அக்ரி கமாடிட்டி - இந்த வாரம் எப்படி இருக்கும்?Sponsoredஅக்ரி கமாடிட்டி:

மென்தா ஆயில்:

Sponsored


மென்தா ஆயில் என்பது ஒரு அக்ரி கமாடிட்டி என்பதால், அதன் விலை நகர்வு என்பது, உள்நாட்டு உற்பத்தி, அயல்நாட்டு தேவை போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நகர்கிறது. மென்தா ஆயில் விலையானது, மற்ற எல்லாப் பொருள்களைவிட அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டது ஆகும். அதை நிரூபிப்பது போல, சென்ற வாரம் நல்ல ஏற்றத்தைக் காட்டி அதிக நம்பிக்கையை கொடுத்தாலும், பின் அதே அளவு வேகத்தில் இறங்கி, ஏற்றத்தின் பெரும்பகுதியை இழந்தது.

Sponsored


முந்தைய இதழில் சொன்னது...

`மென்தா ஆயில் படிப்படியாக ஏறி வரும் நிலையில், அடுத்து 1325 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதை உடைத்தால் புதிய ஏற்றம் வரலாம். கீழே 1270 என்பது உடனடி ஆதரவாக உள்ளது..''

மென்தா ஆயில் கடந்த வாரம் திங்கள் அன்று ஒரு வலிமையான கேப் அப்பில் தொடங்கியது. நாம் கொடுத்து இருந்த முக்கிய தடைநிலையான 1325 ஐ உடைத்து ஏறியது. சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி, தொடர்ந்து பக்கவாட்டு நகர்விலிருந்து வரும் மென்தா ஆயில், மேல் எல்லையை உடைத்து ஏறும்போது மிக வலிமையாக ஏறியது. திங்கள் அன்று வலிமையாக ஏறியது மட்டும் அல்ல, அந்த நாளின் உச்சமான 1352 என்ற எல்லையிலேயே முடிந்ததும், குறிப்பிடத்தக்கது. திங்கள் அன்று பலமாக முடிந்த மென்தா ஆயில், செவ்வாய் அன்று மீண்டும் பலமாக ஏற ஆரம்பித்து, மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தோற்றுவித்தது. செவ்வாய் அன்று காலையிலேயே அதிகபட்சமாக 1396 என்ற உச்சத்தை தொட்டபிறகு, அந்த உச்சத்தை தக்கவைக்க முடியாமல், இறங்கி குறைந்தபட்ச புள்ளியாக 1354 என்ற எல்லையைத் தொட்டு முடியும்போது 1372 என்ற புள்ளியில் முடிந்தது. இந்தச் சூழல் காளைகளின் முயற்சியை முறியடிக்க கரடிகள் களத்தில் இறங்கியதை தெளிவாகக் காட்டுகிறது. அடுத்து புதன் அன்று, காளைகள் செவ்வாய் அன்று இழந்த புள்ளிகளை மீட்டு எடுத்தனர். ஆனால் கரடிகள், மீண்டும் களத்தில் இறங்கி, முந்தைய நாள் உச்சமான 1396 ஐ தாண்டவிடாமல் காளைகளை தடுத்தனர். இரண்டு நாள்களாகத் தடுக்கப்பட்ட 1396 என்ற உச்சம், இப்போது முக்கிய தடைநிலையாக மாறுவதை காணமுடிகிறது. வியழான் அன்று கொஞ்சம் வலிமை குன்றியே இறங்கிய மென்தா ஆயில், முடியும்போது 1380 என்ற எல்லையில் முடிந்தது. இந்த நிலையானது, கரடிகள் விலையை இறக்குவதற்கு முனைப்பாக இருந்த முதல்கட்டமாகப் பார்க்கமுடிகிறது. அடுத்து வெள்ளி அன்று மென்தா ஆயில் விலை சற்றே வலிமை குன்றி இறங்கி, அந்த நாள் முழுவதும், தொடர்ந்து இறங்குமுகமாகவே மாறியது. முடியும்போது அந்த நாளின் குறைந்தபட்ச புள்ளியான 1333 என்ற அளவில் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

மென்தா ஆயிலின் முந்தைய தடைநிலையான 3125 தற்போது முக்கிய ஆதரவாகமாறலாம். மேலே 1380 என்பது உடனடித் தடைநிலை. அதற்கு மேலே 1396 என்பது மிக வலிமையான தடைநிலையாகும்.

காட்டன்:

காட்டன் வியாபாரிக்களுக்கு ஏறுமுகமான ஒரு வாரமும், அடுத்து இறங்குமுகமான வாரமும் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. காட்டன் முந்தைய வாரம் நன்கு ஏறி முடிந்திருந்த நிலையில், சென்ற வாரம் அதற்கு தலைகீழாக இறங்கி முடிந்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது ``காட்டன் இன்னும் ஒரு குறுகிய எல்லைக்குள் சுழல்வதாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலே 21100 இன்னும் வலிமையான தடைநிலை ஆகும். கீழே 20280 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.’’

காட்டன் சென்ற வாரத்தில், திங்கள் அன்று ஒரு வலிமையான ஏற்றத்தில் ஆரம்பித்தது. அதாவது காலையில் 20900 என்று வலிமையான கேப், அப்பில் தொடங்கி உச்சமாக 21040 ஐயும் தொட்டது. ஆனால், அந்த உச்சத்தை தக்கவைக்க முடியாமல் 20920 என்ற புள்ளியில் முடிந்தது. எனவே, அது டோஜிவகை கேன்டிலாக முடிவடைந்தது. இதற்கு என்ன அர்த்தம், தொடர்ந்து ஏற முடியவில்லையே என்பதாகும். அதன் பின் அந்த வாரம் முழுவதும் படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. வாரத்தின் முடிவில் 20630 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

காட்டன் கடந்த வாரம் இறங்கினாலும், 20580 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. இந்த எல்லை தக்கவைக்கப்பட்டால் ஒரு ஏற்றம் வரலாம். மேலே 20840 எனபது உடனடி தடைநிலையாகும்.

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம்   www.ectra.inTrending Articles

Sponsored