இனி வங்கி அதிகாரிகளைப் பார்த்து கடுப்பாக வேண்டாம்... வந்துவிட்டது ஆளில்லா வங்கி! #RobotBankSponsored``அந்த டிமாண்ட் டிராஃப்ட் எப்படி நிரப்புறது", ``சல்லான் பின்னாடி நம்பர் எழுதணும்னு தெரியாதா சார்", ``கியூவுல வாங்க சார்" ``அக்கவுன்ட்ல மொபைல் நம்பர் மாத்தணும் அன்னைக்கே எழுதிக் கொடுத்துட்டேன்".  நம்மூர் வங்கியில் பெரும்பாலும் கேட்கும் குரல்கள் இவையாகத்தான் இருக்கும். ஒருவேளை சிடு சிடு வெனப் பேசும் பேங்க் அதிகாரிகளும் பார்க்க முடியாத மேனஜர்களும் (ஒரு சிலரைத்தான் சொல்கிறேன்) இல்லாமல் வெற்றாக இருக்கும் வங்கிகளுக்குள் நுழைந்தால் எப்படியிருக்கும்? அந்த வெற்றிடத்தில் பேசும் ரோபோக்களும், ஹாலோகிராம் மெஷின்களும் நிரம்பியிருந்தால் நம்முடைய வங்கி அனுபவம் எப்படி இருக்கும்? இதெல்லாம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்களில்தாம் பார்க்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். உண்மையில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளெல்லாம் நிஜமாக நடக்கத் தொடங்கி விட்டன. அந்த வரிசையில் இன்னொரு நிகழ்வுதான் மனிதர்களற்ற வங்கி. 

சீனாவின் ஷாங்காயில் இருக்கும் ஹுவங்பு (Huangpu) மாவட்டத்தில் இந்த மனிதர்களற்ற வங்கியைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளனர். சீனாவின் அரசு உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முக்கியமான வங்கியான சீனா கன்ஸ்ட்ரக்‌ஷன் வங்கி நிறுவனம்(China Construction Bank Corporation) இந்த முயற்சியினை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9 ம் தேதி இந்த வங்கிக் கிளையின் ஆட்டோமெட்டிக் கதவு திறந்தது. யாரும் ரிப்பன் வெட்டியெல்லாம் திறப்புவிழா நடத்தவில்லை. திறக்கப்பட்டதிலிருந்தே செயற்கை நுண்ணறிவு ரோபோக்களும், ஹாலோகிராம் மெஷின்களும் இன்னும் பல செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களும் வங்கியைச் சீராக நடத்தி வருகின்றன. சீன அரசின் தேசிய அடையாள அட்டை அல்லது அந்த வங்கி கார்டினைக் கொண்டு வங்கியினுள் நுழையலாம். நுழைந்தவுடன் ரோபோக்கள் உங்களை வரவேற்றுப் பேச ஆரம்பித்து விடும். உள்நுழைபவரின் முகத்தை ஸ்கேன் செய்து அவர் யார் எனத் தெரிந்துகொள்வதோடு அவர் இந்த வங்கியின் வாடிக்கையாளரா என்பதையும் தெரிந்துகொள்ளும் ரோபோக்கள். இந்த மென்பொருள் உதவியுடன் வாடிக்கையாளருக்கான உதவியை இந்த ரோபோக்கள் செய்கின்றன. இந்த ரோபோவுடன் பேச ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சீனாவின் மாண்ட்ரின்( Mandarin) மொழியிலேயே பதில் சொல்கிறது. இதனால் யார் வேண்டுமானாலும் இந்த உயர்தர தொழில்நுட்ப வங்கியைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர் வங்கி நிர்வாகத்தினர். 

Sponsored


வாடிக்கையாளர்களிடம் பேசும் இந்தச் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் லாபி மேனேஜர் என்று அழைக்கப்படுகின்றன. இவைதாம்  வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வங்கிச் செயல்பாடுகளைச் செய்கிறது. கிளெர்க், அலுவலக உதவியாளரிலிருந்து பணப் பரிமாற்றம்வரை 90%க்கும் அதிகமான வேலைகளை ரோபோக்களே பார்த்துக்கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல் மென்பொருள்களையும் அப்கிரேட் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தனை வேலைகளைச் ரோபோக்கள் இருந்தாலும் இந்த வங்கியினைப் பாதுகாக்கும் வேலையினை மனிதர்கள்தாம் பார்த்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த ரோபோக்களில் பிரச்னை ஏற்பட்டால் சரிபார்க்கவும் அவற்றைக் கண்காணிக்கவும் சில பணியாளர்கள் உள்ளனர். ரோபோக்களின் சேவையை எளிதில் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு உதவி செய்வதற்கும் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் இவர்களைவிட ரோபோக்களின் எண்ணிக்கையே அதிகம். இந்தப் பணியாளர்களும் பெரிதாக ரோபோக்களின் வேலைகளில் தலையிடுவதில்லையாம். இதுபோன்ற முயற்சிகள் அமெரிக்காவிலும் எடுக்கப்பட்டுள்ளது. அதைவிட இங்குதான் மனித ஆதிக்கம் குறைவாக இருப்பதால் இது முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. 

Sponsored


ரோபோக்களைத் தாண்டி விருப்பப்பட்டால் அதிகாரிகளுடன் உரையாடுவதற்கான வசதிகளும் இருக்கின்றன. இந்த வங்கிக் கிளையானது வங்கிச் சேவைகளை மட்டும் தருவதோடு நிற்கவில்லை. இந்த வங்கியில் 50,000 புத்தகங்களை இலவசமாக வாசிக்கலாம். குளிர்பானங்களைத் தருவிக்கும் மெஷின்களும்(Vending Machines) இருக்கின்றன. விர்ச்சுவல் ரியாலிட்டியில் கேம்ஸ் விளையாடும் வசதியும் இருக்கின்றன. இவையெல்லாம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக என வங்கி நிர்வாகம் சொல்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கியைப் பயன்படுத்துவதில் இன்னும் வசதியாகவும், தனிப்பயன்பாட்டு விசயமாகவும் இந்த மனிதர்களற்ற வங்கியை உணர்வார்கள். மேலும் இப்போது மனிதர்களைக் காட்டிலும் தொழில்நுட்பத்தோடு உரையாடுவது அதிகமாகிவிட்டது. பலருக்கும் இது பிடித்திருக்கிறது. ரோபோக்களின் மூலம் பணியாட்களின் செலவுகளைக் குறைக்கலாம் என மனிதர்களற்ற வங்கியின் பயன்களை அடுக்குகிறது சீனா கன்ஸ்ட்ரங்க்‌ஷன் வங்கி. 

 கம்யூனிச நாடான சீனாவின் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியே பணியாளர்கள் தேவையில்லை எனச் சொல்வது வரலாற்று முரண்தான்.

.Trending Articles

Sponsored