எழுதலாம்... எழுதி முடித்ததும் நட்டு வைத்தால் செடி! - குழந்தைகளுக்கான அசத்தல் பரிசுSponsoredகுழந்தைகளுக்கு ஸ்கூல் திறந்தாச்சு. லாங் லீவு முடிஞ்சு ஸ்கூலுக்குக் கிளப்பிவிடறதுன்னா லேசான விஷயமா? அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவர்களைக் கவரும் சின்ன சின்ன பொருள்களை விதவிதமாக வாங்கிக்கொடுக்கிறது பெற்றோருக்குப் பெரிய டாஸ்க். அப்படி நீங்கள் கொடுக்கும் பொருள், அவங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறதோடு, சமூகத்துக்கும் யூஸ்ஃபுல்லா இருந்தால், டபுள் ஹேப்பிதானே... இதோ, அப்படி ஒரு சந்தோஷத்துக்கு வந்திருக்கு, ஆர்கானிக் பென்சில் செடி. அது என்ன பென்சில் செடி? 

Sponsored


ஆர்கானிக் பென்சில் செடி தயாரிக்கும் நிறுவனமான ஃபார்ம்சில் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் குமார், ``குழந்தைகள் எழுதும் பென்சில் சின்னதாக ஆனதும் பெரும்பாலும் தூக்கி எறிஞ்சுடுவாங்க. அப்படி எறிவதை மண்ணில் நட்டுவைத்து செடி வளர்ந்தால் எப்படி இருக்கும்? இதுதான் எங்க கான்செப்ட். இதற்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு இருக்கு. எனக்குச் சொந்த ஊர் மதுரை. படிச்சது பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ். ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்துட்டிருந்தேன். ஆனால், வேளாண்மை, இயற்கைச் சார்ந்த பொருள்கள் மேலே ஆர்வம் அதிகம். அதனால், ஐடி வேலையை விட்டுட்டு இயற்கைச் சார்ந்த பிசினஸ் செய்ய முடிவெடுத்தேன். என் கல்லூரி நண்பனான ராஜ் கமலேஷ் இதே மாதிரி ஐடியாவில் இருந்தார். ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கியதுதான் பென்சில் செடி. ஒரு மாத்திரையின் கேப்சூலில் சில தாவரங்களின் விதைகளை நிரப்பினோம். அந்தக் கேப்சூலை பென்சிலின் முனையில் செருகி மண்ணில் நட்டுவைத்தோம். சரியாக நான்காவது நாள் செடி முளைச்சது'' என்கிறார்.

Sponsored


தொடரும் ராஜ் கமலேஷ், ``அப்புறம் இதுதான் நம்ம பிசினஸ் என முடிவெடுத்தோம். ஆரம்பத்தில் எங்க ஐடியாவைச் சொன்னதும் பலரும் சிரிச்சாங்க. வங்கியில் லோன் கிடைக்க நிறையச் சிரமப்பட்டோம். ஆனாலும், விடாமுயற்சியோடு பென்சில்களை உருவாக்கி, குழந்தைகளிடம் கொடுத்தோம். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. ஸ்கூல், கலேஜ், சமூக நிறுவனங்கள் இப்படி எல்லா இடங்களிலும் ஆர்டர் கிடைச்சது. கேப்சூலை குழந்தைகள் வாயில் வெச்சுட்டால் என்ன ஆகும் எனப் பல பெற்றோர்களுக்குத் தயக்கம் இருந்துச்சு. அதனால், ஆர்கானிக் கேப்சூல்களை புழக்கத்துக்குக் கொண்டுவந்தோம். பென்சிலின் அடிப்பகுதியின் உள் பகுதியில் தாவர விதைகள் இருக்கும். தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், பத்துக்கும் மேற்பட்ட பூ விதைகள்கொண்ட பென்சிலைத் தயார்செய்கிறோம்'' என்கிறார்.

``இந்தப் பென்சிலை நட்டுவைத்தால் செடி முளைக்கும் எனச் சொல்லி பெற்றோர்கள் குழந்தைக்கு வாங்கிக்கொடுப்பாங்க. குழந்தைகளும் நட்டு வைப்பாங்க. அப்போ, செடி முளைக்காமல் எந்த ஒரு குழந்தையும் ஏமாந்துடக் கூடாது என்பதில் கவனமா இருக்கோம். அதனால், பலகட்ட பரிசோதனைக்குப் பிறகே விதைகளைப் பென்சிலில் சேர்த்து விற்பனைக்கு அனுப்புறோம். விதைகள் சம்பந்தப்பட்ட எங்களது எல்லாச் சந்தேகங்களுக்கும் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் உதவுது. விதைத் தேர்வுக்குத் தனியாக ஒரு குழு அமைச்சு இருக்கோம். இயற்கை உரம், தென்னங்கழிவு ஆகியவற்றோடு விதைகளைச் சேர்த்துப் பென்சிலுடன் இணைக்கிறோம். ஒரு பென்சிலை விலை 10 ரூபாய். உங்கள் குழந்தை எழுதி எழுதி பென்சில் சின்னதாக ஆனதும் சிறிய தொட்டியில் இந்தப் பென்சிலை, உங்கள் குழந்தைகளின் கைகளால் நட்டுப் பராமரிக்கச் சொல்லுங்கள். அது செடியாக வளர்வதைப் பார்க்கும் உங்கள் குழந்தைக்கு நிச்சயம் இயற்கையைப் பாதுகாக்கும் எண்ணமும் ஆர்வமும் உண்டாகும்'' என்கிறார் ரஞ்சித் குமார்..

இயற்கையைப் பாதுகாப்பதைவிட அதை வளர்ப்பதும் முக்கியம் அல்லவா?Trending Articles

Sponsored