மொபைல், லேப்டாப், டி.வி... ஃப்ளிப்கார்ட், அமேசான் கோடை ஆஃபர்களில் டாப் ஹிட் எது?Sponsoredநம்மூரில் ஆடி மாதம், பொங்கல், தீபாவளி என சில குறிப்பிட்ட மாதங்களில்  மட்டும்தான் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை விலைகளில் பொருட்களை விற்பனை செய்வார்கள்.  ஆனால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அப்படியில்லை, குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆஃபர்களை அள்ளிக் கொடுப்பார்கள். இப்பொழுது கோடைக்கால  ஆஃபர்களை தரத் தயாராகியிருக்கின்றன இந்தியாவின் இரண்டு பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள். சில நாள்களுக்கு முன்னர் ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் என்ற பெயரில்  ஆஃபர்களை அறிவிக்கத் தனது பங்குக்கு அமேசானும் சம்மர் சேல் என்ற பெயரில் ஆஃபர்களை அறிவித்திருக்கிறது.

இரண்டு சேல்களுமே இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை நடைபெறும். எச்.டி.எப்.சியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக வாங்கும்போது 10% உடனடி கேஷ்பேக் அளிக்கிறது ஃபிளிப்கார்ட். அமேசானில்  ஐ.சி.ஐ.சி.ஐ கார்டுகளுக்கு  10% உடனடி கேஷ்பேக் உண்டு. இரண்டிலும் இருக்கும் சிறந்த ஆஃபர்கள் இவை.

Sponsored


ஸ்மார்ட்போன்கள்

Sponsored


ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் பட்ஜெட் முதல் பிளாக்ஷிப் மாடல்கள் வரை  ஆஃபர்களை தருகிறது ஃப்ளிப்கார்ட்.  Honor 9 Lite ஸ்மார்ட்போனின் 3 GB RAM + 32GB வேரியன்ட் 9,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.  Honor 9i ரூ. 15,999-க்கு கிடைக்கிறது.  Infinix Note 4 மொபைல் 6,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.  Xiaomi Mi Mix 2 மொபைல் 25,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒரே தோற்றத்தில் இல்லாமல் சற்று புதுமையாக மொபைல் வேண்டும் என்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும்.  சாம்சங் நிறுவனத்தின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அதிகமாக விலை குறைக்கப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி  S8 ரூ. 37,990-க்கு கிடைக்கும் இதன் முந்தைய விலை 49,990 ரூபாய். கேலக்ஸி  S8 பிளஸ் 43,990 ரூபாய்க்குக் கிடைக்கும் இதற்கு முன்னர் இதன் விலை ரூ.53,990.  Galaxy On Nxt மொபைல் 10,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அமேசானைப் பொறுத்தவரையில்  Moto G5S Plus ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.  Redmi 5 ரூ.7,499-க்கு கிடைக்கிறது. இது தவிர 15-ம் தேதி   Realme 1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது.

லேப்டாப்

Lenovo Ideapad 320 மாடல் லேப்டாப் (4  GB/1 TB HDD) 26,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. MSI GL Series Core i7 7th Gen (8 GB/1 TB HDD) கேமிங் லேப்டாப் 58,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 16 GB ரேம் 1TB HDD கொண்ட  MSI GV Series Core i7 7th Gen கேமிங் லேப்டாப்பிறகு அதிகபட்சமாக 37000 ரூபாய் குறைத்திருப்பதாக கூறுகிறது ஃப்ளிப்கார்ட். இதன் விலை முன்னர்  1,19,990 ரூபாய் தற்பொழுது 82,990 ரூபாய். அண்மையில் வெளியான  Smartron t.book flex Core i5 7th Gen லேப்டாப் 49,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது.  Acer Aspire 3 Pentium Quad Core லேப்டாப் 14,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. HP 15 Core i5 8th Gen லேப்டாப்  (8 GB/ 1TB HDD) 36,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

டிவி


ஏற்கெனவே இந்திய சந்தையில் இருக்கும் டி.வி நிறுவனங்களோடு ஷியோமி, தாம்சன்,  iFFALCON என புதிய வரவுகளும் அண்மையில் சேர்ந்து கொண்டதையடுத்து  சந்தையில் கடும் போட்டியை உருவாகியிருக்கிறது இந்த மூன்று நிறுவனங்களின் தயாரிப்புகளும் இந்த சேலின் போது விற்பனைக்கு வருகின்றன.  Thomson 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை 13,499 ரூபாய்க்கும், ஷியோமி 13,999 ரூபாய்க்கும்,   iFFALCON 13,499 க்கும் கொடுக்கிறது. இவை மூன்றும் தொழில்நுட்பத்தில் அப்டேட்டான வசதிகளைக் கொண்டிருக்கின்றன. 

இவைத் தவிர பல விதமான மொபைல் ஆக்ஸசரீஸ்கள், கேமராக்கள், பவர்பேங் என மற்ற பொருள்களுக்கும் இந்த மூன்று நாட்களில் ஆஃபர் விலையில் கிடைக்கும்.Trending Articles

Sponsored