விண்வெளி வீரர்களைக் காக்கும் புதிய தொழில்நுட்பம்! - அசத்திய இஸ்ரோ



Sponsored



ராக்கெட் மூலமாக விண்வெளிக்குச் செல்லும் வீரர்களைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது இஸ்ரோ. 

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் 'பாட் அபாட் டெஸ்ட்' என்ற சோதனையை இன்று மேற்கொண்டது இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம். இதில், பூமியிலிருந்து விண்வெளிக்கு ராக்கெட் செல்லும்போதும், பூமியில் தரை இறங்கும்போதும் எதிர்பாராமல் விபத்து நடக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடி நிலையின்போது ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களைப் பாதுகாக்கும் கேப்ஸ்யூல் வசதியை இஸ்ரோ சிறப்பாகத் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, விண்ணுக்கு செல்லும் வீரர்களின் பாதுகாப்புக்காகத் தொழில்நுட்பத்தைத் தயாரிக்கப்போவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. 

Sponsored


அதன் தொடர்ச்சியாக, முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை ஏற்றிச்செல்லும் ராக்கெட் ஒன்றைத் தயாரித்து, வங்காள விரிகுடா கடல் பகுதியில் விழும் வகையில் ராக்கெட்டின் புரோக்ராம் வடிவமைக்கப்பட்டது. பூமியிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டு 2.7 கிலோ மீட்டர் தூரத்தை ராக்கெட் கடந்து சென்றபோது கடலில் விழுந்தது. அப்போது, விஞ்ஞானிகள் அமரும் பகுதி மட்டுமே பிரிந்து விழுந்தது. அதிலிருந்து பாராசூட் பத்திரமாக கீழே பறந்து வந்தது. இந்த முதற்கட்ட சோதனையில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது. தற்போது, அந்த பாராசூட் வங்காள விரிகுடா கடல் பகுதியில் மிதந்துகொண்டிருக்கிறது.

Sponsored




Trending Articles

Sponsored