சம்மர் கிளாஸோ, பாட்டி வீடோ...குழந்தைகளுக்கு அவசியம் இதைப் பழக்குங்கள்! #GoodParentingSponsored``உங்கள் குழந்தைகள் கோடை விடுமுறையைப் பாட்டி வீடு, மாமா வீடு எனச் சொந்தங்களுடன் உறவாடிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது, மியூசிக் கிளாஸ், இந்தி கிளாஸ் என எதிர்காலப் பாதைக்கான அடித்தளத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்களா? இந்த இரண்டில் எதைச் செய்துகொண்டிருந்தாலும் சரி, அவற்றுடன் இன்னும் சில விஷயங்களையும் சொல்லிக்கொடுங்கள். அவை, உங்கள் பிள்ளைகளைச் சமூகத்தின் மேல் அக்கறையுள்ளவர்களாக மாற்றும்'' என்கிறார், `சீட்' பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஜெயா சாஸ்திரி. குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் அவசியம் சொல்லித்தர வேண்டிய விஷயங்களைப் பகிர்கிறார்.

சுத்தம் பற்றி சொல்லிக்கொடுங்கள்!

Sponsored


உங்கள் குழந்தை வளர்ந்து சமூகத்துக்குப் பயன்படுகிறவர்களாக இருக்க, ஐந்திலேயே வளைக்கப்பட வேண்டும். 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, தினமும் குளிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள். ஐந்து வயதுக்குப் பிறகு, அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

Sponsored


அவர்களை வெளியே அழைத்துச் சென்ற இடத்தில் சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள். 

வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள்.

அப்பார்ட்மென்ட்களில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஆளுக்கு ஒரு மாடியை என்று சுத்தம்செய்ய பழக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு டஸ்ட் அலர்ஜி பிரச்னை இருந்தால், அவர்கள் ஷெல்ஃபை மட்டும் சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.

தெருவில் எச்சில் துப்பினால், எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று சொல்லிக்கொடுங்கள்.

மிகமுக்கியமாக, மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள்.

செடி வளர்ப்பைச் சொல்லிக்கொடுங்கள்!

சின்னச் சின்னத் தொட்டிகளில், சிறு சிறு செடிகளை (தக்காளி, பூ) அவர்கள் கைகளால் வளர்க்கப் பழக்குங்கள். செடிகளுக்கும் உயிர் இருக்கிறது, அவற்றைச் சேதப்படுத்தக் கூடாது எனச் சொல்லிக்கொடுங்கள். உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால், பிள்ளைகள் கையாலேயே மண்ணைக் கொத்தி விதைப் போட்டு தண்ணீர்விடப் பழக்குங்கள். காய்கறிச் செடிகள் இருந்தால், அந்தக் காய்கறிகளை அவர்கள் கைகளாலே பறித்துத் தரச்சொல்லுங்கள்.

கதை சொல்லுங்கள்!

காலையில் அரக்கப்பரக்க எழுப்பி, பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பவேண்டிய போராட்டம் இன்னும் சில வாரங்களுக்கு இல்லை. எனவே, இரவு நேரத்தில் கதை சொல்லி, நிதானமாகத் தூங்கவைக்கலாம் இல்லையா? நிறைய கதைகள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கேற்ப விலங்குக் கதைகள், நீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள் எனச் சொல்லுங்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு விக்கிரமாதித்தன் கதைகளைச் சொல்லி அதில் வரும் புதிர்களுக்குப் பதில் சொல்லவையுங்கள். வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என நாம் சொல்லித் தருவதைவிட கதைகள் சுலபமாகச் சொல்லித் தந்துவிடும்.

இல்லங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்!

உங்கள் குழந்தைக்கு 7 அல்லது 8 வயது ஆகிவிட்டதா? அவர்களின் பிறந்தநாளின்போது, ஆதரவற்ற குழந்தைகளின் இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அழைத்துச்சென்று, அந்த இடத்தில் கொண்டாடுங்கள். இதுபோன்ற கோடை விடுமுறை நாள்களில் சாதாரணமாகவே அழைத்துச்சென்று விளையாட விடுங்கள். முக்கியமாக, சிம்பிளான டிரெஸ்ஸில் அழைத்துச் செல்லுங்கள். அங்குள்ள  குழந்தைகளுடன் உடன்பிறந்தவர்போல கலந்து பழகட்டும். தன் வயதுடைய பிள்ளைகளின் கஷ்டங்கள் புரிந்து, உதவிசெய்ய இதுதான் தருணம்.

சம்மர் கோச்சிங் வகுப்புகளும் தேவைதான். அதனினும் அதிகமான தேவை, வாழ்க்கையை இயல்பாக வாழ்வது. அதை இந்தக் கோடை விடுமுறையிலிருந்து கற்றுத்தர ஆரம்பிக்கலாமே!Trending Articles

Sponsored