மஞ்சளை மறந்துவிட்டோமா? #நம் கலாசாரம் (Sponsored Content)Sponsoredமஞ்சள், நம் மண்ணின் சொத்து. ஒன்றா இரண்டா, அநேக பலன்களைக்கொண்டது மஞ்சள். சிறந்த வலி நிவாரணி, கிருமி நாசினி, தோலில் சுருக்கம் விழாமல் காக்கும் பண்புகள்கொண்டது, முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி, சருமப் பொலிவை வழங்குகிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது மற்றும் ஜீரணத்தை மேம்படுத்துகிறது.

இவ்வளவு அருமையான பயன்களைக்கொண்டிருக்கும் மஞ்சளை உணவிலோ, மருந்திலோ, பூஜையின்போதோ... இப்படி ஏதாவது ஒருவகையில் நாம் பயன்படுத்திவருகிறோம்.

Sponsored


பெண்களுக்கு...

Sponsored


உடலில் ரோமம் வளராமல் தடுக்கும் குணம் மஞ்சளுக்கு உண்டு. எனவே, உடல் முழுக்க மஞ்சள் பூசி குளிப்பதை நம் பெண்கள் வழக்கமாகவே வைத்திருந்தார்கள். இன்று கிடைக்கும் அழகு சாதனப் பொருள்களெல்லாம் அப்போது ஏது? கொடுமை என்னவென்றால், விலை மலிவான, தீங்கு ஏதும் செய்யாத மஞ்சளைப் பயன்படுத்த நாம் தவறிவிட்டோம், தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் 'சிவப்பழகு (?)' தரும் ஃபேர்னஸ் க்ரீம்களை, அவை நாளடைவில் ஏற்படுத்தும் பக்க விளைவுகளைப் பற்றிக்கூட கொஞ்சமும் யோசிக்காமல் வாங்கி முகத்தில் பூசிக்கொள்கிறோம்!

உற்ற துணை...

மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரால் அம்மை நோய் வந்தவர்களைக் குளிப்பாட்டுவார்கள். கிருமிகள் அண்டாமல் இருக்க வாசலில் மஞ்சள் தெளிப்பார்கள்; வயதுக்கு வந்த பெண்ணுக்கும், நிறைமாத கர்ப்பிணிக்கும் சடங்கின்போது மஞ்சளை கன்னத்தில் தடவுவதும்கூட ஒருவகை காப்புதான்! மஞ்சளுக்கு நிறத்தை வழங்குவது, குர்குமின் (Curcumin) என்ற மூலப்பொருள். ஞாபகமறதியை இது சரிசெய்யும். குர்குமின் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃப்ளமேஷன் போன்ற பல மருத்துவ குணங்களைக்கொண்டது என்பது கூடுதல் சிறப்பு.

மஞ்சளின் மங்களம், குங்குமத்தின் குணநலம்...

மஞ்சள் நிறம், மங்களகரமான நிறமாக அறியப்படுகிறது. திருமணம் போன்ற மங்கள நிகழ்வின்போது, மஞ்சள் முக்கியத்துவம்   பெறுகிறது. ஒரு மஞ்சள் நிறக் கயிற்றை எடுத்து, அதன் நடுவில் ஒரு மஞ்சள் கிழங்கைக் கட்டினால், அதுவே தாலிக் கயிராக மாறிவிடுகிறது.

உயர்தர மஞ்சளைக் காயவைத்து இடித்துச் சலித்து, அதனுடன் மற்ற பொருள்களைக் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. சக்தியின் அடையாளமாக பெண்கள் குங்குமத்தை நெற்றியில் இடுகின்றனர். நம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆக்கினை சக்கரத்தின் இருப்பிடமான நெற்றிப்பொட்டில் குங்குமப் பொட்டு வைப்பதன்மூலம் கவனம் சிதறாமல் காக்கப்படுகிறது. நற்குணங்கள் பலவற்றைக்கொண்டுள்ள மஞ்சளை தினசரி பயன்பாட்டில் மக்கள் அனைவரும் பயன்படுத்த நாம் செய்த வழிமுறையே, அம்மன் கோயில்களில் மஞ்சள் குங்குமம் வழங்கும் வழக்கமாகும். அம்பிகை வழிபாட்டுக்கு மிக முக்கியமான பொருள்களாக மஞ்சள் மற்றும் குங்குமம் விளங்கக் காரணமும் இதுதான்.

மஞ்சள் என்றாலே கோபுரம்!

மஞ்சள், குங்குமம் என சொல்லும்போதே நம் நினைவுக்கு வருவது "கோபுரம்" மஞ்சள் நிறுவனம்தான். ஒய்.வி. சேஷாச்சலம் & கம்பெனி எனும் பெயரில் 1945-ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 70 வருடத்துக்கும் மேல் பாரம்பரிய முறையில் உயர்தர பூஜைப் பொருள்களைத் தங்களின் 'கோபுரம்' பிராண்ட் வாயிலாக வழங்கிவருகிறது.

மஞ்சள் மற்றும் குங்குமத்துக்கு பிரசித்திபெற்று விளங்கும் கோபுரம் நிறுவனம், தெய்வ வழிபாட்டுக்குத் தேவையான, தேன், சந்தனம், பண்ணீர், தீப எண்ணெய், அகர்பத்தி, கற்பூரம், நெய் உள்ளிட்ட அனைத்து  பூஜை சாமான்களையும் முறைப்படி சுத்தமான முறையில் தயாரித்து வழங்கிவருகிறது. அதுமட்டுமல்லாது, சமையலுக்குத் தேவையான மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, பெருங்காயம் மற்றும் மசாலாப் பொருள்களையும் விற்பனை செய்துவருகிறது.

மஞ்சள் மற்றும் குங்குமத்தின் மகத்துவத்தை அறிவோம்; நம் பண்டைய பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்!​Trending Articles

Sponsored