`இனி இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம்' - கூகுளின் புதிய வசதி



இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய வசதியைக் கூகுள்  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Sponsored


தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன், இன்டர்நெட்  பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவு பலரும் இணையத்தில் மூழ்கிப் போயுள்ளனர். மக்களின் வசதிகளுக்கேற்ப  பல நிறுவனங்களும் இணையம் மற்றும் போனில் சிறப்புச் சலுகைகளை  தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் உச்ச கட்டமாக தற்போது கூகுள் நிறுவனம் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Sponsored


அதன்படி பயனாளர்கள் இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான செய்தி மற்றும் தகவல்களை இன்டர்நெட், வைஃபை இருக்கும் போது டவுன்லோடு செய்துகொண்டு அதை பிறகு ஆஃப்லைனில்  பயன்படுத்திக்கொள்ளலாம். பயண நேரங்களிலும், இன்டர்நெட் இல்லாத காலங்களிலும் இந்த வசதி மிகவும் பயன் தரும்.

Sponsored


இதை பயன்படுத்திக்கொள்ள பயனர் தங்களுக்கு விருப்பமான செய்திகளை முதலில் தேர்வுசெய்ய வேண்டும். பின்பு பயனர் இருக்கும் இடம் மற்றும் விருப்பங்கள், செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து கூகுளே தானாக டவுன்லோடு செய்து தரும். இந்த வசதி தற்போது இந்தியா நைஜீரியா, பிரேசில் போன்ற 100 நாடுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 



Trending Articles

Sponsored