சென்னையில் ஆலையைத் தொடங்குகிறது Freudenberg!Sponsoredஜெர்மனியைச் சேர்ந்த Freudenberg நிறுவனம், 169 ஆண்டுகள் பழமையானது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய உலக நாடுகளில் நல்ல சந்தைமதிப்பைக் கொண்டுள்ளதுடன், இந்தியாவில் கடந்த 90 ஆண்டுகளாக வாகனங்களுக்கான உயர்ரக Seals, அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் பாகங்கள், ஃபில்டர், தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், ஆயில் மற்றும் க்ரீஸ் ஆகியவை உற்பத்தி செய்துவருகிறது.

தற்போது  ‘Make in India’ கோட்பாடுக்கு ஏற்ப, சென்னையில் உள்ள வல்லம் வடகலில், தனது புதிய தொழிற்சாலையை நிறுவும் முடிவில் Freudenberg நிறுவனம் இருக்கிறது. 13 ஏக்கர்(56,875 m2) பரப்பளவில் அமையவிருக்கும் இந்த தொழிற்சாலைக்காக, 210 கோடி ரூபாயை இந்நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. முன்னே சொன்னவை, இங்கே தயாரிக்கப்படலாம். 

Sponsored


ஏன் சென்னையில் புதிய தொழிற்சாலை?

Sponsored


இந்தியாவில் கடந்தாண்டு Freudenberg ஈட்டிய வருமானம் 2,768 ரூபாய். அதில் 60 சதவிகிதம், ஆட்டோமொபைல் துறை சார்ந்த தயாரிப்புகளின் வழியே வந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 'Detroit of South India' எனப் பெயர்பெற்ற சென்னையில், பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. 

அதற்கேற்ப வல்லம் வடகலில் தனது புதிய தொழிற்சாலையை நிறுவ இருக்கும் Freudenberg, ஒரகடத்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு, ரெனோ - நிஸான், அப்போலோ டயர்ஸ், டெய்ம்லர், அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு, Levitas Seal Rings - கேபின் ஃபில்டர் - அதிர்வுகளைக் குறைக்கும் பாகங்கள் - ஆயில் - க்ரீஸ் - ரசாயனங்களை வழங்கும் எனத் தெரிகிறது.

வருங்காலத் திட்டம் என்ன?

Levitex என்ற பெயரில் Mechanical Gas Lubricated Seal-களை, புதிதாக இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. க்ராங்க் ஷாஃப்ட்டில் பொருத்தப்படும் இது, இன்ஜினில் உராய்வை 90 சதவிகிதம் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வல்லம் வடகலில் அமையவிருக்கும் Freudenberg நிறவனத்தின் புதிய தொழிற்சாலை, 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் செயல்படத் துவங்கும் எனத் தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே இருக்கும் ரப்பர் மற்றும் மெட்டல் Seal-களைத் தொடர்ந்து, Poly Urethene பயன்படுத்தி Seal-களை உற்பத்தி செய்ய உள்ளது. மேலும் Vision 2030 எனும் அறிவிப்புக்கு ஏற்ப, இந்தியா அந்த ஆண்டுக்குள் ஆட்டோமொபைல் சந்தை எலெக்ட்ரிக் மயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அந்த வாகனங்களில் இருக்கும் பேட்டரி போன்ற சில பாகங்களை, பின்னாளில் Freudenberg  தயாரிக்கும் எனலாம்.Trending Articles

Sponsored