ஜடேஜா மனைவிக்கு நிகழ்ந்தது நாளை உங்களுக்கு நிகழ்ந்தால்... என்ன செய்ய வேண்டும்?Sponsored`காவல்துறைங்கிறது ஒரு சமூகத்துக்குத் தகப்பன் மாதிரி. அதனால்தான் பப்ளிக் தப்பு பண்ணினால் அடிக்கும் உரிமையை அவங்களுக்குக் கொடுத்திருக்காங்க' என்று `ரமணா' படத்தில் விஜயகாந்த் ஒரு டயலாக் பேசுவார். ஆனால், இன்றைக்குப் பொதுமக்களுக்குத் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கவேண்டிய காவல்துறை, பெண்களைப் பொதுவெளிகளில் கன்னத்தில் அறைந்துகொண்டிருக்கிறது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராகப் போராடிய திருப்பூர் பெண்களை அடித்த காக்கிச்சட்டை, இப்போது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி, ரிவபாவை நடுரோட்டில் தாக்கியிருக்கிறது. இதுபோல நாளை மற்ற பெண்களுக்கும் நிகழாது என்பது என்ன நிச்சயம்? அப்படியோர் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அடுத்து சட்டப்படி என்ன செய்வது என வழக்கறிஞர் அஜிதாவும், அந்த கான்ஸ்டபிளுக்கு என்ன தண்டனை தரலாம் என அசிஸ்டென்ட் கமிஷனர் கண்ணன் அவர்களும் சொல்கிறார்கள்.

முதலில் வழக்கறிஞர் அஜிதா:

Sponsored


``காவல்துறை அதிகாரிகள் இன்னும் காலனி ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளியே வரவில்லை. தாங்கள் மக்களுக்குச் சேவை செய்யவே இந்த வேலைக்கு வந்துள்ளோம் என்கிற எண்ணமே இங்கே பலருக்கும் இல்லை. `நமக்குக் கீழேதான் எல்லாரும். நாம்தான் சூப்பர் பவர். இவங்களை உதைச்சாதான் புத்தி வரும்' அப்படிங்கிற மனப்பான்மை காவல்துறையிடம் இருக்கிறது. இந்த மனப்பான்மைக்கு எதிராக நிற்பது பெண்களாக இருந்தால், கையை ஓங்குவது அதிகமாக இருக்கிறது.

Sponsored


பொதுவெளியில் ஒரு பெண்ணை அடிப்பதால், அந்தப் பெண்ணை எந்தளவுக்கு மனவேதனைப்படுத்தும் என்பது குறித்து அந்த கான்ஸ்டபிளுக்குத் தோன்றவேயில்லை. ஒரு வக்கீலாக, சாதாரணப் பெண்களுக்குத் தினம் தினம் இப்படி நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதனுடைய கோர முகம் எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு வி.ஜ.பி.யின் மனைவிக்கு இது நிகழ்ந்துவிட்டதால் பெரிதாகப் பேசப்படுகிறது. மற்றபடி, காவல்துறையினர் மற்றவர்களை மனிதர்களாகப் பார்க்க, அவர்களை மேலதிகாரிகள் மனிதர்களாக நடத்த வேண்டும். அப்போது, மக்களை இவர்கள் தயவு தாட்சண்யத்துடன் நடத்துவார்கள். இதையும் மறுப்பதற்கில்லை'' என்றவர், இப்படியொரு சம்பவம் இன்னொரு பெண்ணுக்கு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார்.

``உங்களைத் தற்காத்துக்கொள்ள பழகுங்கள். சுயமரியாதை கற்றுக்கொள்ளுங்கள்.

இப்படிப்பட்டவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள, அடித்தால் கையைத் தடுக்கவும், திருப்பி அடிக்கவும் மனவலிமை முக்கியம். சின்னப் பூனையும் நாய் விரட்டினால், ஒரு கட்டத்தில் திருப்பி எதிர்க்கும் இல்லையா? அந்த எதிர்ப்பு, எதிராளிக்கு ஓர் அச்சத்தைக் கொடுக்கும். இதைப் பெண்கள், காக்கிச் சட்டை போட்டவர்களிடம் மட்டுமன்றி, பிரச்னை செய்யும் அத்தனை ஆண்களிடமும் அப்ளை செய்யலாம். உடனடியாக, உங்களைக் காப்பாற்றிக்கொள்ள செய்யவேண்டியது இதுதான்.

ஜடேஜா மனைவியைத் தாக்கிய விஷயத்தில், பொதுமக்களை அடிப்பது சீரியஸான நடத்தையின்மை என்பதாலும், ஜடேஜா மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பின் கடுமையைப் பொறுத்தும் அவருக்கு அதிகபட்சமாக வேலையும் போகலாம். குறைந்தபட்சமாக, காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்படலாம். தமிழ்நாட்டில் இந்தச் சம்பவம் நடந்திருந்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தால். விமன் ஹராஸ்மென்ட் சட்டத்தின் கீழ் குறைந்தது 3 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும்'' என்று முடித்தார்.

 அசிஸ்டென்ட் கமிஷனர் கண்ணன் என்ன சொல்கிறார்? 

``ஆண் என்கிற ஈகோவிலோ அல்லது யூனிபார்ம் கொடுத்த தைரியத்திலோ அவர் இப்படி நடந்திருக்கிறார். எப்படி இருந்தாலும் இது தவறு. இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஜீரணிக்கவும் முடியாது. பெண்களைத் தொட்டால், ஹராஸ்மென்ட் தண்டனை கொடுக்கிறோம் இல்லையா? அதே தண்டனைதான் இந்த கான்ஸ்டபிளுக்கும் தரப்படும். காவல்துறைக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் கிடையாது'' என்றார் உறுதியாக.  Trending Articles

Sponsored