குழந்தைகளைப் பாராட்டி பரிசு அளிக்கப் போகும் முன் இதைப்படிங்க!Sponsoredபெற்றோர்களின் சின்னச் சின்னப் பாராட்டுகளும் பரிசுகளுமே குழந்தைகளை இன்னும் எனர்ஜியாகவும் ஆர்வத்துடனும் செயல்படத் தூண்டும். ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கும் பரிசுகளில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர் பொம்மைகளை வாங்கி, வீடு முழுவதும் நிறைத்துவிடுகிறார்கள். அதனால் பெரிய பயன் இல்லை. குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் பரிசுகள், அவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க பயனுள்ள கிஃப்ட் வகைகளின் கலெக்‌ஷன்ஸ் இதோ...

புத்தகங்கள்:

உங்கள் குழந்தைகள் இருக்கும் அறையில், அவர்களின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களால் ஒரு சிறிய நூலகத்தை அமையுங்கள். குழந்தையின் பிறந்தநாள் போன்ற நிகழ்வுக்கோ, அவர்கள் செய்யும் நல்ல விஷயத்துக்கோ, பாராட்டுகளுடன் ஒரு புத்தகத்தைப் பரிசு அளியுங்கள். சிறிய குழந்தைக்குப் படங்கள் நிறைந்த புத்தகம், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு காமிக்ஸ், 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு நீதிநெறிக் கதைகள் என வயதுக்கு ஏற்ப பரிசு அளியுங்கள்.

Sponsored


கடிதங்கள்:

Sponsored


கடிதங்கள் எழுதும் பழக்கம் இப்போது காணாமலே போய்விட்டது. குழந்தையிடம் நீங்கள் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு கடிதமாக எழுதிக்கொடுத்தால், எந்த வயதிலும் அவர்களுக்கான நினைவாக  இருக்கும். மேலும், ஒரு நிகழ்வுக்காகப் பரிசு அளிக்கிறீர்கள் எனில் (பிறந்தநாள், தீபாவளி), அந்த நிகழ்வுடன் தொடர்புடைய, மறக்கமுடியாத நினைவுகளை அந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ளலாம். இது, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும்.

புகைப்படங்கள்:

உங்கள் குழந்தையின் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் புகைப்படங்களாக எடுத்து, தொகுத்து அவர்களிடம் கொடுக்கலாம். குழந்தையின் கோபப்படுதல் போன்ற ஏதேனும் ஒரு குணத்தை மாற்ற நினைத்தால், அவர்கள் கோபமாக இருந்த புகைப்படத்தைக் கொடுத்து, 'கோபமாக இருக்கும்போது உன் முகம் ரொம்ப டல்லாக இருக்கிறது. இதை மாற்றிக்கொள்' என அறிவுறுத்தலாம்.

தனித்திறன் சார்ந்த பொருள்கள்:

உங்கள் குழந்தைக்கு நடனம், பாட்டு, விளையாட்டு என எந்தத் துறையில் திறமை உள்ளதோ, அதுசார்ந்த பொருளை பரிசாக அளிக்கும்போது, கூடுதல் ஆர்வத்துடன் தங்கள் திறனை வெளிப்படுத்துவர்.

அறிவுசார்ந்த பொருள்கள்:

உங்கள் குழந்தை எந்தப் பாடத்தில் வீக்காக இருக்கிறார்களோ, அந்தப் பாடத்தை எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில், அறிவுசார்ந்த பொருள்களைப் பரிசாக அளிக்கலாம்.

ஹாபி தொடர்பான பொருள்கள்:

உங்கள் குழந்தைக்குத் தோட்டம் பராமரிப்பது, கிஃராப்ட் ஒர்க் செய்வது, பெயின்ட்டிங் என எந்த விஷத்தில் ஆர்வம் அதிகமாக உள்ளதோ, அது தொடர்பான பொருள்களைப் பரிசாக அளிக்கலாம்.

ரோல் மாடல்களின் தகவல் தொகுப்பு:

உங்கள் குழந்தையின் ரோல் மாடல் யாரோ, அவரின் புகைப்படங்களை ஒட்டி, அவரின் ஒவ்வொரு வயதிலும் என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் எனத் தொகுத்து, ஆல்பமாக அளிக்கலாம்.

ஆசிரியர்களின் வாழ்த்து:

ஒவ்வொரு வருடமும் உங்கள் குழந்தைப் படிக்கும் வகுப்பின் ஆசிரியரிடம், உங்கள் குழந்தை பற்றிய ஒரு விஷயத்தை எழுதச்சொல்லி, அவரின் கையெழுத்து வாங்கி, உங்கள் குழந்தைக்குப் பரிசாக அளியுங்கள். எதிர்காலத்தில் இது அவர்களுக்கு மறக்கமுடியாத பொக்கிஷமாக இருக்கும்.

உறுப்பினர் அட்டைகள்:

நூலகம், சிறார்களுக்கான குழுக்கள் போன்ற இடங்களில் உங்கள் குழந்தையை உறுப்பினராகச் சேர்த்து, அதற்கான அட்டைகளைப் பரிசாக அளியுங்கள். இது, உங்கள் குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.Trending Articles

Sponsored