வெளிநாட்டு பைக், கார் இறக்குமதிக்காகத் தளர்த்தப்படும் விதிகள்Sponsoredமத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குகான விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது.  அதற்கான வரைவு சுற்றறிக்கை தயார்நிலையில் உள்ளது. 

வெளிநாடுகளில் அதிக அளவில் மோட்டார் மற்றும் மின்சார வாகனங்கள் விற்பனையில் இருந்தாலும், இந்தியாவில் என்னவோ அந்த வாகனங்கள் எல்லாம் விற்பனைக்கு வருவதில்லை. விலை, இன்ஜின் திறன் மற்றும் டெஸ்டிங் விதிமுறைகள் கடுமையாக உள்ளதால் அந்நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்களை மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைசெய்கிறார்கள். குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமல்லாமல் அனைத்து வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தற்போது தயாராகும் அந்நாட்டின் இன்டர்நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் விற்பனைசெய்ய அனுமதிக்கலாம் என்று மாற்றம் கொண்டுவரப்போகிறது அரசு. 

Sponsored


Sponsored


 அதற்கு முன், இந்தியாவில் இறக்குமதிசெய்து விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு வாகனங்களை இந்தியாவிலேயே டெஸ்ட் செய்து சர்டிஃபிகேட் வாங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இது, 40,000 டாலர் (தோராயமாக ரூ.27 லட்சம்) விலைக்கு அதிகமான நான்கு சக்கர வாகனங்களுக்கும், 800cc-க்கு அதிகமான இன்ஜின்கொண்ட இரண்டு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த விதிகள் இப்போது தளர்த்தப்பட உள்ளது. டெஸ்ட் எதுவும் செய்யாமல், ஆண்டுக்கு 2,500 வாகனங்களை இறக்குமதிசெய்துகொள்ளலாம். இப்படி வரும் வாகனங்கள் அனைத்தும் right hand drive வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். வரைவு அறிக்கை மட்டுமே வெளிவந்துள்ளது. முழு அறிக்கையும் வெளிவரும்போது, வேறு என்ன மாற்றங்கள் உள்ளன என்பது தெரியவரும். கார், பைக்குகளுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் இருக்காது. Trending Articles

Sponsored