அறிவியல்​பூர்வமாக இது பெஸ்ட் பெயின்ட்! (Sponsored Content)Sponsoredவீட்டின் வெளிப்புறதத்தில் கண்ணுக்கு கவர்ச்சியாக பெயின்ட் செய்யும்போது, அதுவே அந்த வீட்டுக்கு தனியோர் அடையாளத்தையும் அந்தஸ்தையும் கொடுத்து விடுகிறது. உள்புற சுவர்களைவிட வெளிப்புறச் சுவர்களில் பூசும் பெயின்ட் சிறப்பாக இருப்பது அவசியம். வெளிப்புற பெயின்ட் பூச்சு என்பது வெறும் அலங்கார வண்ணமாக மட்டும் இருந்துவிடாமல், பலவகைகளில் வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதே பெயின்ட் எக்ஸ்ப்பெர்ட்கள் நமக்குத் தரும் அறிவுரை. ஏனெனில், கடும் வெயில், மழை மற்றும் குளிரைத் தாங்கும் தன்மை இருந்தால்தான் வீட்டின் வெளிப்புறத்தோற்றம் நீண்ட நாளுக்கு சிறந்து விளங்கும்.

ஒரு நல்ல 'எக்ஸ்டீரியர்' அல்லது வெளிப்புறச் சுவர்களுக்கான பெயின்ட்டைத் தேர்வு செய்வதற்குமுன்,எப்படியெல்லாம் நம் வீட்டு பெயின்ட் பாதிப்படைகிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

Sponsored


Sponsored


சூரிய வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள்:

நம்ம ஊர் வெயிலில் முட்டை உடைத்து சுவரில் ஆமலட் போடலாம். இவ்வளவு வெப்பம் வெளிச்சுவர் பெயின்டின் மீது படும்போது, சாதாரண பெயின்ட் கொப்பளித்து பெயர்ந்துபோகிறது.

நிறைய வீடுகளின் வெளிச்சுவர்களில் தூசு படிந்திருக்கும். காற்றினில் வரும் தூசுமட்டுமல்லாது, நாள்கணக்கில் சூரிய புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் 'சாக்கிங் - Chalking' எனப்படும் தூசுப்படிதல் வினை நடக்கிறது, இதுவும் நம் சுவர்களை பாதிக்கிறது.

வெளிப்புறம் பெயின்ட் அடித்து முடித்ததும் ஒய்யாரமாக இருக்கும் வீடு, இரண்டு மூன்று வருடங்களில் பொலிவு மங்கி பார்க்க சுமாராக ஆகிவிடுகிறது. காரணம் தொடர்ந்த சூரிய ஒளியால் வெளிறிப்போகும் பெயின்டின் நிறம்!

தண்ணீர் மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள்:

பூஞ்சை, காளான், பாசி மற்றும் பிற நுண்ணியிரிகள் ஈரத்தில்தான் செழித்து வளர்கின்றன.  மழைக்காலம் வெளிச்சுவர்களை நுண்ணியிரிகள் வளர்வதற்கான இடமாக மாற்றிவிடுகிறது.

ஒரு நல்ல பெயின்ட், வெளிப்புற தட்பவெப்ப மாறுதல்கள் சுவரை பாதிக்காமல் தடுப்பு அரணாக செயல்பட வேண்டும். வெப்பநிலை மாறும்போது, சுவரின் மேற்பரப்பு சுருங்கவும் விரிவடையும் செய்யும். இதனால் ஒட்டுத்தன்மை குறைந்து காணப்படும் தரக்குறைவான பெயின்ட்கள் சீக்கிரம் விரிசல் விடுகின்றன.  தண்ணீரும் உள்புகுந்து பெயின்டிங்கை பாதிக்கிறது.

எது நல்ல எக்ஸ்டீரியர் பெயின்ட்? - நம் முடிவு:

ஒரு நல்ல எக்ஸ்டீரியர் பெயின்டை வாங்கும்போது, வெப்பம் மற்றும் தண்ணீரிலிலிருந்து முழு பாதுகாப்பு, விரிசல்களை நிரப்பும் தன்மை, சிறந்த பிணைக்கும் தன்மை, உறுதித்தன்மை மற்றும் விரிவடையும் தன்மை, இவையனைத்தும் அடங்கிய பெயின்டையே தேர்வு செய்ய வேண்டும்.

இந்த அனைத்து அம்சங்களும் ஒருசேர நிப்பான் பெயின்ட் நிறுவனம் வழங்கும் 'Walltron - வால்ட்ரான்' பேஸ் கோட் பெயின்டில் கிடைக்கிறது. சந்தையில் கிடைக்கும் பிற வெளிப்புற பெயின்ட்களோடு ஒப்பிட்டு, வால்ட்ரான் பேஸ் கோட் பெயின்டைப் பரிந்துரைக்கக் காரணம், இது ஒரு 'எலாஸ்டோமெரிக்' பெயின்டாகும். அறிவியல்பூர்வமாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துவகை அம்சங்களும் இந்த பெயின்டில் இருக்கக்காரணம் 'எலாஸ்டிக் பாலிமர் துகள்கள்', அதாவது இதில் காணப்படும் விரிவடையும் தன்மைகொண்ட பாலிமர் நுண்துகள்கள்தான். தட்பவெப்பத்துக்கு ஏற்றார்போல விரியவும் சுருங்கவும் செய்யும் இந்த பெயின்ட் சுலபமாக பெயர்ந்து, விரிசல் அடைவதில்லை. பாலிமர் துகள்கள் இயற்கையாக சூரிய வெப்பம் & ஒளியைப் பிரதிபலித்துவிடுகிறது, மேலும் இதன் மேற்பரப்பில் தண்ணீர் ஒட்டுவதில்லை.

எனவே, உயர்தர ஜப்பானிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் 'வால்ட்ரான் எலாஸ்டோமெரிக் எக்ஸ்டீரியர் வால்ப்ரூஃப் கோட்டிங்' உங்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு சிறந்த காவலாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை!Trending Articles

Sponsored