ஆண்களுக்கு மட்டும்தான் செட்டாகுமா கிராஸியா? வாங்கலாமா... வேண்டாமா?Sponsoredஹோண்டாவின் எட்டாவது ஸ்கூட்டராக வெளிவந்த கிராஸியா, ஐந்து மாதங்களிலேயே ஒரு லட்சம் ஸ்கூட்டர்கள் விற்றுவிட்டன. கிராஸியா என்றால், இத்தாலிய மொழியில் `கருணை நிறைந்த’ என்று அர்த்தம். ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், ஹோண்டா கிராஸியாவுக்கு ஏன் கருணைகாட்ட வேண்டும், அதன் சிறப்புகள் என்ன, அதன் சாதனை என்ன என்பதையெல்லாம் பார்க்க, இதோ அப் டு டேட் தகவல் தமாக்கா!

Sponsored


தரம்: ஹோண்டாவின் ஸ்கூட்டர்தான் டூ வீலர் விற்பனையில் டாப். அதற்குக் காரணம், ஹோண்டாவின் இன்ஜின் தரம் மற்றும் சேவை. ஹோண்டா ஸ்கூட்டர்களின் சர்வீஸ் விலை குறைவு. சர்வீஸ் சென்டர்களையும் தேடி அலையத் தேவையில்லை; பாகங்களும் சுலபமாகக் கிடைக்கும்.

Sponsored


ஸ்டைல்: கிராஸியாவின் ஸ்டைல், பார்த்த உடனேயே பச்சக்கென மனதில் ஒட்டிக்கொள்ளும். டியோவின் அண்ணன்போல இருக்கும் கிராஸியா, 125cc ஸ்கூட்டர்களிலேயே அலட்டிக்கொள்ளாமல் அழகாக இருக்கிறது எனச் சொல்லலாம். Ntorq போல அதிகமான அழகு இல்லை. அதே சமயம், நல்ல மாடர்னாகவும் இருக்கிறது. விற்பனை அடிப்படையில் பார்க்கும்போது இந்த டிசைன் ஆண்-பெண் இருவருக்குமே பிடித்துள்ளது.

பர்ஃபாமென்ஸ்: பொறுமையாக ஓட்டும் ஸ்கூட்டரிலும் கொஞ்சம் கிக் கேட்பவர்கள்தான் 125cc ஸ்கூட்டர்களை எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்குத் தேவையானது கிராஸியாவில் இருக்கு. செங்குத்தான சாலைகளில்கூட ஏறும் அளவுக்கு டார்க் உள்ளது. 80 கி.மீ வேகத்தைச் சுலபமாக எட்டலாம். ஆனால், 90 கி.மீ-க்குமேல் போகாது.   

மைலேஜ்: டீசென்டான பர்ஃபாமென்ஸ், நல்ல மைலேஜ் வேண்டும் என்றால் கிராஸியாவுக்குப் போகலாம். மைலேஜ் தரும்படி ஸ்கூட்டரை ஓட்டுகிறோமா எனப் பார்ப்பதற்கு எக்கோ இண்டிகேட்டர்களும் உள்ளன.

பாதுகாப்பு: கிராஸியாவில் இரண்டு டிஸ்க் பிரேக்குகள் இல்லையென்றாலும்  cbs வருவதால், அது ஒரு குறையாகவே தெரியாது. டிஸ்க்-டிரம் இரண்டுமே ஒன்றாக வேலைசெய்வதால் டயர்கள் சறுக்காது.

வசதிகள்: ஸ்கூட்டர்களில் என்ன வசதிகள் வேண்டுமோ எல்லாமே இருக்கு. தேவைக்குமேல் பளிச்சென்ற LED லைட், மொபைல் சார்ஜர், 4-இன்-1 கீ ஸ்லாட் என, கூடுதல் வசதிகளும் உள்ளன.

விலை: ஸ்டாண்டர்டு, அலாய், டீலக்ஸ் என மூன்று வேரியன்ட்களில் வரும் கிராஸியாவின் டாப் மாடலான டீலக்ஸின் சென்னை ஆன்ரோடு விலை 73,117 ரூபாய். கிராஸியாவைவிட அதிக வசதிகளோடு விலை குறைந்த ஸ்கூட்டர்கள் போட்டியில் இருப்பது கிராஸியாவுக்குப் பெரிய மைனஸ்.

ரைடிங்: டிராஃபிக்கின் வளைவு நெளிவுகளில் ஓட்டுவதற்கு செம ஃபன்னாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் இருக்கும் பர்ஃபார்மென்ஸ் மற்றும் மைலேஜ் சிட்டியில் இல்லை. சிட்டி மைலேஜ் - 50.6, நெடுஞ்சாலையில் - 57.6. சட்டென 60கி.மீ வேகத்தைத் தொட்டாலும் உங்களால் நெடுஞ்சாலையில் என்ஜாய் பண்ணக்கூடிய பர்ஃபார்மென்ஸை சிட்டியில் பார்க்க முடியாது.

ஸ்டோரேஜ்: சீட்டுக்குக் கீழே இருக்கும் ஸ்டோரேஜ் சிறியது. பெட்ரோல் போட சீட்டைத் திறக்க வேண்டும். 

கிராஸியா ஸ்கூட்டர் பற்றிய மேலும் சில பதிவுகள்...

HONDA grazia - ஆண்களுக்கான கிரேஸியான ஸ்கூட்டர்!

ஆக்ஸஸ், கிராஸியா, என்டார்க்... 125சிசி ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? 

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்! கிராஸியா vs ஆக்ஸஸ்

5 மாதங்களில் 1 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை...ஹோண்டாவை மகிழ்வித்த கிராஸியா.Trending Articles

Sponsored