ஃபோர்டு கார் வாங்கப்போறீங்களா... இதுதான் அவங்க பிளான்! #Ford2018Sponsoredஃபோர்டு... இந்தியாவில் யுட்டிலிட்டி வாகனச் சந்தையில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. சமீப காலத்தில் இந்த நிறுவனம் வெளியிட்ட ஃப்ரிஸ்டைல் (CUV) மற்றும் எக்கோஸ்போர்ட் S (காம்பேக்ட் SUV) ஆகியவை இதற்கான உதாரணங்கள். இதைத் தொடர்ந்து, தான் இந்தியாவில் விற்பனை செய்யும் மாடல்களின் பேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை, ஒன்றன்பின் ஒன்றாகக் களமிறக்க முடிவெடுத்துள்ளது  ஃபோர்டு.

2018 ஃபிகோ மற்றும் ஆஸ்பயர்

Sponsored


ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரிஸ்டைல் ஆகிய மூன்று கார்களும், ஒரே B562 பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகின்றன. எனவே, ஃப்ரிஸ்டைல் காரில் இடம்பெற்றுள்ள புதிய டிசைன் அம்சங்கள், பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஹெட்லைட், டெயில் லைட், கிரில், முன்பக்க & பின்பக்க பம்பர்கள், அலாய் வீல்கள் ஆகியவை புதிய தோற்றத்தில் வரும் எனத் தெரிகிறது. வழக்கமான மாடல்களில் 14 இன்ச் வீல்கள் இருந்தால், Sports மாடல்களில் 15 இன்ச் வில்கள் இருக்கும். மேலும், முன்பைப்போலவே வழக்கமான மாடலைவிட Sports மாடலின் ஸ்டீயரிங், சஸ்பென்ஷன், கேபின் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Sponsored


கேபினைப் பொறுத்தமட்டில் ஃப்ரிஸ்டைல் காரில் இருக்கும் அதே டேஷ்போர்டு இந்த இரு கார்களிலும் இடம்பெறும் என நம்பலாம். ஆனால், ஃப்ரிஸ்டைலில் சாக்லேட் - கறுப்பு நிறத்தில் கேபின் இருந்தது என்றால், ஃபிகோவில் கறுப்பு - சில்வர் நிறம் மற்றும் ஆஸ்பயரில் கறுப்பு - பீஜ் நிறத்தில் கேபின் இருக்கும் எனலாம். மேலும், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடனான லேட்டஸ்ட் 6.5 இன்ச் Sync3 டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் வழங்கப்படும் என்பது ப்ளஸ். தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் அனைத்து வேரியன்ட்களிலும் இரண்டு காற்றுப்பைகள், மூன்று பாயின்ட் சீட் பெல்ட். இன்ஜின் Immobilizer, கிலேஸ் என்ட்ரி ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் நிலையில், அது பேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடரும் எனலாம். 

இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்குமா?

ஃப்ரிஸ்டைல் போலவே ஃபிகோ மற்றும் ஆஸ்பயரிலும் 96bhp பவர் மற்றும் 12kgm டார்க்கை வெளிப்படுத்தும் புதிய 1.2 லிட்டர், Dragon சீரிஸ் Ti-VCT, மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு Getrag மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட உள்ளது. 100bhp பவர் மற்றும் 21kgm டார்க்கை வெளிப்படுத்தும் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் ஃபிகோ மற்றும் ஆஸ்பயரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு ட்வின் க்ளெட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்தது தெரிந்ததே. புதிய மாடலில் எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், புதிய பெட்ரோல் இன்ஜினுடன் ஆப்ஷனலாக வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! 

2018 ஃபோர்டு எண்டேவர்

உலகச் சந்தைகளைத் தொடர்ந்து, இந்திய கார் சந்தையிலும் எண்டேவர் எஸ்யூவி-யின் பேஸ்லிஃப்ட் மாடலை, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது ஃபோர்டு. இதில் வழக்கம்போலவே ஹெட்லைட், கிரில், முன்பக்க & பின்பக்க பம்பர்கள், அலாய் வீல்கள் (20 இன்ச்), டெயில் லைட் ஆகியவை மாறியிருக்கின்றன. கேபினில் சிற்சில மாற்றங்கள் இருந்தாலும், Sync 3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Autonomous Emergency Braking ஆகியவை புதிதாக இடம்பெற்றுள்ளன. 

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலில், புதிய 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் - 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் செட்-அப் வழங்கப்பட்டிருந்தது. இது சிங்கிள் டர்போவுடன் இருந்தால் 180bhp பவர் மற்றும் 42kgm டார்க்கை வெளிப்படுத்தும்; ட்வின் டர்போ என்றால் 213bhp பவர் மற்றும் 50kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது 2020-ம் ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் BS-VI மாசு விதிகளை மனதில்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதால், பின்னாளில்தான் இது இந்தியாவுக்கு வரும்! 

2018 ஃபோர்டு மஸ்டாங்

Muscle Car, Pony Car, American Muscle எனக் கார் ஆர்வலர்களால் செல்லமாக அழைக்கப்படும் மஸ்டாங், அடுத்த ஆண்டில் புதிய அவதாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளது. இதில் இருக்கும் 5.0 லிட்டர் V8, Ti-VCT பெட்ரோல் இன்ஜின், முன்பைவிட அதிகமான 450bhp பவர் மற்றும் 58kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது என்பதுடன், புதிய 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய டிரைவிங் மற்றும் எக்ஸாஸ்ட் மோடுகள், MagneRide டேம்பர்கள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

வெளிப்புறத்தில் LED ஹெட்லைட்ஸ், புதிய கிரில் - பம்பர்கள் - Diffuser - ஏர் வென்ட் உடன் கூடிய பானெட் - 19 இன்ச் அலாய் வீல் - 3 புதிய கலர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் கதவு மற்றும் டோர் பேடு ஆகியவற்றில் தொடுவதற்கு மென்மையான பிளாஸ்டிக்ஸ் இடம்பெற்றுள்ளன. இதனுடன் 12 இன்ச் LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளெஸ்டர் இருப்பது வரவேற்கத்தக்கது. தற்போது சென்னை ஆன்ரோடு விலையான 89.21 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மஸ்டாங், முன்னே சொன்ன மாற்றங்களால் அதன் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. Trending Articles

Sponsored