலுவலகத்துக்குப் பச்சையா?!' என்ற சந்தேகக் கேள்விக்கான பதில், `ஆம்'. வழக்கத்துக்கு மாறானா நிறமாக இருந்தாலும், பச்சை நிறம் மிகவும் `கூலான' ஒன்று. அதிலும், `ஆலிவ்' ஷேடு, புதுமையான தோற்றத்தைத் தரும். உளவியல்ரீதியாக பச்சை, இயற்கை, முன்னேற்றம், சுகாதாரம், சாந்தம், பொறாமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. இதன் ஷேடுகளின் வித்தியாசமே உணர்வுகளின் வெளிப்பாடாகும். தனிப்பட்ட, கூலான தோற்றம் பெற `பச்சை' நிறம் நிச்சயம் உதவும். இனி பச்சை நிறத்தை ஒதுக்கிவைக்காதீர்கள். உங்கள் அலமாரியில் கட்டாயம் இருக்கவேண்டிய நிறங்களில் பச்சை நிறமும் ஒன்று.

Sponsored


Sponsored


வெள்ளை:

தூய்மை, நடுநிலைமை, துக்கம் போன்ற உணர்வுகளை வெண்மை வெளிப்படுத்துகிறது. மருத்துவர்கள் போன்ற சமூகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, வெள்ளை நிறம் பரிந்துரைக்கக் காரணம், நடுநிலைமையை வெளிப்படுத்துவதால்தான். அந்தக் காலம், இந்தக் காலம் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் வெள்ளை நிறம் Classicதான். ரிஸ்க்கே இல்லாமல் மிடுக்கான தோற்றம் எளிதில் பெறலாம். மேலும், வெண்மை முழு நிறைவுத் தோற்றத்தைத்  தருவதால், இன்டர்வியூக்கு மிகவும் சிறந்தது. இது மிகவும் பிளைனாக இருப்பதால், `Tie' அணிந்துகொள்வது அவசியம். நீங்கள் உண்மையில் `சின்சியர் (Sincere) என்ற (மாய) தோற்றத்தை வெள்ளை நிறச் சட்டை அணிந்து வெளிப்படுத்துங்கள்.

கறுப்பு:

அதிகாரம், திறன், வலிமை, அறிவுத்திறன் முதலியவற்றை வெளிப்படுத்தும் நிறம் கறுப்பு. வக்கீல்கள் கறுப்பு கோட் அணிவதன் பின்னணி இப்போது புரிகிறதா! `கறுப்புனா நெருப்புடா' என்று பன்ச் பேசும் பெரும்பாலான ஆண்களின் ஃபேவரிட் நிறமும் இதுதான். கறுப்பு நிறச் சட்டையைத் தேர்ந்தெடுக்கும்போது, அதுக்கு ஏற்ற பேன்ட் தேர்ந்தெடுப்பதும் அவசியம். இதனுடன் `Tie' அணியவேண்டிய அவசியமில்லை. ஆனால், நல்ல `ஸ்னீக்கர்ஸ்' அணிந்துகொள்ளுங்கள். வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்கள், என்றைக்குமே அலுவலக டிரெஸ்ஸிங்கில் கைவிடாது ஆண்களே!

கிரே:

வண்ணங்களில் `மதிப்பிற்குரிய' நிறம் என்றால் அது `கிரே'தான். உண்மை, நேர்மை போன்ற காலவரம்பற்ற குணாதிசியங்களை இந்த நிறம் கொண்டுள்ளது. எந்தத் தொழிலில் உள்ளவராக இருந்தாலும் சரி, சில நிறங்களால் ஆன உடைகளை உடுத்தியிருக்கும் மனிதர்களைப் பார்த்தாலே மரியாதை வரும். அப்படிப்பட்டவர்கள் அதிகம் அணிந்திருக்கும் நிறம் கிரே. இந்த நிறத்தைத் தேர்ந்தெடுக்கையில் சரியான பேன்ட், ஷூ போன்றவற்றையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது அலுவலகத்துக்கு மிகவும் ஏற்ற நிறம். சில்வர் நிற கைக்கடிகாரம் கிரே சட்டைக்கு சரியான மேட்ச். மேலும் தாமதிக்காமல், கிரே நிறத்தில் ஃபார்மலில் ஒரு சட்டையும் கேஷுவலில் ஒரு சட்டையும் வாங்கி ஸ்டைலீஷ் ஆகுங்கள்.

ப்ளூ:

விவசாயம் தவிர்த்து, பெரும்பான்மையான அலுவலகம் செல்லும் ஆண்கள் `Blue Collar' வேலையில்தான் இருப்பார்கள். அதன் பெயர் காரணம் தெரியுமா?

விசுவாசம், உண்மை, கவனம், ஞானம் போன்றவற்றையை வெளிப்படுத்துவதுதான் `நீல' வண்ணம். `ப்ளூ காலர்' பெயர் அர்த்தமும் இதனால்தான் தோன்றியது. அர்த்தங்கள் எதுவானாலும், உண்மையிலேயே நீல வண்ணம் ஆண்களுக்கே உரித்தான `ஸ்மார்ட்' தோற்றத்தை கொடுக்கும் நிறம். நேவி, பேபி எனப் பல ஷேடுகள் உள்ளன. சற்றும் யோசிக்காமல் உங்களுக்குப் பிடித்த ஷேடுகளில் வாங்கி அடுக்குங்கள்.

பிரவுன்:

இது அரிதான நிறம். நம்பிக்கை, திடநிலை, தோழமை, ஆறுதல், பாதுகாப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் நிறமும்கூட. நன்கு முதிர்ச்சிபெற்ற தோற்றத்தைத் தரும். எனவே, சரியான ஷேடுகளில் ஒன்று அல்லது இரண்டு சட்டைகள் இருப்பது நன்று.

தவிர்க்கவேண்டிய நிறங்கள்:

சிவப்பு, பிங்க், ஆரஞ்சு போன்ற பிரைட் நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்விதமாக அமையும். கோபத்தைத் தூண்டும் நிறங்கள் என்பதால், அலுவலகத்துக்கு இவை தேவையில்லை. ஆனால், `கேஷுவல்' வகைகளில் பயன்படுத்தலாம். உடுத்தும் சட்டைக்கேற்ற பேன்ட், வாட்ச், செயின் முதலியவற்றை அணிவதும் மிக முக்கியம் பாஸ். அலமாரியை அப்பப்போ அப்டேட் செய்துகொள்வது ஆண்களின் ஸ்மார்ட்டான முதலீடும்கூட.Trending Articles

Sponsored