`பிரைவசி தகவல்கள் பப்ளிக் ஆகியிருக்கின்றன!’ ஃபேஸ்புக்கே ஒப்புக்கொண்ட 'பக்'Sponsored14 மில்லியன் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், தற்போது பொதுவழியில் கசிந்திருக்கும் வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. அதாவது, பலர் ‘Private’ ஆப்ஷனுடன் போஸ்ட் செய்த அப்டேட், பகிர்ந்த படங்கள், தற்போது ‘Public’ ஆகியுள்ளன.

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனத்துடன் இணைந்து 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின் தகவல்களைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கியது. இதையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். மேலும், ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில், ‘பக் பவுன்டி' என்ற திட்டத்தின்மூலம் தவறுகளைச் சரிசெய்துவருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ஒரு புதிய சர்ச்சையில் ஃபேஸ்புக் சிக்கியுள்ளது. 

Sponsored


அதாவது, ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஒருவர், தனது கணக்கில் பதிவிடப்படும் பதிவுகளை பிரைவசி ஆப்ஷனை உபயோகித்து, தன் பதிவை பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அது தற்போது பொதுவெளியில் பகிரப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம், மென்பொருளில் ஏற்பட்ட 'பக்' எனப்படும் தொழில்நுட்பக் குறைபாடுதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சுமார் 14 மில்லியன்  ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின், தனியுரிமை சார்ந்த தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல், பொதுவெளியில் பகிரப்பட்டிருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

Sponsored


இதன்படி, நீங்கள் ஒரு நிலைத் தகவலையோ, படங்களையோ, காணொளிகளையோ பகிரும்போது, ஃபேஸ்புக் ‘default’ ஆப்ஷனாக ‘Public’ என்பதையே எடுத்துக்கொண்டுள்ளது. இது, மே 18 முதல் 27 வரை நிகழ்ந்துள்ளது. அப்போது, ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் பதிந்த விஷயங்கள், தற்போது பொதுவெளியில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஃபேஸ்புக் நிறுவனம் மே 22 அன்று இந்தப் பிரச்னையைச் சரி செய்தாலும், எல்லாப் பயனீட்டாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க அதனால் முடியவில்லை. எனவே, எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் ‘நோட்டிஃபிகேஷன்ஸ்’ முறையில் தகவல் கொடுத்துவருவதாக ஃபேஸ்புக்கின் தலைமை, தனிப்பட்ட தகவல் உரிமை சார்ந்த அதிகாரி (chief privacy officer) எரின் இகன் (Erin Egan) தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாக நிறுவனமும் மன்னிப்பு கேட்டுள்ளது.Trending Articles

Sponsored