விற்பனைக்கு வந்துவிட்டது ஸ்வீடிஷ் பியூட்டி #வால்வோSponsoredவால்வோவின் சின்ன எஸ்யூவி  XC40, ரூ.39.90 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது. வால்வோவின் விலை குறைந்த எஸ்யூவி கார் இது.  R-Design என்று ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே வருகிறது. 

விலை உயர்ந்த  XC 90  மாடலில் இருக்கும் அதே 4 சிலிண்டர், 2 லிட்டர் டீசல்  இன்ஜின்தான் இந்த காரிலும் வருகிறது. இதன் 190 bhp சக்தியும் 40 kgm டார்க்கும் 8 ஸ்பீடு கியர்பாக்ஸில் இருந்து  4 வீல்களுக்கும் தரப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, ஆட்டோ பார்க் - இன், ஆட்டோ பார்க் - அவுட், ஹர்மான் ஸ்பீக்கர்ஸ், சன் - ரூஃப், டூயல் டோன் கிளைமேட் கன்ட்ரோல், பார்க்கிங் சென்ஸார், ஹீட்டட் சீட், ஹார்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம் என்று சிறப்பம்சங்கள் எக்கச்சக்கம். சிறப்பம்சங்கள் எவ்வளவோ, அதற்கு இணையாக பாதுகாப்பும் உள்ளது. லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், பைலட் அசிஸ்ட், எமர்ஜென்சி பிரேக்கிங், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் 8 காற்றுப்பைகள் உள்ளன. செமி-அட்டோனோமஸ் டிரைவிங் சிஸ்டம்கூட இருக்கிறது.

Sponsored


Sponsored


காம்பாக்ட் லக்ஸூரி எஸ்யூவி என்றால், இதுவரை பிஎம்டபிள்யூ  X1 (ரூ.55.18 லட்சம்), ஆடி  Q3(ரூ.53.60 லட்சம்), பென்ஸ்  GLA(ரூ.46.84 லட்சம்) ஆகிய கார்கள் மட்டும்தான் இருந்தன. இப்போது களமிறங்கியிருக்கும்  XC40 இளம் தலைமுறையினரையும், முதல் லக்ஸூரி கார் வாங்குபவர்களையும் குறிவைத்துள்ளது.  XC40 மூலம் வால்வோவின் சேல்ஸ் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அனைத்து விலைகளுமே ஆன்-ரோடு விலைகள்.  XC40 காரின் தோராயமான ஆன்ரோடு விலை ரூ.46 லட்சம்.Trending Articles

Sponsored