இனி, யாரிஸ் காரை எல்லா டொயோட்டா ஷோரூம்களிலும் பார்க்கலாம்!Sponsoredசிட்டி, சியாஸ், வெர்னா, வென்ட்டோ போன்ற கார்கள் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் மிட் சைஸ் செடான் சந்தையில் மிக பொறுமையாக என்ட்ரி கொடுத்துள்ளது டொயோட்டா. யாரிஸ் மிகத் தாமதமான வருகை என்றாலும், மற்ற கார்களைவிட அதிக பாதுகாப்பும், சில செக்மன்ட் ஃபர்ஸ்ட் வசதிகளையும் கொடுத்து இதைச் சரிசெய்துவிடலாம் என்று வந்துள்ளார்கள்.

யாரிஸ், அதிகாரபூர்வமாக இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. டீலர்களிடம் காரின் முன்பதிவுகளும், விலையும் வந்து ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது. இப்போது அதிகாரபூர்வமாக விற்பனை தொடங்கியதால், இனிமேல் அனைத்து டொயோட்டா ஷோரூம்களிலும் யாரிஸை பார்க்கலாம். அதுமட்டுமல்ல டெஸ்ட் டிரைவும் கிடைக்கும். காரின் டெலிவரியும் முன்பதிவுகளைப் பொறுத்து 2 வாரங்களில் கிடைக்கும். 

Sponsored


Sponsored


107  bhp பவர் மற்றும் 14  kgm டார்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது யாரிஸ். இந்த கார்  J,G,V மற்றும்  VX என நான்கு வேரியன்டில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹேட்ச்பேக் மாடலோ, டீசல் இன்ஜின் மாடலோ இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று டொயோட்டா நிறுவனத்தினர் கூறிவிட்டனர். 

கரோலாவின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த காரில் 7 காற்றுப் பைகள், எல்லா வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ். மலையேற்றத்தில் கார் நின்றுவிட்டால் ஸ்டார்ட் செய்ய ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஏபிஎஸ்,  EBD மற்றும்  ESP என  செக்மன்டிலேயே அதிக பாதுகாப்பு வசதிகள் ஸ்டான்டர்டாக வருகிறது. டொயோட்டா யாரிஸின் சென்னை ஆன்ரோடு விலை,


ஆர்ப்பாட்டமில்லாத டிசைன், தரமான இன்டீரியர், சத்தமில்லா கேபின், அதிக பாதுகாப்பு வசதிகள், மனநிறைவைத் தரும் பெர்ஃபாமென்ஸ் போன்றவையும், செடான் கார் என்ற மதிப்பும் தேவைப்படுபவர்கள் யாரிஸ் பக்கம் பார்க்கலாம். பெட்ரோல் ஆட்டோமெடிக் டாப் வேரியன்டின் விலை ரூ.17.42 லட்சம் என்பது போட்டியாளர்ளைவிட மிக அதிகம் என்பதும் யோசிக்கவைக்கிறது.Trending Articles

Sponsored