`அணை வந்தால் இதுதான் நடக்கும்..!” - மேப் போட்டு நதியை மீட்கப் போராடும் அமேசான் பழங்குடியினர்Sponsored"இதன் விளைவுகள் எங்களுக்குத் தெரியும், அதனால் தான் நாங்கள் இதைப் பேசுகிறோம். அரசாங்கம் எங்களை அழிக்கத் தேவைக்கு அதிகமாகவே முயற்சி செய்துவிட்டது. ஆனால் நாங்கள் நிறையபேர் இருக்கிறோம். கேட்டுக்கொண்டே இருப்போம். இங்கு குழந்தைகள், கர்ப்பிணிகள் என்று அனைவரும் கூடியுள்ளோம். அவர்களுக்குத் தெரியும்; இந்தத் திட்டம் நிறைவேறினால் எங்கள் வாழிடம் அழியும் என்று. பிறகு எங்கள் குழந்தைகளை எங்கே வளர்ப்பது?"

Photo Courtesy: The Nature Conservancy

Sponsored


அமேஸான்... உலகின் அதிசயங்கள் நிறைந்த பசுமைக் கவசம். இயற்கையின் எண்ணிலடங்காச் செயற்பாடுகளுக்குப் பேருதவி புரியும் பெரும் பங்கு வகிக்கும் காடுகளில் முதன்மையானதும் முக்கியமானதும் அமேஸான் காடுகள். ஊரும் பாம்புகளும், நடனமாடும் பட்டாம்பூச்சிகளும், ஈரப்பதம் நிறைந்த நிலங்களில் வாழும் ஆச்சர்யம் தரும் பல்வேறு விலங்குகளும் வாழும் அந்தக் காடுகள் பிரேசில், பொலிவியா, பெரு தென் அமெரிக்க நாடுகள் வரைப் பரவி நீள்கிறது அதன் பரப்பளவு. இயற்கை மனம் நிறைந்த மரக்கூட்டங்களுக்கு மத்தியில் அவற்றோடு கலந்து அவற்றில் ஒன்றாகப் பலவகை மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்தப் பழங்குடிகளில் ஒரு வகை தான் முண்டுருக்கு (Mundurukku) மக்கள்.

Sponsored


Photo Courtesy: The Map of Life

பிரேசில் நாட்டின் அமேஸான் காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் டபேஜோ என்ற நதியோரத்தில் பல நூற்றாண்டுகளாகத் தங்கள் நாகரிகத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். பிரேசில் அமேஸான் காடுகளின் இதயமாகக் கருதப்படுவது இந்த டபேஜோ நதி. உணவு, போக்குவரத்து போன்ற தனது அன்றாடத் தேவைகளுக்கும், தங்கள் கலாசார நம்பிக்கைகளுக்கும் அந்த ஆற்றையே சார்ந்து வாழ்கிறார்கள் இவர்கள். ஜீவனாகக் கருதப்படும் நதியைக் காப்பாற்ற அந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். பிரேசில் நாட்டின் நீர் மேலாண்மை அந்த நதியின் நீரைத் தேக்கி வைப்பதற்காக அதன் குறுக்கே பெரிய அணையொன்று கட்ட முயன்றது. அந்த அணை கட்டப்பட்டிருந்தால் முண்டுருக்கு மக்கள் வாழும் சுமார் 46000 ஏக்கர் பரப்பளவு முழுவதுமாக வெள்ளத்தால் மூழ்கடிக்கப் பட்டிருக்கும்.

Photo Courtesy: The Map of Life

தங்கள் வாழிடத்தையே அழிக்கக்கூடிய அந்தத் திட்டத்தை எதிர்த்துப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த முண்டுருக்கு மக்களுக்கும் பல சமூக ஆர்வலர்களுக்கும் வெற்றிக் கனியாக அணை கட்டும் திட்டத்தை பிரேசில் அரசாங்கம் நிரந்தரமாக நிறுத்தியது. அங்கு வாழும் 12000 முண்டுருக்கு மக்களின் வாழிடம் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் அந்த ஆற்றின் குறுக்கே இந்தப் பெரிய அணைக்குப் பதிலாக ஆங்காங்கே சிறு சிறு அணைகளாக 40 அணைகள் கட்டப்படப் போகிறது. அது இவர்களின் வாழிடத்தை வெள்ளமயமாக்காது என்றாலும் அவர்களின் இயற்கை வாழ்வாதாரத்தைப் பாதிப்பது உறுதி.
இதற்கான ஒரே தீர்வு அவர்களின் வாழிடத்தை அந்நியர்கள் ஆக்கிரமிக்காத வகையில் அரசாங்க அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதற்கான போராட்டங்களையும் பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் முண்டுருக்கு மக்கள். அதன் ஒரு பகுதியாக அவர்களின் வாழ்வாதாரத்தில் டபேஜோ நதியும் அதன் வனப்பகுதிகளும் தங்கள் வாழ்வாதாரத்தில் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். "வாழ்வின் வரைபடம்" (The Map of Life) என்ற தலைப்போடு அவர்கள் வெளியிட்ட வரைபடத்தை மக்கள் மத்தியில் விநியோகித்து விழிப்புஉணர்வு  ஏற்படுத்துகிறார்கள். பிரேசில் மந்திரி சபையிலும் அதைச் சமர்ப்பித்து நீதிகேட்டுப் போராடுகிறார்கள்.

Photo Courtesy: The Map of Life

இந்தப் போராட்ட வியூகம் வித்தியாசமானது. தங்கள் வாழிடம் பறிபோவது பற்றி மக்கள் மத்தியில் வெகு எளிதில் கொண்டுசேர்க்கும் விதமாக அவர்கள் தயாரித்த வரைபடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக பிரேசில் சாமானிய மக்களும் லட்சக்கணக்கில் அவர்களுக்காகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். "நதியின் ஓட்டத்தைத் தடுக்காமல் அதை உயிர்ப்புடன் வைப்பதுவே வனத்தைப் பாதுகாக்கும். அத்தோடு அதைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும். வரைபடம் நமது ஆயுதம். நாம்தான் நம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்" என்ற முண்டுருக்கு போராளிகளின் தலைவர் புருனோ காபாவின் வாக்கியங்களோடு தொடங்குகிறது அந்தப் பிரசுரம்.

Photo Courtesy: The Map of Life

அந்த நிலத்தில் வேற்று மனிதர்களால் தீண்டப்படாத பல பகுதிகள் உள்ளன. அங்கு வளரும் அகாய்  கொபைபாஸ் போன்ற பழ மரங்கள் குரங்குகள், ஜக்கு பறவைகள் என்று அனைத்திற்கும் உணவு வழங்குகிறது. அங்கு அணைகள் கட்டப்பட்டு நதிநீர் தடுக்கப்பட்டால் அந்த மரங்கள் நீரின்றி அழியத்தொடங்கும். அது அனைத்து உயிர்களின் உணவாதாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும். அந்த மக்களுக்கும் தான். அவர்கள் அந்த மரங்களைப் புனிதத் தன்மை நிறைந்ததாகக் கருதுகிறார்கள். அங்கே மீன்கள் இணைசேர ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதில்லை. முதல்முறை இணைசேர்ந்த இடத்திற்குத் தான் திரும்பத் திரும்ப வரும். ஒருவேளை அந்தப் பகுதியில் நீரோட்டம் இல்லையென்றால் அங்கு நீரோட்டம் மீண்டும் வரும்வரை காத்திருக்குமே தவிர வேறு இடம் தேடிச் செல்லாது. ஒருவேளை அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்பட்டால் பல இடங்களில் மீன்கள் காத்திருந்தே உயிர்விட வேண்டியது தான்.

Photo Courtesy: The Map of Life

அந்த வரைபடத்தில் அவர்கள் காடுகள், ஏரிகள், அங்கு இருக்கும் மூலிகை மருத்துவங்கள் என்று அனைத்தையும் காட்டுகிறார்கள். அவர்கள் தற்காத்துக்கொள்ளத்  துடிப்பது அவர்களுக்காக மட்டும் அல்ல, அனைவருக்கும் தான் என்று எடுத்துரைக்கிறார்கள். அங்கு வாழும் உயிர்கள் யாவும் மற்ற இடங்களுக்கு மாறும் தன்மை கொண்டவை அல்ல. அங்கு மட்டுமே வாழ்பவை. அமேஸான் ஆமைகளில் பல வகைகளுக்கு அந்தப் பகுதியே தாய்வீடு போன்றது. ஒருவேளை அரசு அணைகள் கட்டினால் அந்த ஆமைகள் எங்கே சென்று முட்டையிடும். இவ்வாறு அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான மரங்கள், பறவைகள், மீன்கள், ஆமைகள் போன்ற அனைத்தின் வாழ்வையும் கேள்விக்கு உள்ளாக்கும் அழிக்கும் அந்தத் திட்டத்தை எதிர்த்து அவர்கள் போராடி வருகிறார்கள்.

"இங்கே அழுவது நாங்கள் மட்டுமல்ல, எங்களிடம் உதவி கேட்பவர்களை நாங்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறோம். இங்கு வாழும் மீன்கள் உதவி கேட்டுக் கதறுகின்றன, மரங்கள், வன விலங்குகள் அனைத்துமே உதவி கேட்டுக் கதறுகின்றன. அணை கட்டப்பட்டு வெள்ளம் வரும்போது கொபைபாஸ் மரங்கள் தான் முதலில் அழியும். ஏனென்றால் அவைதான் அற்றின் அருகே இருக்கின்றன." 

உடைக்கப்படக் கூடாத, தொடக்கூடாத விஷயங்களை வெள்ளையர்கள் புனிதமானதாகக் கருதுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை என்பது மட்டும் நிதர்சனம். அதனால் தான் அவர்கள் புனிதமான ஆறுகளை அழிக்கப் பார்க்கிறார்கள். முண்டுருக்குக்களைத் துன்பத்தின் வாயிலில் தள்ளுகிறார்கள். அந்த மக்கள் கூறுவது ஒன்று மட்டும்தான். "அரசாங்கமே எங்கள் ஆறுகளைத் தொடாதே. நாங்கள் மதித்துப் போற்றுவதை அழிக்க முயற்சிக்காதே..."Trending Articles

Sponsored