பாதுகாப்பில் பாஸ் ஆகவில்லை ரெனோ க்விட்! #ASEAN_NCAPSponsoredASEAN NCAP நிறுவனம், ரெனோ க்விட்டின் சமீபத்திய கிராஷ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த டெஸ்ட்டில் பரிசோதிக்கப்பட்ட இந்தோனேசிய மாடல், மொத்தம் 24.68 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது. இதனால், கிராஷ் டெஸ்ட்டில் இந்த கார் 0 ஸ்டார் வாங்கியுள்ளது.

முன்பக்க ஆஃப்செட் கிராஷ் டெஸ்ட்டில் 10.12 புள்ளிகளும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 14.56 புள்ளிகளும் பெற்றுள்ளது. 18- point safety assist technology பரிசோதனையில், ஒரு புள்ளிகூட பெறவில்லை. இந்த சேஃப்ட்டி அசிஸ்ட் பரிசோதனையில், ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட் அலெர்ட், பிளைண்டு ஸ்பாட் அசிஸ்டென்ஸ், அடோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் சிஸ்டம் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். பரிசோதிக்கப்பட்டது டாப் வேரியன்ட் க்விட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


இதற்கு முன்பு, 2016-ம் ஆண்டு மே மாதம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட க்விட்டை டெஸ்ட் செய்தபோது, 0 ஸ்டார் ரேட்டிங்கே கிடைத்தது. பிறகு, செப்டம்பர் மாதம் பாதுகாப்பை உயர்த்தி சில அப்டேட்டுகளை அளித்து மீண்டும் சோதனை செய்தபோது, 1 ஸ்டார் ரேட்டிங் கிடைத்தது. 2017-ம் ஆண்டு,  Latin NCAP சோதனையில் பிரேஸிலில் தயாரிக்கப்பட்ட க்விட், 3 ஸ்டார்களைப் பெற்றிருந்தது. இந்த கார் வெளியானது முதல் டிரைவர் ஏர்பேக், சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர் போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை டாப் வேரியன்டில் மட்டுமே கொடுத்துவருகிறது. ரெனோ நிறுவனம், அடுத்த ஆண்டு பாதுகாப்பு அம்சங்களைக் கூட்டி தனது இரண்டாம் தலைமுறை க்விட்டை விற்பனைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored
Trending Articles

Sponsored