XL 100 மொபெட்டில், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்!



XL 100... 1980-களில் டிவிஎஸ் 50 ஆக அறிமுகமாகி, பின்னர் 2000-களில் 70சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜினுடன் டிவிஎஸ் XL சூப்பர் மற்றும் XL Heavy Duty என வளர்ச்சியடைந்து, கடந்த ஆண்டில் BS-4 மாசு விதிகளால், 100சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜினுடன் வெளிவந்தது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஒரே மொபெட் இதுதான்! எளிதான ஓட்டுதலுக்குப் பெயர்பெற்ற இது, ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் டாப்-10 டூ-வீலர்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெற்றுவிடுவதைப் பார்க்க முடியும். புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் இந்த மொபெட்டுக்கு இருக்கும் மவுசு, காலங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Sponsored



இதில் தற்போது 'i-Touch Start' எனும் வசதியைச் சேர்த்திருக்கிறது டிவிஎஸ். இது கேட்க மாடர்ன்னாகத் தெரிந்தாலும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட்தான் அப்படி பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே இருந்த LED DRL-க்கு மேட்சிங்காக, USB மொபைல் சார்ஜிங் பாயின்ட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.  இதனுடன் ஏற்கனவே இருந்த பச்சை, சிவப்பு, கிரே, கறுப்பு, நீலம் ஆகிய நிறங்களுடன், பர்ப்பிள் புதிதாக இணைந்திருக்கிறது. மற்றபடி தொழில்நுட்ப ரீதியிலோ, தோற்றத்திலோ எந்த வித்தியாசமும் இல்லை; டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 36,109 ரூபாய்க்குக் கிடைக்கும் XL 100 'i-Touch Start' மாடல், Heavy Duty -விட 2,450 ரூபாய் அதிகம்!

Sponsored


Sponsored



எனவே 4.3bhp பவர் - 0.65kgm - 60கிமீ அதிகபட்ச வேகம் - 67 கி.மீ அராய் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்தும் 99.7சிசி இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை! 80 கிலோ எடையுள்ள இந்த மொபெட்டின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 80மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டூயல் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் மற்றும் 110மிமீ டிரம் பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஒருவேளை பஜாஜ் தனது என்ட்ரி லெவல் பைக்கான CT 100 பைக்கின் விலையைக் குறைத்ததால், இந்த வசதிகளை XL 100-ல் டிவிஎஸ் சேர்த்திருக்கிறதோ? முதலில் டெல்லி, உத்திரபிரதேசம், உத்திரகண்ட் ஆகிய இடங்களில் மட்டுமே இந்த மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Trending Articles

Sponsored