இந்த விலங்குகளுக்கு கரு உருவாவதே போராட்டம்தான்! - ஆண்பாவம் கதைகள்Sponsoredமனித இனத்தில் பேரு காலம் பத்து மாதங்கள் என்றால் யானைக்கு இரண்டு வருடங்கள். சுறா மீனுக்கு 3.5 வருடங்கள்.  இனப்பெருக்கத்தை பொழுது தாய்மை அடைகிற பெண் உயிரினங்கள் தங்களுடைய கருவைக் காப்பாற்றிக்கொள்ளவே பெரிய போராட்டத்தை நிகழ்த்துகின்றன. ஆனால், ஆண்கள் கருவை உருவாக்கவே பெரிய போராட்டத்தை சந்திக்கின்றன.  இனப்பெருக்கத்திலும், பிள்ளை பெறுவதிலும் இயற்கை பல சுவாரஸ்யங்களைக் கொண்டிருக்கிறது. அதிலும் சில உயிரினங்களில் அப்பாக்களை கொன்ற பிறகே பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றன.

கறுப்பு விதவை சிலந்தி - BLACK WIDOW

Sponsored


இவ்வகை பெண்  சிலந்திகள் வலையை விரித்து தன்னுடைய உணவுக்காகக் காத்திருக்கின்றன. தெரியாமல் வந்து வலையில் சிக்குகிற பூச்சிகளை அதன் வலைகளைக் கொண்டு சிறைப்பிடித்து உணவாக அவை எடுத்துக்கொள்கின்றன. கறுப்பு ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியோடு இணைவதற்குப் பெண் சிலந்தியின் வலை மூலமாக அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தெரியப்படுத்தும். “நான் உன்னுடைய உணவல்ல, உன்னுடைய ஆண் நண்பர்” என தன்னுடைய எட்டுக் கால்களையும் பயன்படுத்தி நடனமாடிக்கொண்டே பெண் சிலந்தியை நெருங்கும். பெண் சிலந்தியும் ஆண் சிலந்தியை வரவழைத்து அதனோடு இணை சேரும். ஆண் சிலந்தி தன்னுடைய உயிரணுவைப் பெண் சிலந்திக்குள் செலுத்தும். இனப்பெருக்க செயல் முடிவடைந்ததும் ஆண் சிலந்தியின் நடனம் முழுவதுமாக நிற்கும். அதற்காகவே காத்திருந்தது போல உடனே பெண் சிலந்தி தன்னுடைய வலை மூலம் ஆண் சிலந்தியை சிறைப்பிடிக்கும். அதோடு ஆண் சிலந்தியின் வாழ்க்கை அவ்வளவுதான். பொறுத்திருந்து பெண் சிலந்தி ஆண் சிலந்தியை உணவாக்கிக் கொல்லும்.

Sponsored


பிரெயிங்  மேன்டிஸ் - PRAYING MANTIS

பெண் மேன்டிஸ் தன்னுடைய இனப்பெருக்க காலத்தை ஒருவித திரவத்தின் மூலம் ஆண் மேன்டிஸுக்கு தெரியப்படுத்தும். காற்றில் பரவுகின்ற திரவத்தின் வாசனையைத் தெரிந்து கொள்கிற ஆண் மேன்டிஸ் பெண் மேன்டிஸ் இருக்கிற இடத்துக்குக் கிளம்பும். பெண்ணை விட ஆண் மேன்டிஸ்கள் அளவில் சிறியவை. ஆண் மேன்டிஸுக்காக காத்திருக்கிற பெண் மேன்டிஸ் தன்னுடைய முகத்துக்கு நேராக வரும் ஆண் மேன்டிஸை அப்படியே பிடித்து அதன் கை, கால், தலை என ஒன்று விடாமல் சாப்பிட்டு விடும். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல ஆண் மேன்டிஸ்கள் பெண் மேன்டிஸிடம் இரையாகி இருக்கின்றன. பெண் மேன்டிஸ் இனப்பெருக்க நேரத்தில் முட்டைகளை உற்பத்தி செய்ய அதற்குப் பல மடங்கு சக்தி தேவைப்படும். அதற்காக தன்னுடைய முகத்துக்கு முன்னால் வருகிற ஆண் மேன்டிஸ்களை கொன்று தின்றுவிடும். சில புத்திசாலி ஆண் மேன்டிஸ்கள் பெண் மேன்டிஸுக்கு பின்னால் வந்து இனப்பெருக்க செயலைத் தொடக்கி விடுகின்றன. பெண் உடலுக்குள் ஆண் தன்னுடைய உயிரணுக்களைச் செலுத்துகிற நேரத்தில்தான் அந்தச்  சம்பவம் நடக்கும். உயிரணுக்களைச் செலுத்துகிற நேரத்தில் பெண் மேன்டிஸ் ஆண் மேன்டிஸ் தலையைப் பிடித்து உண்ண ஆரம்பித்து விடும். பத்து நொடிகளில் ஆண் தலையை முழுவதுமாக தின்று முடித்து விடும். இப்போது ஆண் மேன்டிஸின் உடல் ஆட்டோ பைலட் மோடுக்கு மாறிவிடுகிறது. இப்போதும் ஆண் உடல் பெண் உடலுக்குள் உயிரணுக்களை செலுத்திக் கொண்டிருக்கும். இனப்பெருக்க செயல் முடிந்ததும் பெண் மேன்டிஸ் ஆண் மேன்டிஸின் உடலை மொத்தமாகச் சாப்பிட்டு விடும்.

ஆழ்கடல் ஆக்டொபஸ் - DEEP SEA OCFeTOPUS

Female Argonaut / Photo : Julian Finn

மேற்கூறியவற்றை விட சுவாரஸ்யமான உயிரினம் ஆக்டொபஸ். Argonaut என்கிற ஒரு வகை  பெண் ஆக்டொபஸ்கள் இனப்பெருக்கத்தின் பொழுது ஆண் ஆக்டொபஸ்களை கொன்றுவிடுகின்றன. பெண் ஆக்டொபஸ்களைவிட ஆண் ஆக்டொபஸ்கள் உருவத்தில் சிறியவை. அதனால் இனப்பெருக்க செயலின்  முடிவின் பொழுது எளிதாகக் கொன்றுவிடுகின்றன. உயிருக்கு ஆசைப்படுகிற ஆண் ஆக்டொபஸ்கள் இனப்பெருக்க செயல் நடந்துகொண்டிருக்கும்பொழுதே தன்னுடைய இனப்பெருக்க உறுப்பைத் துண்டித்துவிட்டு தப்பி விடுகின்றன. தப்பிப் போகிற ஆண் ஆக்டொபஸ் 2 மாதங்களில் உயிரிழந்து விடும். பெண் ஆக்டொபஸ் முட்டைகள் இட்டதும் இறந்துவிடுகிறது. ஆக்டொபஸ் இனத்தில் முக்கியமான ஒரு வகை DEEP SEA OCTOPUS இவ்வகை ஆக்டொபஸ்  இனப்பெருக்கம் முடிந்த பிறகு தன்னுடைய முட்டைகளை சுமார் 4.5 வருடங்கள் உடலில்  சுமக்கிறது. கடலில் வாழ்கிற மற்ற ஆக்டொபஸ்களின் வாழ்நாளைவிட இது மூன்று மடங்கு அதிகம். 4.5 வருடங்கள் கழித்து முட்டையிடுகிற ஆக்டொபஸ் 14 மாதங்கள் தன்னுடைய முட்டைகளை அடைகாக்கிறது. அதன் பிறகே அதன் குட்டிகள் வெளியே வரும். Trending Articles

Sponsored