2018 ஜாஸ் அப்டேட் பாஸ் ஆகுமா #honda_JAZZSponsoredஹோண்டா, தனது புது 2018 ஜாஸ் காரை இந்தியச் சந்தையில் களமிறக்க உள்ளது. இந்த காரின் புக்கிங்குகள் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், புதிய ஜாஸ் ஜூலை 19 அன்று விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரை புதிதாகக் காட்டுவதற்கு வெளிப்புற மாறுதல்கள் நிச்சயம் இருக்கும். ஆனால், எந்த மாதிரியான மாறுதல்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. காரின் உள்புறத்தில் முழு கறுப்பு இன்டீரியர் வேலைப்பாடுகள் வரவுள்ளன. காரின் சீட் மற்றும் டோர் பேட் ஃபேப்ரிக் இன்னும் மிருதுவாகவும், ப்ரீமியம் லுக்கைத் தரும் விதமாகவும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏபிஎஸ், ஈபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியன்டிலும் வரவுள்ளன. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் டிஜிபேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வருகிறது. சன்ரூஃப் மற்றும் மேஜிக் சீட் டாப் வேரியன்டில் மட்டுமே வரும் என்று தெரிகிறது. 

Sponsored


இன்ஜினைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது. அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். பெர்ஃபாமென்ஸ், இடவசதி என மிக முக்கியத் தேவைகள் எல்லாமே சிறப்பாக இருந்தாலும், ப்ரீமியம் ஹேட்ச்பேக் என்று சொல்லும் காரில் சிறப்பம்சங்கள் குறைவு என்பது ஜாஸ் வாங்க நினைப்பவர்களை யோசிக்கவைக்கிறது. இந்தப் புதிய அப்டேட்டில் சிறப்பம்சங்களைக் கூட்டுவதால், போட்டியில் இருக்கும் மற்ற கார்களுக்கு சமமாக நிற்குமா ஜாஸ்! பொறுத்திருந்து பார்ப்போம். 

Sponsored
Trending Articles

Sponsored