உங்கள் ஸ்மார்ட்போன் பத்திரமாக இருக்கிறதா?ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் 50 சதவிகிதத்தினர் பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதில்லை என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Sponsored


இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தில் கைபேசி வழியாக நாம் ஏராளமான பணிகளை மேற்கொள்கிறோம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அதன் மூலம் இ-மெயில், வங்கி பரிமாற்றங்கள் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். சமூக வலைதளமான ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் தங்களது கருத்துகளைப் பரிமாறி வருகின்றனர். இதில் எத்தனை பேர் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்பது குறித்து ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

Sponsored


இதில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களில் 48 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே பாஸ்வேர்ட் மூலம் தங்களது மொபைல்களைப் பாதுகாப்பதாகவும் 14 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் தங்களது கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Sponsored


நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம்  மொபைல் போனுடனே பயணிக்கிறோம். பெரும்பாலும் நம்முடைய ஏராளமான தகவல்களை அதில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம். மொபைல் போன்கள் காணாமல் போகும்போது வங்கி விவரம் உள்ளிட்ட தகவல்களும் பிறருக்குச் சென்றடையும். இது குற்றவாளிகளுக்கு மிகவும் எளிதாக அமைந்துவிடும் நமக்கும் சிக்கல் ஏற்படும்  என்கிறது இந்த ஆய்வு.Trending Articles

Sponsored