கண்பார்வை மங்கும்... தோல் எரியும்... DNA கூட பாதிக்கும்... ஆபத்தான தாவரம்! #GiantHogweedSponsoredமனிதர்களுக்கு உதவும் தாவரங்கள் உலகத்தில் பல உண்டு. நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் அழகான, வாசனை தரும் செடிகள் ஏராளம் உள்ளன. ஆனால், தொட்டாலே அரிக்கும்  செடிகளும், உயிரைக் குடிக்கும் விஷச் செடிகளும் நம் ஊரிலும் உண்டு. இதேபோல, வெளிநாட்டில் உள்ள " ஜியென்ட் ஹாக்வீட் "(giant hogweed)  என்ற தாவரத்தைப் பார்த்தாலே கண்கள் நிரந்தரமாகப் பார்வை இழக்கும் என்கிறார்கள்.

அழகில்தான் ஆபத்து அதிகம் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான், இந்த "ஜியென்ட் ஹாக்வீட்"(  giant hogweed) எனப்படும் இந்த நச்சுத் தாவரம். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இதைப் பார்த்ததற்கு விலையாகக் கண் பார்வையை இழக்கச் செய்கிறது. "ஜியென்ட் ஹாக்வீட், எப்பியேசியே (Apiaceae) எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல்  பெயர் Heracleum mantegazzianum. இது, ஒரு வகையான காரட் (carrot ) வகையைச் சார்ந்தது என்கின்றனர். இதில் காணப்படும் ஃபோட்டோசென்சிடைஸிங் (photosensitizing) என்ற கெமிக்கல் (toxic chemical) மற்றும் Furanocoumarins எனப்படும் தாவரத்திலேயே சுரக்கும் ஒரு வகை ரசாயனம், இத்தாவரத்தைத் தொட்டவுடன் சூரிய ஒளி தோளில் படும்போது தீ பட்டதுபோல எரிந்து காயமாக மாறிவிடும்.  இது மட்டுமின்றி, உடலின் DNA உயிரணு வரை பாதிக்கும் என்கின்றனர்.

முதல் முறையாக, இது காக்கசஸ் மலைப்பகுதி (caucasus mountaiன்), கேஸ்பியன் (caspian) கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியாவில் கண்டறியப்பட்டது. 1917-ம் ஆண்டு,  நியூயார்க்கில்  கண்டறியப்பட்டதாகப் பிரிட்டிஷ் கொலம்பியா 1930-ம் ஆண்டு பதிவுசெய்துள்ளது. தற்போது இது, மேற்கு பிரிட்டிஷ், கொலம்பியா, வாஷிங்டன், ஓரிகன், கிழக்கு மற்றும் தெற்கு  அமெரிக்காவில் இருந்து நியூ ஃபெளண்ட் லேண்ட், விஸ்கான்சின், நியூயார்க், வெர்மான்ட், கனடா போன்ற பல இடங்களில் காணப்படுகிறது. 2018ல் பதிவுசெய்யப்பட்டதில்   விர்ஜினியா (virginia)வில் வளர்ந்து வருவதை உறுதிசெய்துள்ளனர்.

Sponsored


 

Sponsored


இன்னும் சில தாவரங்கள் பார்ப்பதற்கு ஜியென்ட் ஹாக்வீட் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், இது தனது உயரத்தின்மூலம் தன்னை அடையாளம் காட்டுகிறது. 14 அடி உயரம் வரை  வளரும் இத்தாவரம் வளர்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும். 15 வருடம் வரை  மண்ணில் உறுதியாக இருக்கும். முதல் ஒரு வருடத்திலேயே இதன் இலைகள் ஒரு மீட்டர் அளவுக்கு வளர்ந்துவிடும். அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அந்தப் பூக்கள்,  பார்ப்பதற்கு குடை வடிவத்தில் வெள்ளை நிறத்தில் காணப்படும். வசந்த காலத்தின் இறுதியிலிருந்து கோடைக்காலத்தின் இடை  வரை இந்த வெள்ளை நிற மலர்கள் பூக்கின்றன. இதன் தண்டுகள் பிரகாசமான பச்சை நிறத்தில் சிவப்பு மற்றும் ஊதா நிறம் கலந்து காணப்படும்.  

இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், வட அமெரிக்கா போன்ற இடங்களில் தோட்டத்தை அலங்கரிப்பதற்கு வளர்க்கின்றனர். 15 நிமிடங்கள் இதன் அருகில் இருந்தாலே, உடல் எரியத் துவங்குவதை உணரலாம். ஒரு தாவரத்திலிருந்து காற்றின்மூலம் வெளிப்படும் 1,20,000 விதைகள், பத்து மீட்டர் அளவுக்குப் பரவி வேகமாக வளர ஆரம்பித்துவிடும்.

ஓரிடத்திலிருந்து இந்தச் செடியை  ஏப்ரல் மாத கடைசியிலும், மே மாத தொடக்கத்திலும் அகற்றலாம். அச்செடி 30 செ.மீ க்கும் குறைவாக வளர்ந்திருக்கும். உடல் முழுவதும் மறைக்கக்கூடிய பாதுகாப்பான ஆடையைப் பயன்படுத்துவதும், கைகளுக்கு ரப்பர் க்ளவ்ஸ்(rubber gloves) அணிந்து முக்கியமாக கண்களுக்கு பாதுகாப்புச் செய்துவிட்டு செடியை அப்புறப்படுத்த வேண்டும். 
        
நியூயார்க்கில் உள்ள  Department of Environment Conservati ஒன், இத்தாவரத்தைத் தொட்டவுடன் குளிர்ச்சியான நீரில் சோப்புப்  போட்டு கழுவிவிடுமாறும், சூரிய வெளிச்சம் படாத குளிர்ச்சியான இடத்தில் இருக்கும்படியும், மருத்துவரை அணுகி சரியான ஆலோசனை கேட்டுக்கொள்ளும்படியும் கூறியுள்ளது.Trending Articles

Sponsored