'எலெக்ட்ரிக் வாகனங்கள், ஃபோர்ஜிங் துறைக்குப் பெரிய பாதிப்பைத் தரலாம்' - AIFISponsoredAssocation of Indian Forging Industry (AIFI) சார்பில், சென்னையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்த அமைப்பின் தலைவர் முரளிசங்கர், 'மத்திய அரசாங்கம், எதிர்காலத் தேவைகளை மனதில்வைத்து, எலெக்ட்ரிக் கார்கள்மீது தனது கவனத்தைத் திருப்பியிருப்பது வரவேற்கத்தக்கது; ஆனால், அது சமீபகாலத்தில் ஏற்றம் கண்டிருக்கும் ஃபோர்ஜிங் துறையின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே, இந்திய ஆட்டொமொபைல் சந்தை, அனைவருக்குமான Level Playing Field-ஆக இருப்பது அவசியமாகிறது. எலெக்ட்ரிக் கார்களால் ஃபோர்ஜிங் துறை சந்திக்க இருக்கும் இழப்பு, 2020-ம் ஆண்டு தொடக்கம் அல்லது 2022-ம் ஆண்டு வாக்கில் தெரியவரலாம். 


ஏனெனில், ஃபோர்ஜிங் துறையின் 60 சதவிகித உற்பத்தி, இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் சார்ந்த பாகங்களில் அமைந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் கார்களில் 2,000 பாகங்கள் இருக்கின்றன என்றால், எலெக்ட்ரிக் கார்களில் இருப்பதோ 20 பாகங்களே! எலெக்ட்ரிக் கார்களில்தான் இன்ஜின் - கியர்பாக்ஸ் அமைப்பே கிடையாதே? இரண்டு கார்களுக்கும் பொதுவானதாக, ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் - ஆக்ஸில் ஆகியவை மட்டுமே இருக்கின்றன. ஆதலால் எலெக்ட்ரிக் வாகனங்களின் வரவால், ஃபோர்ஜிங் பாகங்களுக்கான தேவை 40-50 சதவிகிதம் குறைந்து, வேலை வாய்ப்புகளில் சரிவு மற்றும் தொழிற்சாலைகளின் மூடுவிழாவுக்கு வழிவகுக்கும்' என்றார்.

Sponsored


Sponsoredஎலெக்ட்ரிக் வாகனங்கள் - ஃபோர்ஜிங் துறையை பாதிக்குமா?


உண்மையைச் சொல்வதென்றால், எலெக்ட்ரிக் வாகனங்களின் அடிப்படைத் தேவைகளான லித்தியம் ஐயன் பேட்டரி - சார்ஜிங் ஸ்டேஷன் - பழைய பேட்டரிகளை அகற்றுதல் போன்றவைகுறித்து, எந்தத் தெளிவான திட்டமும் இதுவரை வரையறுக்கப்படவில்லை. இதுவே ஃபோர்ஜிங் துறையைப் பொறுத்தமட்டில், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. டிராக்டர்கள் மற்றும் கமர்ஷியல் வாகனப் பிரிவு, ஃபோர்ஜிங் துறையில் பெரிய பங்களிப்பைத் தருகிறது; கார்களின் விற்பனையும் அதிகரித்துவருகிறது.


ஆனால் தற்போதைய சூழலில், தொடர்ச்சியாக உயர்ந்துவரும் ஸ்டீல் மற்றும் ஆயில் விலைகள் - தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே இருக்கும் இடைவெளி - தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் எனப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், ஃபோர்ஜிங் துறை வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதாவது, ஆண்டு உற்பத்தி 24 லட்சம் டன்னிலிருந்து 25 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது; இது, இந்த ஆண்டில் 30 லட்சம் டன்னைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும், கடந்த ஒரு ஆண்டில் ஸ்டீல்லின் விலை 26 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. எனவே, இது தொடர்ந்தால் Make in India கேள்விக்குறியாகி, உலக ஸ்டீல் சந்தையில் சீனா முன்னேறுவதற்கான சூழல் உண்டாகலாம். இதுகுறித்த தீர்வுகளைக் கண்டறிய, ஃபோர்ஜிங் துறையின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 18-22 ஆகிய தேதிகளில், 7-வது ASIAFORGE MEET சென்னையில் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது. Trending Articles

Sponsored