அப்பா-அம்மா சம்மதத்தோட பைக் ரேஸ் ஓட்டணுமா?இளம் ரேஸர்களை உருவாக்குவதில் ஹோண்டா ரேஸ் அகாடமி இப்போது அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நேஷனல் சாம்பியன் ரெஹானா ரியா, ராஜீவ் சேது போன்ற டாப் ரேஸர்கள் வரை பலரும் ஹோண்டாவின் Ten10 அகாடமியில் பைக் ஓட்டியவர்கள். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ரைடர்களை, பயிற்சி கொடுத்து களத்தில் இறக்குகிறது ஹோண்டா. இந்த முறையும் அப்படித்தான். 

Sponsored


இந்தியா முழுக்க ஹைதராபாத், டெல்லி, போபால், புனே, கோவை, சென்னை உட்பட 8 நகரங்களில், திறமையானவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து வருகிறது ஹோண்டா. இந்த மாதம் ஜூலை 14-ம் தேதி, சென்னை மெரினா கோ-கார்ட் ரேஸ் டிராக்கில், இதற்கான தேர்வு நடக்கவிருக்கிறது. பொதுவாக, இளசுகளுக்கு மட்டும்தான் பைக் ரேஸில் ஆர்வம் இருக்கும். வீட்டுக்குத் தெரியாமல் ரேஸர் ஆனவர்கள்தான் நிறைய பேர். காரணம் - ரேஸ் ஆபத்தான விளையாட்டு என்ற ஒரு பொதுக் கருத்துதான்.

Sponsored


Sponsored


அதற்காகத்தான் எக்ஸ்பெர்ட்டான டிரெய்னர்கள் மூலம் ரைடர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது ஹோண்டா. உங்களுக்குத் திறமை இருக்கும் பட்சத்தில் உங்கள் பெற்றோரின் சம்மதத்தையும் ஹோண்டா பெற்றுத் தரும். யார் வேண்டுமானாலும் ஹோண்டாவின் ரேஸிங் அகாடமியில் பயிற்சி பெறலாம். உங்களிடம் இருக்கும் ரேஸ் மோகம் மட்டும்தான் இதற்குத் தேவை. ஹோண்டா அகாடமியில் ரேஸ் ஓட்டுவது என்றால் சும்மா இல்லை பாஸ்! வண்டியைக் கிளப்புங்க!Trending Articles

Sponsored