ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதா ராம்தேவ்வின் `கிம்போ-ஆப்'?Sponsoredயோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வாட்ஸ் அப்க்குப் போட்டியாக கிம்போ ஆப் என்ற புது செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கிம்போ அப் மூலம், மெசேஜ்ஜிங், வீடியோ காலிங், புகைப்படங்கள் உள்ளிட்டத் தகவல்களைப் பரிமாற்றிக்கொள்ள முடியும். 

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மக்களுக்குத் தேவைப்படும் ஷாம்பூ, பேஸ்ட் உள்ளிட்ட அத்யாவசிய நுகர்வோர் பொருள்களை ஆயுர்வேத முறைப்படி தயாரித்து விற்பனை செய்துவருகிறது. ஆடை தயாரிப்பு, பாதுகாப்புச் சேவை போன்ற துறைகளிலும் கால் பதித்துள்ள பதஞ்சலி நிறுவனம், தற்போது பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, `சுதேசி சம்ரிதி’ என்ற சிம் கார்டை நேற்று வெளியிட்டுள்ளது. 

Sponsored


இந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தஜராவாலா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `சுதேசி சம்ரிதியைத் தொடர்ந்து வாட்ஸ்அப்-க்குப் போட்டியாக கிம்போ ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது' என ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து, கிம்போ-ஆப்பில் வாட்ஸ்அப் போலவே, புகைப்படங்களை பரிமாற்றிக்கொள்வது, வீடியோ காலிங், வாய்ஸ் காலிங், மெசேஜ்ஜிங், குயிக்கிஸ், லொகேஷன் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்ற தகவல் வேகமாகப் பரவியது. இதனால், நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கிம்போ ஆப்பைப் பதிவிறக்கம் செய்தனர். 

Sponsored


ஆனால், தற்போது கூகுள் ப்ளேஸ்டோரில் இருக்கும் கிம்போ ஆப் முழுவதுமாகச் செயல்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.Trending Articles

Sponsored