வந்துவிட்டது மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட்Sponsoredகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது மினி கூப்பருக்கு நிச்சயம் பொருந்தும் வாசகம். சிறிய வடிவில் இருந்தாலும் செம ஸ்டைலாகவும், பவர்ஃபுல்லாகவும் இருக்கும் மினி கூப்பர் காரின் 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியாகிவிட்டது.

ரூ.29.7 லட்சம் முதல் ரூ.37.10 லட்சம் எனும் விலையில் வரும் புது கூப்பர் கடந்த ஜனவரி மாதம்தான்  ஐரோப்பிய நாடுகளில் முதல் முதலில் விற்னைக்கு வந்தது. முந்தைய மாடல்களைப் போலவே இதிலும் 3-டோர், 5-டோர் மற்றும் கன்வர்டிபிள் மாடல்கள் வருகின்றன. முதல் டைப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் இரண்டுமே வருகிறது. இரண்டாவதான 5-டோர் காரில் டீசல் மட்டுமே உள்ளது. கன்வர்டிபிள் காரில் பெட்ரோல் இன்ஜின் மட்டும்தான். ஃபேஸ்லிஃப்ட் மினியில் உருண்டையான எல்ஈடி ஹெட்லைட்டுகள் புதுசு என்று பார்த்த உடனேயே கண்டுபிடித்துவிடலாம். மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள் ஆப்ஷனாவும் கிடைக்கிறது. ப்ரிடிஷ் கொடியின் டிசைனை உள்ளே வைத்திருக்கும் பின்பக்க டெயில் லைட் ப்ரிடிஷ் கார் என்பதைக் காட்டுகிறது. மினியின் புது லோகோவும் வந்துவிட்டது.

Sponsored


Sponsored


காரின் கேபினில் புதிதாக 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வருகிறது. ஸ்போர்ட்டியான சீட்டுகள், பியானோ பிளாக் இன்டீரியர்கள் பிளாஸ்டிக்குகள் மற்றும் பிரவுன் லெதர் வேலைப்பாடுகள் உள்ளன. எல்ஈடி இன்டீரியர் மற்றும் ஏம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம் ஆப்ஷனாக வந்துவிடுகிறது. இன்னும் கூடுதலாக, சன்ரூஃப், 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன், மினியின் கனெக்டட் ஆப், வையர்லெஸ் சார்ஜிங், 20 ஜிபி ஹார்டுடிரைவ், ஆப்பிள் கார் பிளே மற்றும் 12 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் ஆப்ஷன்களாக வந்துவிடுகிறது.

பழைய கூப்பரில் இருந்து புதிய கூப்பர் S காரை உயர்த்திகாட்டுவதே இதன் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கூட்டணி. இன்ஜின் அதே 192bhp பவர் மற்றும் 282Nm டார்க் வெளிப்படுத்தகூடிய 2 லிட்டர் பெட்ரோல் டர்போ இன்ஜின்தான் என்றாலும், புதிதாக 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கூட்டணி வருகிறது. ஸ்டியரிங் பேடில் ஷிஃப்டர்கள் கொடுப்பது இன்னும் டிரைவை ஃபன்னாக்கும். கூப்பர் D மாடலில் வரும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 114bhp பவரையும் 270Nm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆனால், இந்த இன்ஜினுடன் அதே பழைய 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்தான். ஸ்டான்டர்டு, க்ரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று டிரைவிங் மோடுகளும் வருகிறது. இது சஸ்பென்ஷன் மற்றும் இன்ஜின் திறனை டிரைவரின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது. பாதுகாப்புக்கு பஞ்சமில்லாமல் 2 முன்பக்க காற்றுப்பைகள், சீட் பெல்ட், பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், கிராஷ் சென்ஸார், ஏபிஸ், கார்னரிங் பிரேக் போன்றவை ஸ்டான்டர்ட் அம்சங்கலாக வந்துவிடுகின்றன. க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, HUD போன்ற வசதிகள் ஸ்டார்டர்டாக வருகிறது. பார்க்கிங் அசிஸ்ட் வேண்டும் என்றால் கூடுதல் விலை.

*எக்ஸ்-ஷேரூம் இந்தியா விலைகள்

பிஎம்டபிள்யூ X1, மெர்சிடீஸ் A-class மற்றும் வால்வோ V40 கார்களுடன் இந்திய சந்தையில் போட்டிபோடுகிறது மினி கூப்பர். சமீபத்தில் இந்நிறுவனம் தனது புதிய கன்ட்ரிமேன் காரை விற்பனைக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored