புதுக்கோட்டையில் `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி!Sponsoredநம்மிடம் கையிருப்பாக உள்ள பணத்தை அப்படியே வைத்திருந்தால், ஆண்டுகள் செல்லச்செல்ல அந்தப் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே செல்லக்கூடும். எனவே, பணத்தை கையிருப்பாக வைத்திருப்பதே சேமிப்பு என்ற தவறான சிந்தனையை மாற்றி, முதலீடுசெய்வதே எதிர்காலத்திற்கான சிறப்பான சேமிப்பு என்பதை உணர வேண்டும். நமது  ஓய்வுக்காலம் இனிதாக இருக்க, ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை பணியில் சேர்ந்தவுடனே தொடங்க வேண்டும். முதலீட்டை ஒன்றில் மட்டுமே செய்யாமல் பல்வேறு விதமாகப் பிரித்து முதலீடுசெய்வதே சிறப்பான முதலீடாக இருக்கும்.   முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம், முதலீட்டைப் பல்வேறு சொத்துகளில் பிரித்துச் செய்வதுதான். இவையனைத்தும் முதலீட்டு மந்திரத்தின் வெவ்வேறு கூறுகளாகும். 

இதேபோல, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் சிறப்புகள் என்ன, அதில் எத்தனை வகை இருக்கிறது, ஒவ்வொரு வகை முதலீடும் யாருக்குப் பொருத்தமாக இருக்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்கவேண்டியவை எவையெவை, முதலீட்டுக்கான காலங்களை எப்படித் தேர்வுசெய்வது போன்ற சூட்சுமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் "மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்" நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும்.

Sponsored


இந்நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள்.

Sponsored


நாள்: 22.07.2018, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 am - 1.00 pm
இடம்: ஹோட்டல் சாரதா கிராண்டே, எண்:2740/1, கிழக்குப் பிரதான வீதி, புதுக்கோட்டை- 622 001

எஸ்.எம்.எஸ் மூலம் பதிவுசெய்ய NVPKB <space> பெயர் <space> ஊர், பதிவுசெய்து குறுஞ்செய்தி அனுப்பவேண்டிய எண்: 97909 90404 மற்றும் 562636.

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!
முந்துபவர்களுக்கே முன்னுரிமை!Trending Articles

Sponsored