லாரி உரிமையாளர்கள் ரூ.50,000 வரை சேமிக்கலாம்... அசோக் லேலாண்டின் புதிய திட்டம்Sponsoredஅசோக் லேலாண்ட் மற்றும் ஹெச்பி பெட்ரோல் நிறுவனம் சேர்ந்து, லாரி உரிமையாளர்களுக்காக 'என்-தன்' எனும் ப்ரீபெய்டு கார்டை  அறிமுகப்படுத்தியுள்ளார்கள். லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், இந்த என்-தன் கார்டில் பணத்தைச் சேமித்துப் பயன்டுத்தலாம். இந்தியாவில் உள்ள 15,000-க்கும் அதிகமான ஹெச்பி பெட்ரோல் பங்குகளில் இந்த கார்டு ஏற்றுக்கொள்ளப்படும்.

என்-தன் கார்டு அறிமுகத்தின்போது பேசிய அசோக் லேலாண்டின் தலைவர் வினோத் தசாரி, "லாரி உரிமையாளர்கள், தங்களது வருமானத்தில் 70 சதவிகிதத்தை லாரிக்கு டீசல் போடுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் செலவுகளை மிச்சம்பிடிக்க முடிந்தால், லாரி உரிமையாளர்களின் வருமானம் சிறிதளவு உயரும் எனும் எண்ணத்திலேயே இந்த கார்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கார்டை, அனைத்து அசோக் லேலாண்டு ஷோரூம்களிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த கார்டைப் பயன்படுத்தி, டீசல் போடுவது மூலம் ஆண்டுக்கு 1.5 முதல் 3 சதவிகிதம் அல்லது குறைந்தபட்சம் 50,000 ரூபாய்க்கான எரிபொருள் செலவுகள் மிச்சமாகும்"  என்று கூறினார்.

Sponsored


ஹெச்.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், " ஹெச்பி நிறுவனம் நேரடியாகச் சலுகைகள் தரும் முதல் ப்ரீபெய்டு கார்டு இது. இதன்மூலம், தேவையான பணத்தை கேஷாகக் கொண்டுசெல்லவேண்டிய சிரமம் இல்லை. ப்ரீபெய்டு கார்டில் பணத்தை நிரப்பி டிரைவரிடம் கொடுத்தால் போதும். வங்கிக் கணக்குபோல பணத்தை சேமித்தாலோ அல்லது செலவு செய்தாலோ, உடனடியாக மொபைல் நம்பருக்கு மெசேஜ் வந்துவிடும். ஹெச்பி நிறுவனம் நேரடியாக ரிவார்டு தருவதால், இதுவரை எந்த கார்டிலும் இல்லாத அளவு இதில் ரிவார்டு பாயின்ட்டுகள் அதிகம். கார்டு வைத்திருப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கான ஆக்ஸிடன்ட் இன்ஷூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

Sponsored


மேலும், இந்த கார்டின் மூலம் டோல் கட்டணம் செலுத்துவதற்காக ஆர்.பி.ஐ-யிடம் பேச்சு நடத்திவருகிறோம். விரைவில் ஃபாஸ்ட் டேக் போல 'என்-தன்' கார்டில் டோல் கட்டணத்தைக் கட்டும் வசதியைக் கொண்டுவந்துவிடுவோம்" என்று கூறினார்.Trending Articles

Sponsored