லீவ் முடிஞ்சு போச்... வீடு திரும்பும் மனைவியிடம் மாட்டாமலிருக்க டிப்ஸ்!Sponsoredஇதோ கோடை விடுமுறை முடியப்போகிறது. விடுமுறைக்காக மனைவி, குழந்தைகளை பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு ``பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என இருந்தவங்களுக்கு இனிதான் சிக்கல். அவர்களுக்கு மட்டுமில்லாமல் மனைவி ஊரில் இல்லாவிட்டாலும் நல்லபிள்ளையாக இருந்தவர்களுக்கும் இதே சிக்கல்தான். `சிக்கல் சிக்கல்'னு சொல்லிட்டேயிருந்தால் எப்படி? அதுக்கு தீர்வு சொல்லணும்ல... அதான் பாஸ் இது!

வீட்ல ஆளே இல்லைன்னு வீட்டு ஃப்ரிட்ஜை மினி பாராக மாத்தியிருக்கீங்களா? பாட்டிலை காலி பண்ணினால் மட்டும் போதாது, உள்ளே அட்மாஸ்பியரை பழங்களை வாங்கி மாற்றி, வாசத்துக்கு பட்டை, சோம்பு, கிராம்புன்னு என்னத்தையாவது அப்ளை பண்ணி மாத்துங்க பாஸ்! அவங்க நேரா அடுப்படிக்குள்ள வந்ததும் ஃப்ரிட்ஜ திறந்துதான் வாசம் பிடிப்பாங்கன்னு மனை(வி)யடி சாஸ்திரம் சொல்லுது!

Sponsored


ஊருக்குப் போறப்ப எல்லாத் துணியையும் துவைச்சு மடிச்சு வெச்சி குடுத்திருப்பாங்க. நீங்க தினமும் ஒவ்வொரு துணியாக அழுக்காக்கி மூலை, முக்குக்கு கடாசியிருப்பீங்க. இப்ப மொத்த துணியும் குப்பைமேடு மாதிரி சேர்ந்திருக்கும். சட்டுபுட்டுன்னு வாஷிங் மெஷின்ல மொத்தத்தையும் திணிச்சு ஒரு துவை துவைச்சு வெச்சிடுங்க பாஸ்... ரொம்ப நல்ல புள்ளையா ஆக்ட் பண்றதா நினைச்சு இப்ப போயி ``வாஷிங் மிஷின் எப்படி ஆப்பரேட் பண்றது?"ன்னு கேட்டுட்டு இருக்காதிங்க. ``இம்புட்டு நாளா துவைக்கவே இல்லையா?"ன்னு போன்லயே விசாரணைக் கமிஷனை தொடங்கிடுவாங்க! எந்த வாஷிங் மெஷினா இருந்தாலும் நெட்ல பார்த்து யூஸ் பண்ணப் பழகிக்கோங்க!

Sponsored


`ஹோட்டல்ல வாங்கிச் சாப்பிட்டுக்கறேன்'னு சமத்தா சொல்லிட்டு வீட்டுக் குப்பைக்கூடையில பரோட்டா, குருமா, சாம்பார் பாக்கெட்டுகளை நிறைச்சிருப்பீங்க. அதெல்லாம் பூசணம் பிடித்து, கப்படிச்சு போயிருக்கும். அதேபோல நீங்க அடுப்படிப் பக்கம் தலைகாட்டுறதை செக் பண்றதுக்காகவே பாத்திரம் கழுவுற இடத்துல எதாவது ஒரு பாத்திரத்தை கழுவாம விட்டுட்டுப் போயிருப்பாங்க. அதுவும் பூஞ்சை படிஞ்சு இருக்கும். குப்பைக்கூடைய இரவோடிரவா பக்கத்து வீட்டுக்காரங்க கண்ணுலபடாமல் தூக்கிட்டுப்போயி தெருவுலயோ, குப்பைத்தொட்டியிலேயோ கொட்டிட்டு, குப்பைக்கூடைய கழுவிக் கவுத்துங்க. கையோடு அந்த கழுவாத பாத்திரத்தையும் கழுவிக் கவுத்துங்க.

சீக்ரெட்டா சிகரெட் புடிக்கிற பழக்கம் இருந்தால் கஷ்டம்தான். சிகரெட்டு துண்டை நீங்க தூர எறிஞ்சாலும் சாம்பல் ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாமல் சிதறிக்கிடக்க வாய்ப்பிருக்கு. அதனால கஷ்டம் பார்க்காமல் மாப்பை வெச்சு சோப்புத்தண்ணியில் முக்கி வீடு கழுவிடுறது பெட்டர். வீட்டைத் துடைச்ச மாதிரியும் ஆச்சு, தடையத்தை அழிச்ச மாதிரியும் ஆச்சு. 

``நாங்க எப்பவுமே நல்லவங்கதான்" டைப் ஆசாமியா நீங்க? நீங்களாக தப்பு எதுவும் செஞ்சிருக்க மாட்டீங்க, இருந்தாலும் பகலில் ஆளில்லாத வீட்டில் சிலந்தி, கரப்பான், எலின்னு அத்தனையும் வந்து அட்டகாசம் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு. அங்கங்க சிலந்திவலை, கரப்பான் பூச்சின்னு இருந்தால் முதலில் அந்த இடத்தை சுத்தம் பண்ணி அதுங்களை விரட்டுற வழியைப் பாருங்க. இல்லைன்னா அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் அதுதான் கண்ணுல படும்!

முன்னெல்லாம் வீட்டுல ரொம்ப நேரமா லைட்டு எரிந்தால் மனைவியிடம் போட்டுக்குடுக்குற முதல் ஆளு பக்கத்துவீட்டு ஆன்ட்டியாகத்தான் இருப்பாங்க. ஆனால், இந்த வாட்ஸ்அப் யுகத்துல எல்லோருமே தூங்க லேட் ஆவுறதால அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. இருந்தாலும், ``எனக்கு எதாவது லெட்டர் வந்ததா ஆன்ட்டி?"ன்னு நல்லபுள்ளத்தனமா கேட்டு அவங்க போட்டுக்குடுக்குற மனநிலையில் இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கறது நல்லது. அப்படி தெரிந்தால் அதுக்கும் ஸ்கிரீன்ப்ளே ரெடி பண்ணணும்ல!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், என்னதான் நீங்க உஷார் பாண்டியா இருந்தாலும் மாட்டணும்னு இருந்தால் மாட்டித்தான் ஆகணும் பாஸ். விதி வலியது. அப்படி மாட்டிக்கிட்டால் ``அப்படியெல்லாம் நடக்கவே இல்லை"ன்னு சாதிக்கிறது புத்திசாலித்தனம் இல்ல. அவங்க பதிலுக்கு தான் சொல்றதுதான் சரின்னு நிரூபிக்க மெனக்கெடுவாங்க. சிக்கல் பெரிதாகும். அவங்க என்ன திட்டினாலும் மொத்தத்தையும் கேட்டுக்கோங்க. எதிர்த்து ஒரு வார்த்தை பேசாதிங்க. ``உங்ககிட்ட கத்தி என் எனர்ஜிதான் வேஸ்டு"ன்னு அவங்களே ஒரு முடிவுக்கு வருவாங்க. அப்புறமா பேசிக்கலாம்! என்ன பாஸ், சரிதான?!Trending Articles

Sponsored