இந்த 200சிசி ஹீரோ பைக்கின் விலை, 88 ஆயிரம் ரூபாய்தான்...! #HERO #xtreme200RSponsored2 வருடங்கள்... கான்செப்ட் வடிவத்திலிருந்து எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை ஆன்-ரோடுக்கு வருவதற்கு, ஹீரோ எடுத்துக்கொண்ட கால அவகாசம்; அதாவது 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் என்றால், 2018-ம் ஆண்டு ஜனவரியில் 5 கலர்களில் அறிமுகம்! மேலும் கடந்த மே மாதத்தில், 146 கிலோ எடையுள்ள இந்த பைக்கை, மோ.வி BIC ரேஸ் டிராக்கில் ஓட்டிப் பார்த்தது. டிசைன், சிறப்பம்சங்கள், இன்ஜின் பர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம் என இந்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட பைக்கின் அனைத்து விவரங்களும் தெரிந்துவிட்டன, விலையைத் தவிர! தற்போது, அதற்கான விடையும் கிடைத்துவிட்டது.


ஆம், இதுகுறித்து ஹீரோ நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. என்றாலும் அந்நிறுவனத்தின் இணையதளத்தில், இந்தியாவின் 8 வடகிழக்கு மாநிலங்களுக்கான எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை, 88 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் போட்டியாளர்களான பஜாஜ் பல்ஸர் NS200 (1.01  - 1.16 லட்ச ரூபாய்: எக்ஸ் ஷோரூம் விலை), டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V (1.03 - 1.17 லட்ச ரூபாய்: எக்ஸ் ஷோரூம் விலை), யமஹா FZ25 (1.19 லட்ச ரூபாய்: எக்ஸ் ஷோரூம் விலை) ஒப்பிடும்போது மிகவும் குறைவு! முன்பே சொன்னதுபோல, 160சிசி பைக்குகளுடன் போட்டிபோடும் விதமாகத்தான், மோனோஷாக் உடனான எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை பொசிஷன் செய்திருக்கிறது ஹீரோ.

Sponsored


Sponsoredஇதன்படி பார்த்தால், பஜாஜ் பல்ஸர் NS160 (85,786: எக்ஸ் ஷோரூம் விலை), டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V (84,248 முதல் 94,248 ரூபாய்.  எக்ஸ் ஷோரூம் விலை), சுஸூகி ஜிக்ஸர் (82,400: எக்ஸ் ஷோரூம் விலை) என்றளவில் இருக்கிறது. 18.4bhp பவர் - 1.71kgm டார்க் - 114கி.மீ அதிகபட்ச வேகம் - 39.2 அராய் மைலேஜை வெளிப்படுத்தும் இந்த பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவரிகுறித்த விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதே பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையும், 1 லட்ச ரூபாய்க்குள் இருப்பதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.Trending Articles

Sponsored