`மரத்தடியில் ஓய்வெடுக்க பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன திண்ணை!’ - வாட்டே ஐடியா சார்ஜிSponsoredடந்த வருடம் உடைந்த தடுப்பணையை ராஜபாளையத்தைச் சேர்ந்த சமுசிகா புரம் பஞ்சாயத்து மக்கள், அரசின் உதவியை எதிர்பார்க்காமல் தாங்களே சரி செய்து கொண்டனர். இதனால் பல ஆண்டுகளாக வீணாகிய 15 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை அகற்றுதல், நீர் நிலைகளைத் தூர்வாருதல் எனப் பல பணிகளை அக்கிராம இளைஞர்கள் செய்துவந்தனர். இதன் அடுத்தபடியாக கிராமங்களில் மக்கள் வீணாகத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு அக்கிராம சிறுவர்களும், இளைஞர்களும் திண்ணைகளை அமைத்து வருகிறார்கள். இதன் ஒருங்கிணைப்பாளரான, முத்துக்குமாரிடம் பேசினோம். 

``மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகப்படுத்தித் தூக்கி எறிந்து விடுவார்கள். அல்லது மொத்தமாக எரித்து விடுவார்கள். இதனால் சுற்றுச்சூழல் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வந்தது. நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக்குகள் நிறைந்து காணப்பட்டன. இதனால் மக்களிடம் பிளாஸ்டிக்குகளை உபயோகப்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால் பெரும்பாலானோர் நிறுத்தியதாகத் தெரியவில்லை. அதனால் வாட்ஸ் அப் குரூப் மூலம் `உபயோகிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை மொத்தமாக வையுங்கள். நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்’ என்று தகவல் சொன்னோம். மக்களும் மொத்தமாகப் பாட்டில்களை எடுத்து வைத்திருந்தனர். கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களும், இளைஞர்களும் ஒவ்வொரு வீடாகச் சென்று பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கி வந்தனர். மொத்தமாக 450 பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடைத்தன. அதை வைத்து சுற்றுச்சூழலுக்குக் கேடு வராத வகையிலும், மக்களுக்குப் பயனுள்ள வகையிலும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. 

Sponsored


Sponsored


முதலில் இதனைக் கொண்டு இருக்கை அமைத்துப் பார்ப்போம் என்ற எண்ணம் தோன்றியது. அதற்குக் காரணம், எங்கள் ஊரில் மரங்கள் அதிகமாக உண்டு. ஆனால் அதன் அடியில் அமர்வதற்குத்தான் திண்ணை இல்லை. பிளாஸ்டிக் திண்ணை கட்ட ஆரம்பிக்கும்போது உறுதியாக நிற்குமா என்று சந்தேகம் வந்தது. முதலில் ஒரு திண்ணைக் கட்டித்தான் பார்ப்போமே என்று கட்ட ஆரம்பித்தோம். அதற்கு முதலில் நாங்கள் வாங்கிய பிளாஸ்டிக் பாட்டில்கள் உறுதியாக நிற்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் சிறு காற்று இருந்தாலும் திண்ணை சரிந்து விடும். எனவே, அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மண்ணை அழுத்தி காற்று புகாதவாறு அடைத்தோம். மண்ணை அடைக்கும் வேலைகளைச் சிறுவர்கள் எடுத்துக்கொண்டனர். ஏற்கெனவே தடுப்பணை கட்டும்போது மீதமிருந்த செங்கல்லும், மணலையும் பயன்படுத்திக் கொண்டோம். இரண்டு நாளைக்கு முன்னர் அனைவரும் ஒன்று திரண்டு கொத்தனார் கூலி, 2 மூட்டை சிமென்ட் எனச் செலவு செய்து கட்டினோம். இதற்கு வெறும் 2 ஆயிரம் ரூபாய்தான் செலவானது. இப்போது நாங்கள் கட்டிய திண்ணை உறுதியாக நிற்கிறது.

இது ஆரம்பம்தான். இனி வீணாகும் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து இதுபோன்ற திண்ணைகளையும், ஓய்வெடுக்கும் அறைகளையும் கட்டப் போகிறோம். இதில் ஒரே சவாலான விஷயம், இச்செயலில் ஈடுபடும் இளைஞர்கள் அனைவரும் வேலைக்குப் போய்க் கொண்டிருப்பவர்கள். அதனால் நேரம் குறைவாகத்தான் ஒதுக்க முடிகிறது. அந்த நேரங்களிலாவது மக்களுக்கும் சொந்த கிராமங்களுக்கும் நன்மை செய்ய முயற்சிகளை எடுத்து வருகிறோம். முன்னர் புதுப்பித்த தடுப்பணையையும் கிராம இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைத்தோம். எங்கள் கிராம இளைஞர்கள் செய்த செயலைக் கண்டு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இதுபோக இனி பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகப்படுத்த மாட்டோம் எனவும் சொல்கிறார்கள். அவரவர்களுடைய கிராமத்தைக் காக்க இளைஞர்கள் அதிகமாக முன்வர வேண்டும். 

இதையே அரசுத் தரப்பில் கட்டியிருந்தால் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாய் வரை செலவானது எனக் கணக்குக் காட்டப்பட்டிருக்கும்!Trending Articles

Sponsored